Monday, 30 December 2013

கட்டாயத் திருமணங்கள்


வணக்கம்

வலைப் பூ வாசகர்களுடன் மீண்டும் திருமணங்கள் பற்றிப் பேசவேண்டிய சூழ்நிலையில் நாம் உள்ளோம். ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களிடையே நடக்கும் திருமணங்களில் ஏற்படும் மிக விரைவான மணமுறிவு நம்மைக் கலங்க வைக்கின்றது. திருமணம நடந்த அன்று பிற்பகலே காணாமல் போய்விட்ட மணப் பெண், ஒரு வாரத்தில் ஓடிப் போய்விட்ட பெண், சில மாதங்களில் கைவிட்ட பெண் , திருமணம் பதிவு செய்யப்பட்டது ஆனால் திருமணம் நடக்கவேயில்லை .ஏனெனில் பெண்ணுக்குச் சம்மதமில்லை அல்லது இதற்கு எதிர்மாறாக ஆண் இப்படியான இக்கட்டான சூழ்நிலைகளைச் சந்தித்திருப்பார்.


ஏன் இந்த நிலை ? நாம் பேசி ஒழுங்கு படுத்தும் திருமண முறைகளில் ஏதோ ஒரு ஒழுங்கீனம் உள்ளது என்பது தெளிவு. இற்றைக்கு இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த திருமணங்களைப் போல் இப்போது பேசி நிறைவேற்ற முடியாது என்பதை நாம் உணரவில்லை எனத் தோன்றுகின்றது.

வேறு வேறு நாடுகளில் வேற்றுக் கலாச்சாரங்களில் வளரும் புதிய தலைமுறை ங்கோ ஒரு கண்காணாத நாட்டில் வளரும் ஒரே சாதியைச் சேர்ந்தவர், அல்லது குறிப்புப் பொருந்தியுள்ளது, நமக்குத் தெரிந்த குடும்பத்தவர் , இன்னும் வசதியாக வாழ்கிறார்கள் என்பதற்காகத்
திருமணம் செய்யச் சம்மதிக்க மாட்டார்கள். அப்படிச் செய்தாலும் அவர்களால் ஒற்றுமையாக வாழ முடியாது.


இதை உணராத நாம் பிள்ளைகளை வற்புறுத்தி நமக்குப் பிடித்தமான ஒருவரை தெரிவு செய்து ஏக தடபடலாகத் திருமணம் செய்து வைக்கும் போது மறுக்க முடியாத இளம் சந்ததியினர் ஏற்றுக் கொள்கின்றனர்; அதே வேகத்தில் விட்டு விட்டு ஓடுகின்றனர். முன் பின் காணாத ஒருவரைப் பெற்றோர் மணம் முடிக்க வற்புறுத்தும் போது ,ர்களின் ஷ்டங்களை உணர்ந்து திருமணம் செய்து, அந்த வாழ்க்கைச் சிக்கல்களை சுமந்து , கொண்டிழுத்த, தலைமுறையை இனிக் காண முடியாது!


தத்தம் பிள்ளைகள் தத்தமக்கு விரும்பியவரை மணந்து வாழ்வதை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு நாம் , இலங்கைத் தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளோம். கூடுமானவரையில் பிள்ளைகளுடன் கலந்து ஆலோசித்து , அவர்களுக்குப் பிடித்தமான துணைவரைத் தெரிந்து அல்லது அவர்கள் தமக்குப் பிடித்தமான ஒருவரைத் தெரிவு செய்ய வேண்டிய ஆலோசனைகளைக் கூறி வழி நடத்துவது நன்று எனலாம்.


விவாக ரத்தானவர் என்ற பட்டத்தை குடும் வாழ்வில் ஈடுபடாமலே சுமக்கும் துர்ப்பாக்கியத்தை இளம் சந்ததியினருக்கு நாம் அளிக்க வேண்டாம்.



இந்த புதிய சிக்கல்களைக் கழைய முயற்சிப்போமா, புதிய பாதையில் பயணிப்போமா!

தொடர்பு கொள்க kalyanam.cheyugal@gmail.com