பிரபஞ்சன்
என்ற புனைப் பெயரில் எழுதும்
சாரங்கபாணி
வைத்தியநாதனின்"
வானம் வசப்படும்" என்ற வரலாற்று
நூலை உங்களுக்கு அறிமுகம்
செயகின்றோம்.
இந்த
நூல் பிரஞ்சு நாட்டார்
பாண்டிச்சேரி என்றழைக்கும் புதுச்சேரியை ஆண்ட காலத்தில்
நடந்த கதையைச் சொல்கின்றது.
இக்
கதை 1740க்கும்
1750க்கும்
இடைப்பட்ட து.
பாண்டிச்சேரியில்
பிரஞ்சு ஆட்சிக்காலத்தில்
துய்ப்ளெக்ஸ் துரை (Dupleix)
என்பவர்
ஆட்சி
புரிந்தார்.
இக்
கவர்னரிடம் ஆனந்தரங்கம்பிள்ளை
என்பவர் காரியதரிசியாகக்
கடமையாற்றினார்.
இவர்
ஓர் நாட்குறிப்பை எழுதியிருந்தார்.
இந்த
நாட்குறிப்பின் உதவியுடன்
எழுதப்பட்டது இந் நாவல்.
எனவே
இந் நாவலில் அக் காலத்தைய
அன்றாட சம்பவங்கள் பல
குறிப்பிடப்பட்டுள்ளன.
இதற்காகவே
சாகித்திய அகதமியின் விருதைப்
பெற்றது இந் நாவல்.
இனி
, நாவலின்
சில பகுதிகள்.
"கதவு
வழியாகப் புகுந்து ,தோமையார்
கோவில் பிரகாரத்துக்கு
வந்தார்.ஜனங்கள்,
குழுமியிருந்தவர்கள்,குருவானவருக்கு
ஸ்தோத்திரம்
சொன்னார்கள்.
குருவானவரும்
சிலுவை வரைந்து ஆசீர்
பண்ணிணார்.மாலை
வெய்யில் ஊசி போல் குத்தியது
அவரை.வியர்த்துப்
புழுங்கிக் கொண்டு ஜனங்கள்
வெய்யிலில் நின்று கொண்டிருந்தது
இவருக்கு
மனசுக்குச் சங்கடமாயிருந்தது.பிலவேந்திரன்,
தோள்
துண்டைஎடுத்து
இடுப்பில் சுற்றிக்
கொண்டு,தோமையார்
முன்னால் வந்து நின்று
"ஸ்தோத்திரம்
சாமி"
என்றான்.குருவானவர்
,சிலுவை
வரைந்து ஆசீர் பண்ணிவிட்டு,”
செளக்கியமாக
இருக்கிறாயா,
பிலவேந்ததிரன்"?
என்று
விசாரணை செய்தார்.
"கர்த்தர்
ஆசியினாலே உள்ளேன் சாமி"
என்றவன்
மேலும் தொடர்ந்தான்.
"தங்குமிடம்,
போஜனம்
எல்லாம் தங்கள் சித்தத்தின்படி
இருக்கிறதா,
சாமி"
"கர்த்தர்
எதை விரும்புகிறாரோ,அதை
நாம் பெறுகிறோம் அவ்வளவுதானே
, பசிக்கு
உணவும்,
தலைசாய்க்க
ஒரு பாயும்,நம்
ஜீவனத்துககுப் போதும்தானே"?
அது
உள்ளது.
சாமி
இந்த ஊர் வெய்யில் உங்களுக்கு
ஒத்துக் கொள்ளாதே.
ரொம்பவும்
கஷ்டமாக இருக்குமே.”
"அது
ஒண்ணுதான் இங்கே சிரமம்
தருவதாக இருக்கிறது.கர்த்தர்
சேவையில்,
அதுவும்
நாளடைவில் ஒத்துக் கொள்ளும்.”
…............
"உன்
சம்சாரமும்,
நீயும்
வெய்யிலில் எதுக்காக நிக்கிறது?
கோயிலுக்கு
உள்ளே போய் அமருங்களேன்.”
குருவானவர்,
சற்று
கோயிலண்டைக்கு நடந்து சென்று
கண்ணோட்டம்விட்டார்.
முதல்
வரிசையில் இரண்டு பலகைகள்
வெறுமையாக இருந்தன.இடது
பக்கப் பலகைகள் அனைத்தும்
நிரம்பியிருந்தன.
