வணக்கம்
எதற்கெடுத்தாலும்
அந்தக் காலத்தில் அப்படியில்லை
என்று ஏதோ அந்தக்காலத்தில்
இவ்வுலகம் சொர்க்கமாயிருந்தது
என்பது போல் பேசுவோரை எங்கும்
எப்போதும் காணலாம்.
ஆனால்
அன்றும் இன்றும் சில பிரச்சனைகள்
ஒரே மாதிரியாகவேயிருந்துள்ளது.
இன்று
பிள்ளைகள் பெற்றோரை விட்டு விட்டு
வெளிநாடுகளுக்குப் போய்விடுகின்றனர்.
இறுதிக்
காலத்தில் பெற்றோர் தனியாகத்
துன்பப்படுகின்றனர் என்ற
குற்றச்சாட்டு பலமாக உள்ளது.
ஆனால்
பத்தொன்பதாம் நூற்றண்டில்
ஒரு தாய் குருட்டுத்தனமான
தாய்ப்பாசத்துக்கு எடுத்துக்
காட்டாக வாழ்ந்துள்ளாள்.
டாக்டர்
திரு உ.வே.
சாமிநாதய்யர்
அவர்கள் அத்தாயை தனது" நினைவு
மஞ்சரி"என்றநூலில் படம்
பிடித்துக் காட்டியுள்ளார்.
கும்பகோணத்தில்
நான் வேலை பார்த்து வந்த
காலத்தில் அங்கே ஒரு வக்கீல்
குமாஸ்தா வாழ்ந்து வந்தார்.அவர் சுறுசுறுப்பும் முயற்சியும்
உள்ளவர்.அவருடன்
அவருடைய தாயும் இருந்தாள்.அவள்
தன் குமாரரிடம் மிக்க அன்புள்ளவள்
.தன்
பிள்ளை சாப்பிடுவதற்கு முன்
உணவு கொள்ள அவளுக்கு மனம்
வருவதில்லை.
குமாஸ்தாவும்
தன் அன்னையிடம் அனபுடையவராகவே
இருந்தார்.
அநேகமாக
குடும்பங்களில் ஒற்றுமை நிலை
எப்போதும் ஒரேமாதிரியாக
இருப்பதில்லை.
கல்யாணம்
ஆவதற்கு முன் உள்ள அமைதியும்,
ஆன
பின்பு வீட்டில் உண்டாகும்
கலகங்களும்,அந்தக்
கலகங்களைப் பெண்கள் விருத்தி
செய்வதும் புதுமையான விஷயங்கள்
அல்ல.
முன்னே
குறித்த வக்கீல் குமாஸ்தாவுக்கு
விவாகம் ஆயிற்று.
அவருடைய
மனைவி வீட்டிற்கு வந்தாள்.
அன்று
முதல் அந்த வீட்டில் முன்பு
தடையில்லாமல் வளர்ந்து வந்த
அன்பும் அமைதியும் கலக்கத்தை
அடைந்தன.
தாயினிடம்
உள்ள குறையோ,
வந்த
பெண்ணிடம் உள்ள குறையோ,இருவருடைய குறைகளுமேயோ தெரியவில்லை;
அந்த
வீட்டில் மூவரும் சேர்ந்து
சந்தோஷமாக இருக்க முடியவில்லை.
மாமியாருக்கும்
மருமகளுக்கும் மனப் பொருத்தம்
ஏற்படவில்லை.
பகைமைதான்
உண்டாயிற்று:
அது
வர வர விருத்தியடைந்தது.
அந்தப்
பெண்ணுக்கு அதிகாரம் செலுத்த
வேண்டும் என்ற ஆசை அதிகமாக
உண்டாயிற்று.
தன்
கணவன் இருக்கும் போது
ஒருவிதமாகவும்,
இல்லாதபோது
வேறுவிதமாகவும் மாமியாரை
நடத்தி வந்தாள்.இதுவரையில்
நாம் இந்த வீட்டில் நடத்தி
வந்த அதிகாரத்தை இந்தச் சிறு
பெண்ணா தடுப்பது என்ற ரோஷம்
அந்தக் கிழவிக்கு உண்டாயிற்று.
அப்புறம்
யுத்தம் உண்டாவதன்றி அமைதிக்கு
வழி ஏது?
