Monday, 9 December 2013

அடுத்தகட்டம் - கட்டுரை


வணக்கம்


20ம் நூற்றாண்டின் ஆரம்பங்களில் பால்ய விவாகங்கள் தடை செய்யக் கோரி சமூக ஆர்வலர்கள் நூற்றுக்கணக்கில் பாரதத்தில் போராடினார்கள். ஆனால் இத்தகைய போராட்டங்கள் நமது நாட்டில் நடந்ததாக எத்தகைய பதிவுகளும் இல்லை. இன்று இந்தியாவில் இந் நிலைமை குறிப்பிடத்தக்க அளவில் மாறியுள்ளது. இதற்காக அந்த நாடு கண்ட போராட்டங்களை அறிய வேண்டுமானால் மகாகவி பாரதியார், பாரதிதாசன், கல்கி, காண்டேகர் அநுத்தமா, லஷ்மி போன்ற இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப கால எழுத்தாளர்களின் படைப்புகளை வாசித்தல் வேண்டும்.

இன்று நமது தமிழினம் இத்தகையதொரு சமூகப் பிரச்சனையை இன்னொரு கோணத்தில் சந்தித்துள்ளது. தமிழினத்தின் போராட்டத்தால் உருவான இளம் விதவைகன், துணையை இளந்தவர்கள் என ஏராளமான தமிழர்கள் உலக நாடுகள் எங்கும் வாழ்கின்றனர்.

வேறு வேறு நாடுகளுக்குப் போனவர்கள் அந்தந்த நாடுகளின் கலாச்சாரத்துக்கு அமைய வாழப் பழக்கப்பட்டவர்களால் இன்னொரு நாட்டில் வாழ்ந்து பழகியவர்களுடன் தமது வாழ்க்கையை இணைத்துப் பார்க்க முடியவில்லை. இதனால் கலைந்த குடும்பங்கள் பல. நாற்பது வயதுக்குப் பின்னர் வாழ்க்கையைப் புதுப்பித்துக்கொள்ள சில சமயங்களில் ஆண்களுக்கு முடியும் ஆனால் பெண்களுக்கு இத்தகைய வயதில் திருமணத்தை எதிர்பார்க்கும் பெண்களை நோக்கி சமூகம் ஒரு ஏளனக் கண்ணைட்டத்தை எறிகின்றது. அதிலும் விதவை என்றால் மேற்கொண்டு பேசவே தேவையில்லை.

இந்த நிலை மாறவேண்டும் என்பது எமது நோக்கம். திருமணம் என்பது வெறும் உடலைச் சார்ந்த விடயம் மட்டுமல்ல.. இரண்டு நண்பர்கள் சேர்ந்து ஒன்றாக தேநீர் அருந்தும் போது உண்டாகும் மகிழ்ச்சி எத்தகையதோ அத்தகையதே ஒரு கணவனும் மனைவியும் சேர்ந்து வாழும்போது உண்டாகும் இன்பம். இதை ஏன் தவறாக எடைபோட வேண்டும் என்று தெரிய வில்லை.

இநத கண்ணோட்டத்தில் நாம் கண்ட மதிவாணன் ஐம்பதை நெருங்குகின்றார். அவர் மனைவி புற்று நோயால் மரணமாகி சில வருடங்கள் ஆகின்றன.அவருக்கு இபண்டு பிள்ளைகள். தனிமையை தாங்கிக் கொண்டு பிள்ளைகளை வளர்த்து வருகின்றார்.

மாதங்கி இலங்கையில் பொறியியல் பட்டம் பெற்றவர் , சொந்தத்தில் செய்த திருமணம் சொற்ப மாதங்களில் இரத்து செய்யப்பட்டது. இரண்டாவது திருமணம் நோயாளி ஒருவருடன் நடந்தது. பத்து வருடங்களில் அவர் மரணமானார். ஆக மீண்டும் தனிமை. இந்த இருவரையும் ஒரே சமயத்தில் சந்தித்தோம்.

இருவரும் பொறியியல் துறையில் கல்வி கற்றவர்கள், துணையை இழந்தவர்கள், ஒரே வயதை நெருங்குபவர்கள், ஆகவே ஏன் இவர்கள் இணைந்து வாழக்கூடாது என எண்ணிணோம். இருவரையும் அறிமுகப்படுத்தினோம். இந்த வயதில் இன்னொரு வாழ்க்கையா எனத் தயங்கியவர்களை உற்சாகப்படுத்தினோம். உரையாடத்தொடங்கியவர்களின் முகத்தில் சந்தோஷத்தின் அடையாளம்

அவர்கள் குதூகலம் நமக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இந்த அடுத்த கட்டத் தாண்டுதலை சமூகம் நல்ல கண் கொண்டு பார்க்க வேண்டும். தனிமையில் திண்டாடுபவர்களின் வாழ்க்கையில் இன்பம் வீசச் செய்ய வேண்டும்.

இத்தகைதொரு சேவையைச் செய்யும் பாக்கியம் கிடைத்தையிட்டு எமது வலைப்பூ புளகாங்கிதம் அடைகின்றது.

இளம் விதவைகளை எண்ணி அவர்களுக்காக மகாகவி பாரதியார் பாடிய "நல்லதோர் வீணை செய்தே "என்ற பாடலை இங்கு தருகின்றோம் !