வணக்கம்
2014ல் தடைகள்,ஏமாற்றங்கள், எதிர்ப்புகளைத் தாண்டி வெற்றி நடை போடத் தொடங்கியுள்ள வலைப்பூ வாசகர்களுக்கு இன்று நாம் தருவது ஓர் சிறுகதை. காதலின் பெயரால் வஞ்சிக்கப்பட்ட பலரின் வாழ்வின் நிகழ்வுகள் இதில் அடக்கம்.எமது வலைப்பூவின் வாசத்தை எம்மோடு பகிரும் அனைவருக்கும்
நல்வைழ்த்துக்கள்.
"குடைநிழலிருந்து குஞ்சரமூன்றோர்
நடை மெலிந் தோர்ஊர் நன்னிலும் நன்னுவர்!"
பட்டம் பதவி, செல்வம் என ஏகோபித்த வாழ்க்கை வாழ்ந்தோர் ஓர் நாள்
எல்லாம் இழந்து வீதிக்கு இறங்கலாம் என்ற உள் கருத்தை உடையது இப்
பாடல்,
இப் பாடலைப் பாடிக் கொண்டே அந்த வீட்டுப் படலையைத் திறந்து கொண்டு
உள்ளே வந்த அந்த நடுத்தர வயது மாது தன்னை அறிமுக்ப் படுத்திக் கொள்ள
எந்த பிரயத்தனமும் எடுத்துக் கொள்ளவில்லை. முற்றத்தில் கிடந்த
கதிரையில் அமர்ந்தார். அந்த காலை நேரம் முற்றம் கூட்டிக் கொண்டு நின்ற
செல்லம்மா வந்த பெண்ணின் பெயரைக் கேட்க யாதொரு முயற்சியும்
செய்யவில்லை. சித்தக் கலக்கத்தின் வெளிப்பாடு எனப் புரிந்து கொண்டு , மன
வலியோடு காத்திருந்தாள்!!!
கவி நயத்தோடு தொடர்ந்தாள்.
"சாவித்திரி சந்தித்தாள் தன் கதாநாயகனை, கல்லூரிக் காலம் கண்டதும்
காதலல்ல, கன காலம் தெரிந்தவர், மனதைக் கவரும் அழகன் , சிவந்த நிறம்
நல்ல உயரம் கவர்ச்சியான கண்கள். படிப்பில் ,பண்பில் யாரும் போட்டி போட
முடியாது என்றெல்லாம் ஏமாந்தேன்.
உரசி உரசி பேசும் போதுலகை மறந்தேன்.
அம்மா கேளுங்கோ, எனக்கு பதினெட்டு வயது அப்ப, ஏமார்ற வயசுதானே!
ஓடிப் போனேன், வீட்டில வேற சாதிப் பொடியனைக் கட்டி வைப்பினமே ?
இல்லைத்தானே ! நகை நட்டுகளையும் எடுத்துக் கொண்டு மன்னாருக்குப்
போயிட்டோம்.
சந்திரனுக்கு சொந்தக் காரர்கள் கனக்க அங்க இருந்தவை.
நல்ல சாதிப்பிள்ளை எண்டு மரியாதை எனக்கு.
கொண்டு போன நகைகளை ஒவ்வொண்டாக விக்க வேண்டி வந்தது.
சீவியத்துக்கு வழியில்லை , படிச்சு முடிச்சா தானே வேலை.
கடை போடப் போறன் எண்டு பத்துப் பவுண் பதக்கஞ் சங்கிலியைக்
குடுத்திட்டன் ; காச நான் கண்ணாலும் காணல்ல!
அம்மா நான் காசக் கண்ணாலும் காணல்ல!!
நாலஞ்சு வருசத்தில நான் நாராயிட்டன்.
பாலுஞ் சோறும் திண்டு வளந்த நான் ... பாணுக்கும்
வழியில்ல, சீனிக்கும் வழியில்ல .
ஊத்த உடுப்பும் , ஊத்த உடம்பும் எண்டு இருக்க....
உற்றார், பெற்றார் எல்லாம் கைவிட,
நாளாக நாளாக நலிவடைய...
ஏன் இப்படி எண்டொரு கேள்வி மனதின்
மூலையில் ஒலிக்க ஒலிக்க ........
சந்திரன்ட மாமி தாற தண்ணியைக் குடிக்க
தலை சுத்தி படுத்திடுவன்.
ஒரு வெள்ளிக்கிழமை சந்திரன்ட மாமி பவழம்
தண்ணிக்குள்ள பவுடர்தூள் கொட்டிறா,
பாத்தன் , அரை மயக்கம்; இருந்தாலும்
விழங்கிது ஏதோ பிழையெண்டு.
"அண்டு அந்த படலைலைத் திறந்து கொண்டு நடக்கிறன்,
எங்கயோ இடையில விழுந்திட்டன்."
"ஒரு hospitalல நான் படுத்திருக்கிறன் பாருங்கோ; நல்ல மனம் கொண்ட
யாரோ என்னை அங்க விட்டிருக்கினம் .அங்க தான் சொல்லிச்சினம்
கொஞ்சம் கொஞ்சமாய்ச் சாகிற மருந்து எனக்குத் தந்திருக்கினம் எண்டு!"
அம்மா அப்பா கைவிடுவினமே? ஆசானிக் எண்ட அநத மருந்து என்னைக் குழப்பிட்டுது.
"பசிக்குது அம்மா, புட்டு தாறீங்களே?"
"என்ஜினியர் வீட்டுப் பிள்ளை நான்......."
யானை மீது ,குடைக்கீழ் அமர்ந்து, ஊர்வலம் வந்த செல்வந்தர் பலர்
நடக்கவும் சகதியற்று,
வறுமையின் கோடியில் மாண்டதை நாம் அறிவோம்!!!
.