Friday, 28 June 2013

இலட்சியப் பாடல்

வணக்கம்

இணைந்து வாழ வேண்டும் என்ற ஆசை பத்து வயதிலேயே ஆரம்பிக்கும் போலும்.இந்த பத்து வயதுச் சிறுவர்களின் அபிலாசையை 1950 களிலேயே இத்தனை அழகாக, துணிச்சலாக தமிழ் திரையுலகம் தந்துள்ளது. "வீட்டினில் இன்ப விளக்கு வைப்போமே காற்று வராமல் காத்திருப்போமே" சிந்திக்க வேண்டிய வார்த்தைகள்! இரசிப்போமா ?


இருபது வயதிலே எண்ணிறைந்த எதிர்பார்ப்புகள். கற்பனை வானில் காதல் கீதம் பாடும் போதும் நேர்மையாக வாழ வேண்டும் என்ற கொள்கையைப் பரப்பும் இந்தக் கவிதை கண்டிப்பாக அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும்

வாழ்வதனில் நேர்மை காட்டுவோமா?





தொடர்பு கொள்க kalayanam.cheyugal@gmail;com








Sunday, 23 June 2013

இலங்கையில் சோழர் படை - Cholas in Sri Lanka

வணக்கம்


இப் பொழுதல்ல ,பதினொராம் நூற்றாண்டில் !

இம் முறை, கல்கி என்ற புனைப் பெயரில் திரு ரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் "பொன்னியின் செல்வன் " இரண்டாம் பாகத்தில் உள்ள சில பந்திகளை உங்கள் கவனத்திற்குத் தருகின்றோம்.
"நல்லது ; நாம் கொடுத்தனுப்பிய ஓலை சம்பந்தமாக என்ன ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்?”

"கட்டளைப்படி செய்திருக்கிறோம், இலங்கை சைன்னியத்துக்கு அனுப்ப ஆயிரம் மூட்டை அரிசியும்,ஐந்நூறு மூட்டை சோளமும், நூறு மூட்டை துவரம்பருப்பும் இந்த இராமேசுவரத்தீவில் கொண்டு வந்திருக்கிறோம்.இலங்கைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.”

"உங்களுடைய கப்பல்களிலேயே ஏற்றி அனுப்ப முடியுமா?”

"கட்டளையிட்டால் செய்கிறோம்.இலங்கை யுத்தம் எப்போது முடியும் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.”
"இலங்கையில் யுத்தம் நடக்கும் வரையில் மாதம் ஒரு தடவை நீங்கள் இப்படியே அரிசி முதலியவை அனுப்பி வர வேண்டும் .போய் வாருங்கள்".

"அப்படியே செய்கிறோம், போய் வருகிறோம்”.

ஐந்நூற்றுவர் சபையின் பிரதிநிதிகள் போன பிறகு ஒரு காவலன் வந்து" தெரிஞ்ச கைக்கோளப் படைச் சேனாதிபதிகள் காத்திருக்கிறார்கள், பார்க்க விரும்புகிறார்கள் "என்று சொன்னான்.

"வரச் சொல்லு" என்றார் முதல் அமைச்சர் அநிருத்தர்.

மூன்று கம்பீர புருஷர்கள் பிரவேசித்தார்கள் அவர்களுடைய முகங்களிலும் தோற்றத்திலும் வீர லஷ்மி வாசம் செய்தாள் .அஞ்சா நெஞ்சம் படைத்த ஆண்மையாளர் என்று பார்த்தவுடனே தெரிந்தது.

"சுந்தர சோழ தெரிஞ்ச கைக்கோளப் படையார்தானே?" என்று அநிருத்தர் கேட்டார் .

"உங்களுடைய கோரிக்கை என்ன?”

"எங்களை இலங்கைக்கு அனுப்பி வைக்கக் கோருகிறோம். இளவரசர் அருள்மொழிவர்மர் மாதண்ட நாயகராயிருக்கும் சைன்யத்திலே சேர்ந்து யுத்தம் செய்ய விரும்புகிறோம்".

"மகாமந்திரி எங்களை அனுப்பிப் பாருங்கள், மகிந்தனும் அவனுடைய வீரர்களும் காடு மலைகளிலே ஒளிந்திருக்கட்டும் அவர்களைக் கைப்பிடியாகப் பிடித்துக் கொண்டு வந்து இளவரசரின் காலடியில் சேர்க்கிறோம் அப்படிச் சேர்க்காவிட்டால்" தெரிஞ்ச கைக்கோளர் படை" என்ற பெயரை மாற்றிக் கொண்டு …......”

இன்று தமிழ் நாட்டில் கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபட்டு நூலின்றித் திண்டாடும் கைக்கோள வகுப்பார் சோழப் பேரரசின் காலத்தில் புகழ் பெற்ற வீர வகுப்பாராயிருந்தனர். அவர்களில் பொறுக்கி எடுத்த வீரர்களைக் கொண்டு சோழச் சக்கரவர்த்திகள் "அகப் பரிவாரப் படையை" அமைத்துக் கொள்வது வழக்கம்.

இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் ஒரு தகவலை உங்களுக்குத் தர விரும்புகின்றோம். . கல்கி அவர்கள் குறிப்பிட்டுள்ள இக் குலத்தினரின் சந்ததியினர் தான் இன்று இலங்கையில் நெசவாளர்கள் என்ற ரீதியில் புகழ் பெற்ற நல்லூர் கந்த சுவாமி கோயில் பருத்தித்துறை சிவன் கோயில் , வல்லிபுர ஆழ்வார் கோயில் உட்பட பல ஆலயங் களுக்கு ஆண்டு தோறும் திருவிழாவுக்குரிய கொடிச் சேலை வழங்கும் கெளரவத்தைப் பெற்றவர்கள்..

இப்படி வரிக்கு வரி வரலாற்றுத் தகவல்களை அள்ளிச் சொரிந்த எழுத்தாளர் கல்கி என்ற புனைப் பெயரில் எழுதிய திரு ரா கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.பொன்னியின் செல்வன், (5 பாகங்கள்) சிவகாமியின் சபதம் , பார்த்திபன் கனவு ,சோலைமலை இளவரசி என்ற வரலாற்று நாவல்கள் உடபட நூற்றுக் கணக்கான சிறுகதைகள் ,சமூக நாவல்கள்.கவிதைகள் எழுதியுள்ளார்.

இவரது நூல்களைப் பதிவு செய்ய http://free-tamil-novels.blogspot.fr/p/blog-page_7455.html

இவரது அழியாப் புகழ் பெற்ற ஒரு பாடல் , இதோ உங்களை மகிழ்விக்க !


Contact us at kalyanam.cheyugal@gmail.com
---
Summary of the above text

We present the very popular author of Tamil Litterature Mr. R. Krishnamoorthy; whose pen name was Kalki.

He has written historical novels – namely “Ponniyin selvan” (5 parts), “Sivakamyin selvan”, “Solaimalai Ilavarasi”, “Parthiban kanavu” – hundreds of short stories, social novels and poems too.

The above text is about the 11th century war between Chola kings of Tamil Nadu and the Sri Lanka king Mahinthan.

In the second part of the novel, he talks about the soldiers of the Chola kings, who were specially trained groups from the cast named “Kaikkolar” (senguntha mudaliyar).

We give an anecdote about this cast living in Sri Lanka and historically working as weavers. They have the honour of giving the “Kodichcheelai” to many temples including the very popular Nallur Kanthaswamy Temple , Sivan Temple in Point Pedro and Vallipura Alvar Temple in Vallipurakkurichchi.


You are welcomed to listen the song written by the author and sung by Hon. M. S. Sublakshimi!

பனை வளம் காண்க - Strange Palmyrah


வணக்கம்



பனை வளம் காண்க

வடமராட்சியில் உள்ள வல்லிபுரக் குறிச்சியில் ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயத்துக்கு அருகாமையில் கிளைகள் விட்ட இப் பனை மரத்தைக் கண்டோம்.


உங்கள் கவனத்திற்குத் தருகினறோம் கண்டு களியுங்கள்!

---

Summary of the above text


When we went to Sri Lanka last year we found this palmyrah with many branches,
which is very rare, at Vallipurak Kurichchi, near Vallipura Aazhvar Temple in Vadamarachchi, Jaffna.

Discover the pleasure of strange palmyrah!



Wednesday, 19 June 2013

வீதியில் கேட்டவை Heard in the street



வணக்கம்

இம் முறை நாம் வீதியில் கேட்ட இரண்டு சம்பாஷனைகளை உங்கள் கவனத்திற்குத் தருகின்றோம். இவை வெளி நாடுகளில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் சந்திக்கும் சங்கடங்களை எடுத்துக்காட்டுகின்றன!



வீதியில் கேட்டவை


வயதான இரண்டு பெண்கள் பேசிக்கொண்டார்கள், அவர்களில் ஒருவர்

"சாப்பாடோ நான் ஏன் வீண் பிரச்சனை எண்டு ஒண்டும் கேக்கிறயில்லை, பேசாம ஒரு பாணை வாங்கிச் சாப்பிட்டிட்டு இருக்கிறனான்.”


முப்பது வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்கள் பேசும் போது,

"என்னில பிழையில்ல, அவ என்ன இறக்கி விட்டவ ஒரு வேள வேற யாரயும் பிடிச்சுட்டாவோ தெரியேல்ல"

என்ன இப்படியெல்லாம் நடக்குமா என்று யோசிக்கின்றீர்களா?E

---
Translation

This time we have given here two conversations that explain the problems met by the Sri Lankan Tamils living abroad !

Two aged Tamil women are talking: “Food! I don't ask for anything! To avoid problems, I go to the bakery and buy bread”.

Two young Tamil men in conversation: “It is not my mistake! She chased me out! Do not know whether she has found someone else!”

What! Is it possible?


Yes, this is what we heard!