வீட்டுக்காரரிடம்
இரண்டு பேர்களும் முறையிட்டனர்.
ஒவ்வொருவரும்
தம் தம் கடசியே நியாயமானதென்று
தோன்றும்படி சொல்லினர்.அவருக்கோ
மனைவியின்மேல் ஆசை ,அன்னையின்பால்
அன்பு.
இரண்டுக்கும்
இடையில் இருந்து தவித்தார்.
"இந்தக்
கலகத்தை வளரவிடக்கூடாது
"என்று
மட்டும் நினைத்தார்.
"இனிமேல்
உங்கள் அம்மா இந்த வீட்டில்
இருந்தால் நான் இருக்க முடியாது.
என்னை
எங்கள் வீட்டில் கொண்டு போய்
விட்டு விடுங்கள்,
என்றைக்கு
உங்கள் அம்மாவை அனுப்புகிறீர்களோ,
அன்றைக்கு
என்னை அழைத்துக் கொண்டு
வரலாம்"
என்று
மனைவி கண்டிப்பாக உத்தரவு
போட்டாள்.
வீட்டுக்காரர்
ஆசைக்கு அடிமைப்பட்டவர்;மோகத்தினால்
தைரியத்தை இழந்தவர்.தன்னுடைய
வீட்டிலே தனியாக ஓரிடத்தைப்
பிரித்துக் கொடுத்து அங்கே
தம் தாயை இருக்கச் செய்தார்,
அவள்
தனியே சமைத்துச் சாப்பிட்டு
வந்தாள்.
இந்த
ஏற்பாடுகூட அவர் மனைவிக்குப்
பிடிக்கவில்லை.
"என்
கண்ணில் படவே கூடாது"
என்று
கூப்பாடு போட்டாள்.தனியே
ஒரு வீட்டில் தம் தாயை இருக்கச்
செய்து வேண்டிய சாமான்களை
அவர் அனுப்பி வந்தார்.
கிழவி
முணுமுணுத்துக் கொண்டே
தனிமையாக இருந்து வரலானாள்.
நாளடைவில்
இந்த ஏற்பாடும் மனைவியின்
உபதேசத்தால் கைவிடப்பட்டது
,
கிழவிக்குச்
சாமான் கொடுப்பதை குமாஸ்தா
நிறுத்திக் கொண்டார்.கிழவி
தன் தலையெழுத்தை நொந்து கொண்டு
கும்பகோணத்திலேயே தெருத்தெருவாக
அலைந்து உபாதானம் எடுத்து
வயிறு வளர்க்க ஆரம்பித்தாள்.
”
நான்
எத்தனையோ கஷ்டப்பட்டு அவனை
வளர்த்தேன்.
இப்போது
அவனுக்கு முன்னாலேயே பிச்சை
எடுத்துச் சாப்பிடும்படி
ஆகிவிட்டது;
தலைவிதி"
என்று
அழுது கொண்டே அவள் உபாதானம்
வாங்கினாள்.
அவளது
நிலையைக் கண்டு ஊராரெல்லோரும்
இரங்கினார்கள்.அவளுடைய
பிள்ளையைத் தூற்றாதவர்
யாருமில்லை.அவரோ
காவேரியில் விடியற்காலம்
ஸநானம் பண்ணுவதிலும்.
முறைப்படி
அனுஷ்டானம் பூஜை செய்வதிலும்
தவறுவதில்லை.
"அப்படியாவது
சமர்த்தாய்ப் பிழைத்தால்
நல்லதாயிற்றே ;
அவளுக்கு
ஒன்றுமே தெரியாதே;
அவனைக்
கெடுத்துக் குட்டிச்சுவராக்கிவிடுவாளே
"என்று
கிழவி இரங்குவாள்.
அவளுடைய
அன்பு குறையவில்லை.
ஒரு
சமயம் குமாஸ்தாவுக்கு ஜ்வரம்
வந்தது.
மிகவும்
கடுமையாக இருந்தது.அவருடைய
தாய் அதைக் கேள்வியுற்றாள்.
அவள்
நெஞ்சம் படபடத்தது.பெற்ற
மனம் பித்து அல்லவா?வீட்டிற்குள்
போய்த் தன் பிள்ளையைப் பார்க்க
வேண்டும் என்ற ஆவல் அவளுக்கு
உண்டாயிற்று.
