வணக்கம்
வெளி நாடுகளில் வசிக்கும் அனைவரும் நேர்மையாக உழைத்து வாழ்பவர்களல்ல. இங்குள்ள சலுகைகளைத் துஷ்பிரயோகம் செய்பவர்கள் பலர். அப்படியான ஒருவரை இங்கே காண்பீர்கள்.
நல்ல
அழகான பூந்தோட்டம் ஒன்றின்
நடுவே போய்க் கொண்டிருக்கின்றேன்.
நான்
எங்கேயிருக்கின்றேன் என்று
நிச்சயமாக ஒன்றும் தெரியவில்லை.
அந்த
நீர் வீழ்ச்சியிலிருந்து
நீர் கொட்டோ கொட்டென்று
கெட்டுகின்றது.
இந்த
பூவுலகின் அதிஅற்புதம் என்று
சொல்லக்கூடிய ஒரு அம்சம்
இந்த நீர்வீழ்ச்சிகள்.
யாரது
கற்பனையாகவிருக்கிலாம் ?
இப்போதைக்கு
எதுவும் சொல்வதுக்கில்லை.
இதையொல்லாம்
கடந்து போகும்போது ஒரு மாளிகை
வாசலில் என்னைச் சந்திக்க
ஒருவர் காத்து நிற்கின்றார்,
அல்லது
அவரைத்தான் நான் சந்திக்க
வேண்டும் என்பது எனக்குத்
தெரிகின்றது.
நேராக
என்ன அழைத்துக் கொண்டு உள்ளே
செல்கின்றார் அந்த அவர்.
உள்ளே
என்னைக் கண்டதும் உண்மையின்
உருவம் என நம்பும்படியான ,
கம்பீரமான
ஓர் மனிதர் வருகின்றார்.
என்னை
எந்த விபரமும் கேளாது வாழ்
நாள் முழுவதும் செய்த தொழில்கள்
என்ன என்றார் .
இது
என்ன நான் ..நான்...
இறந்துவிட்டேனா
? என்னை
சித்ரககுப்தனார் கேள்வி
கேட்கின்றாரா ?
மரணம்,
இவ்வளவு
விரைவில் வரும் என்று நான்
நினைத்திருக்கவில்லையே.
என்
சிந்தனை ஓட்டம் தடைப்பட்டது
.அட
நான் பதில் சொல்ல வேண்டிய
கட்டத்தில் அல்லவா நிற்கின்றேன்.
வேலை
..வேலை...நான்.... நான்.... உளருகின்றேன் ,
தெளிவாகத்
தெரிகின்றது.
ஆனாலும்
என்ன செய்ய,
கேட்ட
கேள்வி அப்படி என்னை உளரவைத்தது.
நான்
வேலை செய்துள்ளேன்,
1979ல்
ஆறு மாதம் ஒரு பரீஸ் ரெஸ்டோரெண்டில்
வேலை செய்தேன்.
பிறகு
அதனை ஒருவாறு குழப்பி,
முதலாளியை" பிச்சை வேண்டாம் நாயைப் பிடி" என்ற கட்டத்துக்கு கொண்டு
சென்றீர்.
அது
என்ட பிழையில்லை,
முதலாளி
,கூட
வேலை செய்ற அடையான் ,
தவறு
மன்னிக்கவும்,
அல்ஜீரீக்காரன்,
பாவம்
எழுத வாசிக்கத் தெரியாதவன்,
அவனை
ஏமாத்தினான்,
சம்பளத்தை
பொய்க் கணக்குக் காட்டிக்
குறைச்சுக் குடுத்தான்.
எனக்குப்
பொறுக்கயில்லை!
பொங்கியெழுந்தீர்,
முதலாளி
வெளிக்கிடுத்தினான்,
நரம்புத்தளர்ச்சியால்
பாதிக்கப்பட்டுள்ளார்,
கொஞ்சம்
மூளை சுகமில்லை என்று
சந்தேகிப்பதாக உறுதிப்படுத்தினான்.
ஓம்
ஓம்,
அது
அவன்ற பிழை ,
நான்
கேக்கயில்லை
'ஆம், ஆம்' ஆனால் உமக்கு வேலையில்லாதவர்களுக்கான
சலுகைப் பணம் கிடைக்கத்
தொடங்கியது.
உண்மைதான்
.
அந்த
அல்ஜீரீக்காரன் தொடர்ந்து
வேலை செய்கிறான்.
ஓம்
ஓம்,
நான்
அவனுக்குச் சொன்னனான் உன்னை
ஏமாத்துறான் பத்துரோன்
(முதலாளி),
நான்
உனக்குச் chomage
(வேலை
இல்லாதவர்களுக்கு வழங்கப்படும்
உதவிப் பணம் )வாங்கித்
தாறன் என்று,
அதுக்கு
என்னில நம்பிக்கையில்லை
கஷ்டப்பட்டு வேலை செய்யுது.
ஒஹோ
... தொடர்ந்து
வேலை செய்யிற அவன் பைத்தியம்.