Sunday, 16 June 2013

அடுத்த வீடு ஐம்பது மைல்-தி.ஜானகிராமன் Next house at 50 miles

வணக்கம்


"வெற்றிலை மணக்கும் வாயோடும் தோளில் தொங்கும் ஜோல்னாப் பையோடும் பாராட்டில் லட்சியமில்லாத பெருந்தன்மையோடு என் பேச்சை அனுமதித்து அவர் கேட்டதும்,ஒரு வளர்ந்த குழந்தை போல முகம்மலர வாய் கொள்ளாமல் அவர் சிரித்து என் தோளில் தட்டிக் கொடுத்ததும்_ ஓ இந்த நூல் மட்டும்தானா_ தி .ஜா.வே ஓர் இலக்கியமல்லவா"
!
இப்படித் தி.ஜானகிராமன் அவர்களைப் பற்றி சிலாகிக்கின்றார் அவரது நண்பரும் தினமணிக்கதிர் ஆசிரியருமான திரு.கஸ்தூரிரங்கன் அவர்கள் ,அபூர்வ மனிதர்கள் என்ற நூலின் முன்னுரையில் .

இவரின் எழுத்துக்கள் மனிதாபிமானத்தை உணர்த்தும் எழுத்துக்கள் . சமூகப் பிரக்ஞையுடன் எழுதப்பட்ட சிறுகதைகள் ,நாவல்கள், மனிதர்களின் துயரங்கள் அபிலாசைகள் , ஏமாற்றங்கள் இவற்றை விளக்குகின்றன தமிழ் கூறும் நல்லுலகின் மிகப் பிரபல எழுத்தாளர், இவரை அறியாதார் தமிழ் அறியாதவரே எனலாம்.

தமிழ் இலக்கிய உலகில் சில இலக்கிய பிரம்மாக்களிடையே நிலவும், நிலவிய எழுத்துப் போராட்டங்களுடன் பார்க்கும் போது திரு ஜானகிராமன் யாரையும் விமர்சிக்காத கம்பீர எழுத்து, மனிதாபிமானம் மட்டுமே லட்சியமாகக் கொண்டு இலக்கிய உலகில் வலம் வந்த இவர் தில்லியில் உயர் பதவி வகித்தவர். அவுஸ்திரேலியா ஜப்பான் போன்ற நாடுகளுக்கு விஜயம் செய்துள்ளார்.

இவர் எழுதிய" மோகமுள்" என்ற நாவல் திரைப்படமானது. இவர் 12நாவல்கள்09 சிறுகதைத் தொகுப்புக்கள் 03 முழு நீள நாடகங்கள் 4 பிரயாண நூல்கள் எழுதியள்ளார்.

இவரது நாடகங்களான நாலுவேலி நிலமும்; வடிவேலு வாத்தியாரும் மேடையேறிய வெற்றி நாடகங்களாகும், இவரது படைப்புகள் சில.

சிறுகதைத் தொகுப்பு
சிவப்பு ரிக்ஸ்ஷா
எருமைப் பொங்கல்
யாதும் ஊரே
சக்திவைத்யம்
கமலம்
கொட்டுமேளம்
அபூர்வ மனிதர்கள்( இவரது கடைசி நூல்)

மோகமுள் நாவல்( திரைப்படமாக்கப்பட்டது)
அடி(நாவல்)

அடுத்தவீடு ஐம்பது மைல்( பிரயாணக் கட்டுரை)

. இச் சிறு கதை 1950களில் நூல் இல்லாது போனதால் நெசவாளர்கள் லட்சக் கணக்கில் தொழிலின்றி தெருவுக்கு இறங்க நேர்ந்தது: அப்படி தெருவுக்கு இறங்கி பிச்சை எடுக்க நேர்ந்த நன்னையன் பற்றிய கதை.இந்த இடத்தில் இத் தொழில் பற்றிய சில தகவல்களைத் தர விரும்புகின்றோம்.

உலகின் செல்வந்த நாடுகளாகி ஐரோப்பா அமெரிக்கா அவுஸ்திரேலியாவில் பெருமளவில் வசிக்கும் நாம் பலவற்றை சாதிக்கலாம். தற்போது எல்லாத் தமிழர்களும் சகல விழாக்களுக்கும் வட இந்தியர்களின் தயாரிப்புகளும் அவரகளது கலாச்சாரமுமான கல்லுச் சாரிகளை அதிக விலை கொடுத்து வாங்குகின்றார்கள். இதே போல் ஆண்களும் வேட்டி அணிவதை விட்டு வட இந்தியப் பாணியில் அணிகின்றார்கள்.

இதன் பிரதிபலன்களை யோசித்துப் பார்த்தால் புரியும்; நமது தமிழ் இனத்துக்கு எத்தகைய அழிவை நாம் தேடிக் கொடுக்கின்றோம் என்பது. 1950 களில் தொடங்கிய நெசவுத் தொழிலின் வீழ்ச்சி இன்றும் மாறவில்லை.
எனவே இனிமேல் ஆடை வாங்கும் போது எமது பணம் எங்கு போகின்றது என்று சிந்திப்போமா ?

