வணக்கம்
பழையபடி
வேதாளம் முருங்கை மரம் ஏறியது
என்ற வசனம்
பலருக்கும் தெரியும்.
இது எங்கிருந்து
ஆரம்பித்தது
என்பதை சிலவேளை
நீங்கள் அறிந்திருக்கமாட்டீர்கள்.1960க்கு
முன் அம்புலி மாமா ,கண்ணன்
என்ற மாத இதழ்கள் தமிழ்
நாட்டில் வெளிவந்தன.
இவை
இலங்கைக்கும் இறக்குமதி
செய்யப்பட்டன.
அம்புலிமாமா
இதழில் விக்கிரமாதித்தன்
கதைகள் தொடர்ச்சியாக வந்தன.
விக்கிரமாதித்தன்
கதைகள் கர்ணபரம்பரையாக
சொல்லப்பட்டு வந்த வடமொழிக்கதைகள்
(சமஸ்கிருத
மொழி).இவை
பின்னர் வடமொழியில் எழுதப்பட்டன.
வடமொழியிலிருந்து
பல இந்திய மொழிகளுக்கு மொழி
பெயர்க்கப்பட்டன.
தமிழ்நாட்டில்
பாடநூல்களிலும் இடம்பெற்றன.
இக்கதைகள்
நல்மொழிகளைக் கூறுவன.
அதாவது
நன்னெறிகளை
கதாபாத்திரங்களின் மூலம்
எடுத்துரைக்கும் இக்கதைகள்
மந்திரங்கள் ,
தந்திரங்கள்
,மாயாஜாலங்கள்
நிறைந்தவை.
ஆனால்
அவற்றைவிட மேலாக வாழ்க்கைக்குத்
தேவையான ஆலோசனைகளே அதிகம்
அடங்கியுள்ளன.
போஜராஜனுக்கு
,விக்கிரமாதித்தனின்
,தனிப்பெரும்
நற்குணங்களையும் வீர
சாகசங்களையும்
பதுமைகள் கூறவதாக அமைந்தவையும்
,
விக்கிரமாதித்தனுக்கு
வேதாளம் சொன்ன கதைகளும்
உள்ளன.
அநேகமாக
எல்லாக் கதைகளிலும் பிரதான
கதாபாத்திரம் சகல லட்சணங்களும்
பொருந்திய அரசனோ இளவரசனோதான்
.
பெண்பாத்திரம்
பேரழகியாக
இருப்பாள் .
இக்
கதைகளில் கிளிகள்;எறும்புகள்,
திரைச்சீலை
,சரவிளக்கு
எல்லாம் பேசும்,
பெரும்
அறிவாளிகளாக இருப்பார்கள்,
மைனாக்கள்
கதைகள் சொல்லும் ,மரங்கள்
ஞானம் போதிக்கும். சிறுவர்களுக்கானது
என ஒதுக்கவேண்டாம்
.
வயதானவர்கள்
அறிந்து கொள்ள வேண்டிய
அறிவுரைகள்
பக்கத்துக்கு பக்கம்
கொட்டிக்கிடக்கின்றன.
அடிப்படையில்
இந்து மதக் கதைகள் .ஆனால்
இந்து மதக்கருத்துக்களைப்
போதிப்பனவல்ல .எல்லா
மதத்தவர்களும்,இனத்தவர்களும்
அறியவேண்டிய ,படிக்கவேண்டிய
அரிய பொக்கிஷம்.தியாகத்திற்கு
எல்லையே கிடையாது.
உயர்ந்த
நட்பு எத்தகையானது.
தவறானவர்களுடனான
நட்பு எத்தகை ஆபத்தைத் தரக்
கூடியது,
தர்மமானது
எவ்வாறு எத்துன்பத்திலிருந்தும்
ஒருவரைப் பாதுகாக்கும்,
மனதிலுள்ளதையே
பேசுவதும்,
பேசியபடியே
செய்வதும்,
செய்ததையே
கூறுவதும்
நேர்மையான ஒருவருக்குரிய
இலட்சணங்களாகும்.
எந்த
சந்தர்ப்பத்திலும்
ஒருவரது தகுதியையும் அவரது
உள்ளக்கிடக்கையையும் அவரது
செயல்களைக் கொண்டே அறிய
முடியும் என்பதுபோன்ற
தததுவார்த்த உண்மைகளை அறிந்து
கொள்ளலாம்.