நான்
அப்படிச் சொல்லல்லை....
விஷயம்
பிழைக்கிற மாதிரி இருக்கிறது.
சரி, அதுக்குப் பிறகு என்ன நடந்தது?
ஒரு
மூன்று வருசம் வேலை
தேடிக்கொண்டிருந்தனான்.
வேலையொன்றும்
கிடைக்கவில்லை.
இல்லை.
பிறகு
1983லிருந்து
,ஐப்பசி
மாதம் எண்டு நினைக்கிறன்
,ஒரு
மூண்டு மணித்தியால வேலை
கிடைச்சுது.
அவ்வளவுதான்.
அதில
ஒரு 2000
பிராங்
கிடைச்சுது,
அப்ப
பிராங்; 2000 பிராங்
ஒரு ஆளுக்கு வடிவா போதும்.
பின், நீர் மிகுதி நேரம் என்ன
செய்தீர் ?
என்னத்
தேடி எந்த நாளும் சிநேகிதர்மார்
வந்து கொண்டே இருப்பினம்.
ஏன் ?
ஏன்னெண்டால்
அவைண்ட எல்லாப் பிரச்சனைக்கும்
என்னட்டத்தான் வருவினம்
தர்மம்,
சமயம்,
தத்துவம்,
எல்லாத்தையும்
விட அரசியல்,
எங்கட
சனங்களுக்கு அரசியல் சுத்தமாத்
தெரியாது,
கள்ளர்
காடையர் சொல்லுறதையெல்லாம்
நம்பிக் கொண்டு வோட்டுப்
போடுதுகள்.இதுகளுக்குப்
புத்தி சொல்ல வேண்டும்,
இதுகளோட
அரசியல் ஞானத்தை வழக்க வேண்டும்
எண்டு எனக்குத் தீராத ஆசை.
பின்னர்
அந்த மூன்று மணித்தியால
வேலையைத் தொடர்ந்து செய்து
கொண்டிருந்தீர்.
இல்லை,
இல்லை,
மூண்டு
மணித்தியாலத்தில முப்பது
மணித்தியால வேல செய்விக்கப்
பாத்தான் Chef
. நானோ
ஏமாறிறவன்,
அங்க
(B)பயூரோல
வேல செய்த ஒரு வெள்ளை இந்தியா
போய் வந்தவர்,
இந்தியாவப்
பத்தி கேள்விகள் கேட்டுக்
கொண்டேயிருப்பார்.
அவரோட
சிநேகிதம் பிடிச்சன்,
பகடி
என்னெண்டா அவர் தான்
கிளீனிங்குக்குப் பொறுப்பானவர்.
நான்
அவரோட கதைக்கிற நேரத்தில
பூவல் பத்ரோன்(Poubelle- குப்பை Patron- முதலாளி) கிளீனிங்
சாமான்கள் வீட்டையிருந்து
கொண்டரச் சொல்லுறான் எண்டு
சொல்லிட்டன்.
அவன்
செவ்(chef) வைக் கூப்பிட்டு
விசாரித்தான்.
செவ்
இதை பூவல் பத்ரோனிட்டசொல்ல, அவன் என்ன நிப்பாட்டிட்டான்.
பழையபடி
சும்மாயிருந்து காசெடுத்தீர் !
இல்லை
,இல்லை
பத்ரோன்(முதலாளி)
சைன்
பண்ணேல்ல ,
காசெடுக்கேலா.
"சந்திரன்
என்ட ரூம் மேட் பேப்பர் இல்லாம
இருந்தான் ,பின்ன
என்ட பேப்பரைக் குடுத்தனான்
,
ஒரு
ஆறு வருஷம் ரெஸ்டைரன்ட் வேல
செய்தான்,
அது
நெருப்பு பிடுச்சுது,
பிறகென்ன
chomage
technic சும்மா
இருந்து காசு எடுக்கிறன்".
இல்லை
இல்லை பிறரது உழைப்பைச்
சுரண்டிச் சீவிக்கிறீர்.
இதிலென்ன
சுரண்டல்,
வேல
இல்லாத ஆக்களுக்கெண்டுதான்
அந்த திட்டத்தை வைச்சிருக்கினம்.
ஏதொவொரு
காரணத்தால் வேலையில்லாமல்
போகும் பொழுது வாழ்வதற்குத்தான்
அரசாங்க உதவி.
இப்படிச்
சுரண்டி வாழ்பவருக்கு என்ன
தண்டனை தெரியுமோ.... ?
ஐயோ
போதுமடா சாமி.....
திடுக்கிட்டு
கண் திறக்க ஆ கண்டது
கனவல்லவா....காத்தாய்
கந்தா.
"கர்த்தரே
எனக்கேன் இப்படியொரு கனவு. »
மனச்சாட்சி
ஒலித்துக்கொண்டேயிருக்கும்
,அது
உண்மையைப் பேசிக் கொண்டேயிருக்கும்
என்பது இதுவோ !