இம் முறை " பஞ்சத்து ஆண்டி" என்ற இவரது சிறுகதையின் ஒரு பகுதியை உங்களுக்கு அறிமுகம் செய்கின்றோம்
"
திரும்பிப் பார்த்தான் நன்னையன்.குரங்காட்டிஅவர் பேசுவதைக் கேட்டவண்ணம் நின்று கொண்டிருந்தான்.

பெரியவர் சொன்னார்:

"அந்த அனுமார் அவனுக்கு முதல். இன்னும் கொஞ்ச நாளிலே பாரு: அந்த அலுமெனிய ஜோட்டி நிறைய அரிசி ரொப்பிக்கிட்டுப் போயிடுவான்."

அவன் பொளைக்கிறவனா, நீயா? இந்த உலகத்திலே எந்தத் தொழிலுக்கும் முதல் வேணும்டாப்பா, முதல் வேணும். பாம்பாட்டியும், குரங்காட்டியும், ஜால்ரா போட்டுக்கிட்டுப் பாடணும்;இல்லாட்டி கொத்தமல்லி ,கறிவேப்பிலை விக்கணும் இல்லாட்டி, மூட்டைதான் தூக்கலாம். அதுக்கும் உங்கிட்ட முதல் இல்லே ,எலுமிச்சம் பழத்த நறுக்கி பத்து நாள் புரட்டாசி வெய்யில்லே காயப்போட்டது போல நிக்கிறே."

ஒரு கணம் மெளனம்.

"குரங்காட்டியை விட மட்டமாகப் போய்விட்டோம்". அவனுக்குத் தொண்டையை அடைத்தது. சேலம், தறி, அவன் குடியிருந்த வீடு, பசுமாடு, முற்றத்தில் சாயம் நனைத்துத் தொங்கின நூல் பத்தை- எல்லாம் அவன் கண் முன் ஒரு முறை வந்து போயின,'எங்கோ பிறந்து, எங்கோ தொலைவில் வாழ்ந்து ,யாரோ முகம் தெரியாதவரிடம் பாட்டு வாங்கிக்கொண்டிருக்கிறோமே! எதனால் ?எதற்காக? அவன் கண் நிரம்பிற்று. உதட்டைக் கடித்தால் கண்ணீர் தெறித்துவிடுமென்று மூச்சைப் பிடித்து நிறுத்தி,வாயைத் திறந்து கண்ணீரைக் கன்னத்தில் கொட்டவிடாமல், தேக்கினான்".

---

Summary of the Tamil text given above.

Next house is at 50 miles – T. Janakiraman

Mr. T. Janakiraman was a very popular writer. He authored many short stories, novels, dramas and travelogues.

He worked in Delhi as a civil servant, travelled abroad many times and wrote a book about Australia called “Next house at 50 miles”.

Mr. T. Janakiraman used simple words. Reading him makes his characters stay in your mind for long.
His sympathy for human beings was remarkable. Especially, he appreciated women who were intelligent and beautiful. He always regretted they were not given their place in the Indian society at that time.

Today, we present a paragraph from a short story named “Panjaththu Aandy”. This expression designates someone who has started to beg for a living because of some unexpected event.

In 1950s, the weaving industry of Tamil Nadu faced a series problems of shortage of weaving thread. Thousands of weavers lost their jobs and went down to the streets to beg for money. This story is about Nannaiyan who was one of these weavers.

At this point, we want to tell you something about the weaving industry. We are now living in rich continents such as Europe, America and Australia. We can achieve great things. But, unfortunately, nearly all of us buy and wear North Indian style clothing. So our money goes to North Indians, whereas the Tamil Nadu weaving industry is still suffering a lot.


We should think of this when we buy clothes for our functions!

Tuesday, 11 June 2013

மலைப் பிரதேசத்தில்.... In the hill country side



சென்ற ஆண்டு இலங்கைப் பயணத்தின் போது மலைப் பிரதேசங்களைப் பார்த்தோம். மலைப் பிரதேசங்களில் வாழும் இலங்கைத் தமிழர்களின் வாழ்வில் எந்த மாற்றமும் இல்லை!  பிரபல மலையக எழுத்தாளர் சி வி வேலுப்பிள்ளை அவர்கள் 1984ல் எழுதிய வீடற்றவன் நாவலில் விளக்கிய அதே நிலைதான் இன்றும் …..30 வருடங்களுக்குப் பின்னும் . இதிலென்ன ஆச்சரியம் , இன்னும் 50 வருடங்களுக்குப் பின்னும் அவர்களின் வாழ்க்கையில் எந்த வசந்தமும் வந்து விடப் போவதில்லை .

மலைப் பிரதேசங்களில் வாழும் இலங்கைத் தமிழர்களான அவர்களைக் கிட்டத்தட்ட 2நூற்றாண்டுகளாக அந்நியர்கள் போல் நடத்தும் இலங்கை நமக்கு ஒன்றை ஞாபகப் படுத்துகின்றது . பிரித்தாழும் சூழ்ச்சியை பிரித்தானியா மட்டும் கையாளவில்லை.