"பிலவேந்திரன்,
நீரும்
உம் சம்சாரமும் உள்ளே போகலாம்
: சற்று
நேரத்தில் பூசை தொடங்கலாம்.”
"இடமாக,
பலகைகள்
நிறைந்துவிட்டனவே,
சாமி,
இப்படியே
நிக்கிறமே".
"ஏன்,
முன்
பலகைகள் ஆளில்லாமல் வெறுமையாக
இருக்கின்றனவே.”.
"அது
எமக்கானது அல்ல,
சாமி"
"பின்,
வேறு
யாருக்காகவோ?”
"அது
குடித்தனக்காரருடையது ,
சாமி.”
"அப்படியென்றால்...”
"அது
பெரிய மனுஷருடையது சாமி.
முதலிமார்கள்,
செட்டிமார்கள்,
பிள்ளைமார்களுடையதல்லவோ.”
"நீரெல்லாம்"?
"நாங்கள்
பறை சனங்கள்,
அய்யாவே.”
"எல்லோரும்
கிறிஸ்துவின் பிள்ளைகள்
அல்லவோ?”
….......
ரங்கப்பிள்ளைக்கு
ஆச்சர்யமாக இருந்தது.தரைப்படைத்
தலைவனான பாரதி,
தாசி
பானுகிரகியும்,
அவள்
தோழியும் கோவிலுக்குப்
போகையில்,
கோவில்
வாசலிலே வைத்துத் துடுக்குத்தனம்
செய்தான் என்கிற சேதி குவர்னர்
துரை மட்டுக்கும் வந்து
சேர்ந்துவிட்டிருந்தது.
குவர்னர்
துரை ரங்கப்பிள்ளையிடம்
கேட்டார்.
"ரங்கப்பா
தாசி பானுக்கிரகி எத்தன்மையள்
?” அவள்,
நமது
மதாமை(Madame)நேற்று
சாயங்காலமாய் தானே சந்தித்து,
பிராது
கொடுத்திருக்கிறாள். »
"துரையே !
என்னவென்று
பிராது சொன்னாளாம் ? »
"பாரதி
அவளிடம் துடுக்காக நடந்து
கொண்டான் என்று சொன்னாளாம்"
"தாசி
பானுக்கிரகி ,நம்
ஈசுவரன் கோவிலுக்குத் தாலி
வாங்கியவள்.
சங்கீதம்,
நாட்டியம்
புத்தியான வசனம் ஆகியவற்றில்
வெகு சமர்த்தி.
ரொம்ப
நல்லமாதிரி என்றுதான் எல்லோரும்
சொல்கிறார்கள். »
…..........
"ரங்கப்பா !
இந்தத்
தாசிப் பெண்டுகள் என்னவிதமாய்
ஜீவிதம் பண்ணுகிறார்கள் ?தீனி
எங்ஙனம் சம்பாதிக்கிறார்கள் ? »
"ஐயனே !
கோவிலிலே
இவர்களுக்கு அளிக்கும் படி
ஒருவேளை கஞ்சிக்கும் ஆகாதே.
பிரபுக்கள்
,பெரிய
மனுஷாள் இவர்களோட இருந்து
எதோ சம்பாத்யம் ஆகிறது
.இருந்தென்ன ?
தாசிப்பெண்
மூத்தால் தவிடுதானே ?
தவிட்டுக்கு
என்ன மரியாதை அஞ்சு வருஷமோ,
பத்து
வருஷமோ வியாபாரம் ஆகும் .
அதுக்குள்
ஆஸ்தி பாஸ்தி பண்ணிக்கொண்டால்
ஆச்சு ,அதுக்குள்
பெண்ணாகப் பெற்று தலை எடுத்தால்
செளகரியப்படுவாள்.
எதுவும்
இல்லாதவள் நோயாளி மனுஷியாய்
பிட்சைக்கு வந்துவிடுகிறாள்"
"பரிதாபத்துக்குரிய
வாழ்க்கைதான்.. »
இப்படியான
உண்மையான தகவல்கள் அடங்கிய
இந் நூலை இணையதளத்தில்
காணமுடியாது.
எங்காவது
காணும் வாய்ப்பு கிடைத்தால்
தவறாது கையிலெடுங்கள்.