வடமொழியில் ராசு தொகுத்த இக்கதைகளை
திரு
அரு.இராமநாதன்
எனும் பிரபல எழுத்தாளர்
தொகுத்து வெளியிட்டார் .இதனை
நீங்கள் ஒரு கிளிக்கில்
பெற்றுக்
கொள்ளலாம் என்பதும் நாங்களும்
தமிழ்கூறும் உலகமும் ஏன்
முழு உலகமும் பெற்ற பெரும்
பேறு எனத் துணிந்து கூறலாம்.
ஏனெனில்
எல்ளோரும் அறிவாளிகளாக,நல்லவர்களாக
திறமையாக வாழ்க்கைப் படகை
ஓட்டிச்செல்வார்கள்.ஏதும் சிக்கலில்மாட்டிக்
கொள்ளும்போது அதிலிருந்து
தப்பும் மார்க்கங்களை உங்களுக்கு
கிளியோ
மைனாவோ அல்லது அரசனோ
உடனடியாக எடுத்துக்கூறுவர்.
பல
கதைகள் மிகவும் கருத்தாழம்
மிக்கவையாகவும் நம்ப முடியாத
அளவு சுவாரசியமானவையாகவும்
இருப்பதால் ஒரு கதையை மட்டும்
தந்து உங்களை கைவிட மனம்
ஒப்புக் கொள்ளவில்லை.
பல
கதைகளிலும் காணப்படும்
ரசிக்கத்தக்க பகுதிகளை
இங்கு தந்துள்ளோம்
.
"பிறருக்கு
உதவி செய்தவர்கள் அது உயர்ந்த
செயலாக இருந்தாலும் அதை
வாய்விட்டுச் சொல்லமாட்டார்கள்
"என்று
மன்னர்பிரான் தன் மனதிலே
நினைத்துக்கொண்டான்.
"மணிமான்
மன்னன் தன் புது மனைவியை
அழைத்துக் கொண்டு தன் ராஜ்யம்
போய்ச் சேர்ந்தான்.தம்பதிகள்
இருவரும் சுகமாக வாழ்ந்து
கொண்டு வந்தார்கள்.ஆனால்
ஓர் அறிவாளியும்
ஓர் அழகான பெண்ணும் அதிக காலம்
மனமொன்றி வாழ முடியுமா?
"பெண்ணே
நீ என்னை நேசிக்காவிட்டால்
நானும் உன்னைத் தொட விரும்பவில்லை.
ஆகவே
உன் உள்ளத்தைக் கவர்ந்த காதலன்
எவனோ,
அவன்
யாராக இருந்தாலும் சரி அவனிடம்
செல் "என்று
சொன்னான். »
"முன்
ஜன்மத்தில் எந்தக் காரியங்களைச்
செய்து விதை விதைத்தானோ
அவற்றின் பலனையே மனிதன் இந்த
ஜன்மத்தில் அனுபவிக்கிறான்.
இதில்
சந்தேகமே இல்லை.
முன்
ஜன்மத்தில் நடந்ததன்
பலனைப் பிரம்மாவாலும் மாற்ற
முடியாது".
"ஆம்
முன்னொரு
காலத்தில் பாரிஜாத விருஷ்ம்,லக்ஷ்மி,
சந்திரன்
ஆகிய அனைத்தும் கடலிலிருந்துதானே
தோன்றின?இன்றைக்கும்
சமுத்திரம் நவநிதிக்கும்
இருப்பிடமாகத்தான் இருக்கிறது"
"இலட்சியம்,விரதம்,சிரத்தை,தானம்
இவற்றில் எதுவாயிருந்தாலும்
ஏகமனதாய் ஏகாக்கிர சிந்தையாய்ச்
செய்தால்தான் பலிக்கும்.
ஒருவன்
எந்தக் காரியத்தையும் கிரமமாகச்
செய்தாலும் அவன் ஏகாக்கிர
சித்தத்துடன்,
நிலை
கலங்காத உறுதியுடன் தைரியமாக
நடத்தாவிட்டால்,
எதிலும்
சித்தி கிட்டாது. »
"மீன்
வயிற்றினுட் சென்ற விக்கிரமாதித்தன்
அங்கு மாடமாளிகையும் கூட
கோபுரங்களும் அளவற்ற தெருக்களும்
கொண்ட ஒரு பட்டணம் இருப்பதைக்
கண்டான்."
இந்த நூலை வாசிக்க கீழ்வரும் தொடர்பு எண்ணுடன் தொடர்பு கொள்க.
இந்த நூலை வாசிக்க கீழ்வரும் தொடர்பு எண்ணுடன் தொடர்பு கொள்க.