சுமார் 300 அடி உயரத்திலிருந்து விழும் நீர்வீழ்ச்சியின் முன் தகரத்தாலான ஒற்றைக் குடிசையில் 8வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவனும் ஒரு பெண் கைக்குழந்தையும் பெற்றோர்களும் வாழ்கின்றனர் . சுத்தமான நீர் மட்டும் குடிசையோடு ஒன்றிய நீரூற்றில் கிடைக்கின்றது .

இன்னுமொரு காட்சி , கையில் ஒரு பூச்செண்டுடன் அதனை விற்பதற்காக மலைப் பாதையின் ஒரு உயரத்திலிருந்து அடுத்த பாதைக்கு பள்ளத்தை நோக்கி குறுக்கு வழியா, நமது வாகனத்தை மறிப்பதற்காக நடு வீதியில் ஓடிய 14 வயது மதிக்கதத்தக்க அந்த சிறுவனை பல மாதங்களாகியும் றக்க முடியவில்லை!

பூஜ்யம் டிகிரி என்று சொல்லத்தக்க குளிரில் தகரங்களாலும் பொலித்தீன் சீட்டுக்களாலுமான அந்த ஒற்றைக் குடிசைகளில் கோடை காலத்துக்கு மட்டும் அணியக்கூடிய டைகளுடன் வாழும் இலங்கைத் தமிழ் மக்கள் , அவர்களது அடிமை வாழ்க்கையும் வறுமையும் மாறப் போவதில்லை .

நாம் கொண்டு சென்ற பணமும் பொருட்களும் விரைவிலேயே ரைந்துவிட கனத்த இதயத்துடன் மலையகத்தை விட்டு வெளியேறினோம் .

எழுத்தாளர் திரு ஸி. வி. வேலுப்பிள்ளை அவர்கள் வீரகேசரி நாளிதழில் எழுதிய வீடற்றவன் நாவல் தேயிலைத் தோட்டங்களில், இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கைத் துயரத்தைச் சித்தரிக்கின்றது . தொழிற் சங்கம் ஒன்றை உருவாக்க நினைத்ததால் ராமலிங்கம் தொழில் இழந்து தாய் மனைவி,பிறக்கப் போகும் குழந்தை எல்லாவற்றையும் விடடு விட்டு ஓட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது .

இந்நூலின் ஒரு சிறு பந்தியை உங்கள் கவனத்திற்குத் தருகின்றோம்.  இவ் லங்கைத் தமிழர்களைப் பற்றி அவ்வப் போது தொடர்ந்து எழுதுவோம்..

"நூற்றுக்கணக்கான சிறு வண்டுகளின் சப்தம், மரங்களுக்கு மத்தியில் ஆடும் நிழல், திடீரென்று குருவிகளின் தனிக் குரல், இந்தக் காட்டின் தனித்தன்மையின் சோகம் அவனுள் அடங்கிக் கிடந்த ஏமாற்றம் ,கவலை, புண் போன்ற சரீர கஷ்டம், தோல்வி வைகளெல்லாம்
 திரண்டு பொங்கி எழச் செய்தனநிலைகுலைந்து நடுக்காட்டில் நின்றான்அவன் மூதாதைகள் இந்த நாட்டுக்கு வந்த கதைகள் ஞாபகத்திற்கு வந்தன. அவர்கள் அநுராதபுரக் காட்டின் வழியாக வந்த போது மலேரியாக் காய்ச்சலும் காலராவாலும் பசிப்பிணியாலும் பட்டு மடிந்த சம்பவங்கள் அவன் மனக்கண் முன் திரைப்படம் போல் சுழன்றன.  அவர்களது பரிதாப நிலையை இப்போது அவனது உடல் புரிந்து கொண்டதுஅவர்களது பரிதாப நிலை அவனது உதிரத்தில் கலந்திருப்பதை தெரிந்து கொண்டான் . அன்று அவர்கள் கூட ,தங்களை வரவேற்கும் ஒர் எல்லையை நோக்கிச் சென்றார்கள்.ஆனால் நூற்றைம்பது வருடங்களுக்குப் பின் இன்று போக்கிடமில்லாது திசையின்றித் தத்தளித்தான். செத்துப் பிழைத்த தாய் ,கர்ப்பம் தாங்கிய மனைவி, அவள் வயிற்றில் வளரும் சிசு, ஆணோ பெண்ணோ இனம் தெரியாத உயிர்... 
Last year, we went to Sri Lanka and visited hill cities Neweraeliya, Matale, Kandy etc. The life standard of the Sri lankan Tamils living in this region has not changed for two centuries. A popular writer from this region wrote a novel in 1984: Veedatravan, in which the poverty of Tamils was explained well!

It will be the same even after 50 years.

Sri Lanka treats the Tamils living in this region as foreigners. This reminds us one thing: the divide and conquer strategy of the British.