உள்ளே
போனால் தன் மருமகள் ஏதாவது
அவமானப்படுத்தினால் என்ன
செய்வது என்ற பயம் வேறு
இருந்தது;
அப்பால்
துணிவோடு அந்த வீட்டிற்குச்
சென்றாள்.
திண்ணையில்
உட்கார்ந்தாள் .உள்ளே
போக அவளுக்கு மனம் துணியவில்லை.
பயம்
பாதி;
'அவள்
முகத்தில் விழிக்கக்கூடாது'
என்ற
எண்ணம் பாதி.
உள்ளே
போய் அவள் பிள்ளையைப் பலர்
பார்த்து வந்தனர்.அவர்களைப்
பார்த்துப் பார்த்து "இப்பொழுது
எப்படி இருக்கின்றது "
என்று
கேட்டுக் கொண்டேயிருந்தாள்.
"உள்ளே
வந்து பாரேன்"
என்று
சிலர் அழைத்தார்கள்.
"நான்
எதற்கு வரவேண்டும் ?அவள்தான்
இருக்கிறாளே,
அவளிடம்
சொல்லுங்கள்;
அவனுக்கு
வேண்டியதைப் பண்ணிப்போட
அவளுக்குத் தெரியாது.மருந்து
குழைத்து கொடுக்கத் தெரியாது.மருந்து
காரமாக இருக்கும்.
தேன்
நிறையவிட்டுக் குழைத்துக்
கொடுக்கச் சொல்லுங்கள் "என்று
சொன்னாள் கிழவி.
தன்
பிள்ளைக்கு அபாயம் ஒன்றும்
இல்லையென்று தெரிந்து கொண்ட
பிறகே,
அன்று
அவள் உபாதானம் எடுக்கச்
சென்றாள்.
அவருக்கு
உடல் நிலை வரவர குணமாகிக்
கொண்டிருந்தது .ஒவ்வொரு நாளும்
அந்தக் கிழவி அந்தவீட்டுத்
திண்ணைக்குப் போய் அயலார்
மூலமாக விஷயத்தை விசாரித்து
அறிந்து வந்தாள்.
ஒரு
நாள் நான் அந்த தெருவழியே
சென்று கொண்டிருந்தேன்.
கிழவி
திண்ணையில் இருந்தாள் .அங்கே
வந்த ஒருவரிடம் அவள் பேசிக்
கொண்டிருந்தாள், "அவனுக்கு
அதிகக் காரம் கூடாது.ஜ்வரம்
கிடந்த உடம்பு வாய்க்கு
இதமாகவும் பத்தியமாகவும்
பண்ணிப் போடச்
சொல்லுங்கள்,மோர்க்குழம்புபண்ணினால்
அவள் தேங்காய் அரைத்துவிடமாட்டாள்.
நிறைய
அரைத்துவிடச் சொல்லுங்கள்.அப்படிச்
செய்கிறதனால் அவள்அப்பன்
வீட்டுச் சொத்து ஒன்றும்
குறைந்துவிடாது.
நான்தான்
மகாபாவி.
அவனுக்கு
ஏற்றபடி பண்ணிப் போடக்
கொடுத்துவைக்கவில்லை”.
என்று
அவள் கூறியது என் காதில்
விழுந்தது.
"நான்தான்
மகாபாவி"
என்ற
போது அவளுக்கு பேசமுடியவில்லை;
குரல்
தடுமாறியது.அந்தத்
தடுமாற்றத்தில் அவளுடைய
அன்பின் நிலையும் பெற்ற மனதின்
இயல்பும் வெளிப்பட்டன.
அந்த
ஒரு கணத்தில் என் கால்கள்
கூட மேலே செல்லாமல் தடுமாறின.
"மகா
பாவி"
என்று
இவள் சொல்லிக் கொள்கிறாளே,
"யார்
பாவி"
என்ற
என்னை நானே கேட்டுக்கொண்டு
மேலே நடந்து சென்றேன்.
நன்றி
நினைவு மஞ்சரி (முதற்
பாகம்)
மகாமகோபாத்தியாய
உ வே.சாமிநாதையரவர்கள்