Monday, 25 November 2013

தென்னாலிராமன் விகடகவி- திரைப்பட அறிமுகம்




அரசர்களின் ஆட்சியில் அரசவையில் விகடகவிகள் இருந்துள்ளனர். விகடகவி என்ற வார்த்தையே அற்புதமானது. இடமிருந்து வலம் வாசித்தாலும் வலமிருந்து இடம் படித்தாலும் ஒரே வார்த்தைதான். இப்படித் தமிழில் எத்தனை வார்த்தை இருக்க முடியும். அது மட்டுமல்ல இவ் வார்த்தையின் கருத்தும் அவ்வாறு ஒரு அற்புதமான கருத்தே. விகடமாக, கேளிக்கையாக , அதே சமயம், அர்த்தபுஷ்டியாக , புத்திசாலித்தனமாக, அரசியலில் ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வு காண்பவர்களாக இருந்தனர் இந்த விகடகவிகள். இவர்கள் அரசரால் நியமிக்கப்பட்டனர். இவர்களது வேலை அடிப்படையில் அரசரை மகிழ்ச்சிப்படுத்துவது. னால் இந்திய வரலாற்றில் மிகச் சிறந்த மேதைகளாக இந்த விகடகவிகள் இருந்துள்ளனர்.

னோ இத்தகைய விகடதகவிகளைப் பற்றிய செய்திகள் இலங்கை வரலாற்றில் இல்லை.

னால் தென்னாலிராமனைப் பற்றி இலங்கையர் பலரும் அறிந்திருப்பர். காரணம் எமது ஆரம்பக் கல்வி பாடப்புத்தகங்களில் பலப்பல சிறுகதைகள் தென்னாலிராமனைப் பற்றி எழுதப்பட்டிருந்தன.

நாம் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். அது , நகைச்சுவையாகப் பேசக்கூடியவர்கள் எப்போதும் அதிபுத்திசாலிகளாக இருப்பர். அத்தகைய புத்திசாலிகளாலேயே நகைச்சுவையாகப் பேச முடியும்.

தென்னாலிராமன் என்றழைக்கப்படும் விகடகவி விஜயநகர சாம்ராச்சியத்தில் கிருஷனதேவராயர் சபையில் இருந்தவர். இந்த விஜயநகர சாம்ராச்சியம் தற்போதுள்ள ஆந்திரப் பிரதேசத்தில் பெல்லாரி என்ற இடத்தில் அமைந்திருந்த பரந்த புகழ் பெற்ற இராச்சியம் ஆகும்.

இந்த இராச்சியம் 14ஆம் நூற்றாண்டு தொடக்கம் 16ஆம் நூற்றண்டு வரை பெரும் வல்லரசாக விளங்கியது. இதில் விகடகவியாக விளங்கிய தென்னாலிராமன் கதை 1950கலில் படமாக்கப்பட்டது. த் திரைப்படத்தில் திரு சிவாஜிகணேசன் அவர்கள் தென்னாலிராமனாக நடித்துள்ளார்.

ரலாற்றுத் திரைப்படங்கள் வெளிவராத இக் காலத்தில் பழைய வரலாற்றுத் திரைப்படங்கள் அநேக வரலாற்றுத் தகவல்களை நமக்கு அளித்து நம்மை விப்பில் ஆழ்த்துகின்றன.

ஒரு விகடகவி எவ்வாறு தன் யிரையும் பொருட்படுத்தாது இராச்சியத்தின் நன்மைக்காகவும் மன்னரைக் காப்பதற்காகவும் பாடுபடுகின்றான் என்பதை சுருக்கமாகவும் சுவையாகவும் டுத்துக்காட்டுகின்ற இத் திரைப்படம் பார்க்க வேண்டிய திரைப்படம் என நாம் கருதியதால் இது பற்றி எழுதத் துணிந்தோம். இத் திரைப்படத்தை யூ டியுப்பில் காணலாம்.