A small family of 2 children, an 8-year-old boy and a few months old girl living in one sheltered hut just in front of a waterfall falling nearly from 300 ft height. Their only wealth is having pure spring water.

Another scene, a 14-year-old boy was running from one level of the spiral hill climb road with a flower bouquet, crossed and came to the down level road running just to stop our car. Even after many months, we are unable to forget this scene! We can say the temperature was 0 degree.
The population lives in single huts mainly made of polyethylene and metal sheets, and wear cotton clothes only suitable for summer!

We gave the small amount of money, clothes and other food items we had, and then returned home with a heavy heart.
The novel “Veedatravan” (=homeless man) is about a man who wanted to organise a trade union to protect the labourers of the estate who was forced to leave his mother, wife and his unborn baby!

Today, we are giving you a small extract of this novel. Once in a while, we will write about those unfortunate people who are neither recognised as Sri Lankan by the government nor the society!


Sunday, 9 June 2013

கிழக்கும் மேற்கும் சந்தித்தால்... - East meets west...


வயலின் ஒரு மேலைத் தேய வாத்தியம் என்பது யாவரும் அறிந்ததே .ஆனால் வயலின் கர்நாடக சங்கீதத்துடன் இரண்டறக் கலந்துவிட்டது.

வயலின் இன்றி சங்கீதக் கச்சேரிகள் நடப்பதில்லை. ஏராளமான வயலின் வித்துவான்கள் வித்துவாட்டிகள் கர்நாடக சங்கீத உலகில் வலம் வருகின்றார்கள்.

இந்த சந்திப்பு எங்கே, எப்போது நடந்தது என்பதை அறிய ஆவலாக உள்ளதா ? மேலே படியுங்கள் !

சங்கீத மும்மூர்த்திகள் என்று புகழப்படுபவர்கள் தியாகராஜ சுவாமிகள் ,முத்துசாமி தீட்சிதர் மற்றும் சியாமா சாஸ்த்திரிகள் . முத்துசாமி தீட்சிதரின் தந்தையின் பெயர் இராமசுவாமி தீட்சிதர். இவருக்கு மூன்று புத்திரர்கள் . இவர் மணலி ஜாமீனில் சமஸ்தான வித்துவானாக இருந்த போது ஜமீந்தாராக இருந்த வெங்கடகிருஷ்ண முதலியாருக்கு அப்போதிருந்த கிழக்கிந்திய கம்பெனியுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. அவர் அங்கு மொழி பெயர்ப்பாளராகக் கடமையாற்றினார்.அவர் அப்படி கோட்டைக்குப் போகும் போதெல்லாம் தீட்சிதர் சகோதரர்களை தன்னுடன் அழைத்துச் செல்வது வழக்கம்.

அவர்கள் கோட்டையில் நடைபெறும் பான்ட் வாத்தியக் குழுவின் இசையைக் கேட்டு மகிழ்வார். முத்துசாமி தீட்சிதருக்கும் அவரது சகோதரருக்கும் வாத்தியக் கோஷ்டியிலிருந்த வயலின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது. இதைப் புரிந்து கொண்ட தந்தையார் ஐரோப்பிய ஆசிரியர் ஒருவரை அழைத்து முத்துசாமி தீட்சிதரின் தம்பியார் பாலுசாமிக்கு வயலின் கற்பித்தார். மூன்று வருட பயிற்சியின் பின் பாலுசாமி வயலின் வாசிப்பதில் விறபனரானார்.

அங்கிருந்து தொடங்கியது வயலினின் பங்கு, கர்னாடக இசையில்.

மேற்கத்திய இசையிலும் கர்நாடக இசையிலும் சமமான இடத்தைப் பெற்ற ஒரேயொரு வாத்தியம் வயலின் !

இதோ இனிமையான வயலின் இசை உங்கள் கவனத்தி
ற்கு!


---

Most people know violin as a western musical instrument. But it's also part of carnatic music. Without violin, carnatic kachcheri concerts cannot be held.

There are many competent violinists in Carnatic music circle. How did Violin become one of the most important musical instrument in both western and eastern musical worlds?
To know about it, we should go back to 18th century. Hon. Muthuswamy Deeckshithar – one of the three Sangeetha Mumoorthikal – was living in Manaly Samasthanam with his two brothers, namely Balusuwamy and Sinnaswamy. Their father Ramasamy Dheetchithar – a great musician as well – was working as a translator for the British East India Company.
These musicians visited regularly the Fort George. There, they found the western Orchestra playing violin. The family began to admire these music players and the father appointed a European violinist to teach violin to Balusuwamy, the younger brother.
After three years, he became a versatile violinist able to play carnatic ragas on violin. From there started the use of violins in carnatic Kachcherys.

Violin is the only musical instrument which has equal importance in western and eastern music worlds!

Enjoy the sounds below:










Tuesday, 4 June 2013

திருமண அறிவித்தல் - Matrimonial announcement

வணக்கம்

எமது திருமண அறிவித்தல்களில் குலம் பற்றிய விபரங்கள் குறிக்கப்படமாட்டாது. ஏனெனில் நாம் சமமான வாய்ப்புகள் உள்ள நாடுகளில் வசிக்கின்றோம்,எல்லோரும் தத்தமது விருப்பத்திற்கமைய தமது தகைமைகளையும், தகுதிகளையும் வளர்த்துக் கொள்ள முடியும்.குலத்தை வைத்து ஒருவரை எடை போடுவதும் திருமண உறவுகளை தவிர்த்துக் கொள்வதும் ...?


ஆனால் தொடர்பு கொள்ளும் போது உங்களுக்குத் தேவையான தகவல்களை நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும்.


மணமகன் தேவை

ஐரோப்பிய நகரமொன்றில் வசிக்கும் 30 வயது நிரம்பிய யாழ்பாணத்தைச் சேர்ந்த இந்து மத, நடுத்தர உயரமான கவர்ச்சியான CIMA பட்டதாரிப் பெண்ணுக்குப் பெற்றோர் பொருத்தமான மணமகனைத் தேடுகின்றனர்.
தொடர்பு கொள்ளவும் kalyanam.cheyugal@gmail.com


---

Wanted bridegroom

Parents seek bridegroom for their Hindu CIMA-qualified daughter. She is a medium height attractive girl of 30 years old, born in Jaffna and presently living in a European country.




In our marriage announcements we will not indicate any detail about cast. We are living in countries where all have equal opportunities and one can develop his/her qualifications and qualities according to his/her wish.

In our opinion, judging someone by his/her cast and avoiding matrimonial relationship based on that is meaningless.


வரலாற்று நாவல் Historical novels




.சில வருடங்களுக்கு முன் வெளியான" வந்தார்கள் வென்றார்கள்" வரலாற்று நாவலை விட. ,தற்போது வரலாற்று நாவல் யாரும் எழுதுவதில்லை என்றே சொல்லலாம்.

ஆனால் 1950 ,1960 ,1970களில் ஏகப்பட்ட வரலாற்று நாவல்கள் வெளியாயின , இதனை எழுதிய பிரபல எழுத்தாளர்கள் ,கல்கி என்ற புனை பெயரில் எழுதிய திரு ரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ,முக்கியமாக திரு சாண்டில்யன் என்ற புனைப் பெயரில் எழுதிய பாஷ்யம் ஐயங்கார் அவர்கள் திரு கண்ணதாசன் அவர்கள் திரு அகிலன், திரு.நா.பார்த்தசாரதி அவர்கள் திரு பிரபஞ்சன் அவர்கள் திரு விக்ரமாதித்தன் அவர்க ள் என ஒரு பெரும் கூட்டமே இருந்தது .

கணிணி ,விஞ்ஞானம், கணிதம் ,ஆங்கிலம் இவற்றுடன் ஒப்பிடும் போது வரலாறு கற்பவர்களுக்கு மதிப்பு இருப்பதில்லை.ஆனால்,வரலாறு என்பது வாழும் வழி முறையை நமக்கு கற்றுத் தரும் .

இம் முறை திரு சாண்டில்யன் அவர்களின் படைப்புகளை உங்களுக்கு அறிமுகம் செய்கின்றோம் , இவர் நாற்பது சரித்திர நாவல்கள்(அடேயப்பா) எழுதியுள்ளார்,யவனராணி, கடல்புறா, ஜலமோகினிராஜபேரிகை, ஜலதீபம் இவற்றில் சில.

இதைவிட சமூக நாவல், அரசியல் நாவல் ,பக்தி நூல் என்பனவும் இவர் எழுதியுள்ளார் ,

ராஜபேரிகை என்ற இவரது வரலாற்று நாவலின் ஒரு சிறு பந்தி இங்கு தரப்படுகின்றது.. இந் நாவல், எப்படி இந்தியா என்ற உப கண்டம் 18ம் நூற்றாண்டில் , ஆங்கிலேயர் வசம் எளிதாக சிக்கியது என்பதை விளக்குகின்றது,

இதோ சில சுவையான பகுதிகள்.


ஆற்காட்டு நவாப் சந்தா சாகிப்பிற்கும் டூப்ளே துரைக்குமிடையில்
நடந்த ஓரு சம்பாஷனை.



"ஆம், 13 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை ,அப்போது நான் திருச்சியை முற்றுகையிட்டிருந்தேன் , அந்த திருச்சியை ஆட்சி செய்தவள் ஓரு பெண் ,நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்தவள், பெயர் மீனாட்சி , பல மாதங்கள் முற்றுகையிட்டும் அந்தக் கோட்டையை என்னால் பிடிக்கமுடியவில்லை , போரால் பிடிக்க முடியாததை தந்திரத்தால் பிடிக்க முயன்றேன், அப்போது நாயக்கர் வம்சத்தில் அரியணைப் போட்டியிருந்தது, திருச்சியில் என்னைப் புகவிட்டால் ராணிக்கு நான் சகோதரனாக இருப்பேன்,அவள் உறவினர்களை முறியடிக்க உதவுவேன், என்று ராணி மீனாட்சிக்குச் செய்தியனுப்பினேன், ராணியிடமிருந்து பதில் வந்தது.

அனுகூலமான பதில்தான் ;ஆனால், அதில் ஓரு சிக்கலும் இருந்ததுகுர்ரான் மீது சத்தியம் செய்தால் உங்களைக் கோட்டைக்குள் அனுமதிக்கின்றேன் என்று ராணி சொல்லி அனுப்பினாள், என்பாடு திண்டாட்டமாகிவிட்டது.  குர்ஆன் மீது ஆணையிட்டால் அதை மீறமுடியாது, என்ன செய்வது ? என்று அறியாமல் திண்டாடிய சமயத்தில் ஓரு யோசனை பிறந்தது, ஓரு செங்கல்லைப் பட்டுத் துணியால் மூடி ஓரு பலகையில் வைத்து அதைக் குர்ஆன் என்று கூறிச் சத்யம் செய்தால் என்ன, என்று நினைத்தேன், அப்படியே செய்யவும் செய்தேன் , அல் அலீம் (ஜல்) என்று கூறி ராணி மீனாட்சியையும் ,அவள் அரசையும் பாதுகாப்பதாக ஆணையிட்டேன் . ஆல் அமீன் ( ஜல் ) குர் ஆனில் சொல்லப்படும் எல்லாம் வல்ல அல்லாவின்( ஜல்) 99 நாமங்களில் ஓன்று,
…..

கோட்டைக்குள் நுழைந்ததும் தோட்டையை வசப்படுத்திக் கொண்டேன் , ராணியைச் சிறையிலிட்டேன், என்றார் சந்தா சாகிப்,

சகோதரராக நடந்து கொண்டீர்என்றார், டூப்ளே இகழ்ச்சி நிரம்பிய குரலில்.

இல்லை, நான் தவறு எதுவும் செய்யவில்லை, போருக்குத் தேவையான தந்திரம்; அதைக் கையாண்டேன், என்று உளறினார் சந்தா சாகிப் , ஆனால், அந்தப் பாழும் ராணி தீக்குளித்துவிட்டாள் , என்று ராணி ஏதோ தவறு செய்து விட்டது போல் குளறவும் செய்தார் ஆற்காட்டு நவாப் ."

அருமையான, அபரிதமான வரலாற்றுத் தகவல்கள் கொண்ட அவரது நூல்களைப் பதிவு செய்ய:








Now, no one writes historical novels except Mr. Mathan. He has written a book called “Vantharkal vendrarkal”.

But in 1950s, 1960s and 1970s, there were a lot of historical novels written in Tamil. Namely by Mr. R. Krishnamoorthy who has written under the pen name of “KALKI”, especially, Mr. Pashyam Iyangar who has written under the pen name of “Sandilyan”, Ms. Kannathasan, Akilan, Na. Parthasarathy, Prapanjan, Aru. Ramanathan, Kovi Manisekeran. There were a gang of authors!

Computer sciences, mathematics and sciences are very popular studies compared to history. But, we should not forget that history is something that teaches the way of living.

This time, we are glad to introduce Mr. Sandilyan or Chandilyan's novels to you. He has written fourty novels (my gosh): Yavanarani, kadalpura, Jalamohini, Rajaperikai Jalatheepam are some famous ones.

Apart from these, he also wrote social and political novels, as well as religious books. We are giving here a small paragraph of “Rajaperikai” which explains how India – a huge sub-continent – was captured by British in the 18th century.

/free-download-sandilyan-novelsfree download sandilyan novels.full.rar [HIGH SPEED DOWNLOAD]



Summary of the paragraph: The conversation is between Lord Duplex and Navab d'Arcod Santha sahib.


"13 years ago, I encircled Thiruchchi (Tamil Nadu). Even after many days of attack, I couldn't enter into the Fort. At that time, Ranee Meenatchi ruled Thiruchchi and there were many quarrels within the family for the throne. So, I thought of achieving my goal in another way. I sent a message to Queen Meenatchi telling that I will protect her like a brother and save her throne. The reply was favourable, but she planted one condition: I should promise on Quran that I will keep my promise. This was difficult for me because when we promison Quran, there is no turning back on it. So I thought I would not promisthway she asked. I took a brick covered with silk and promised on it. She allowed me to enter into the Fort. arrested her and kept her in detention. But Ranee committed suicide by setting herself ofire. Now, I am facing threatening!"






Sunday, 2 June 2013

வளையல் + பாதுகாப்பு = வளைகாப்பு - VAZHAIKAPPU


வளையல்பாதுகாப்பு என்ற இரு வார்த்தைகளின் சங்கமமே வளைகாப்பு. இது கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏழாம் மாதத்தில் நடக்கும் ஒரு சடங்கு. இச் சடங்கு முன்பு இலங்கைத் தமிழர்களால் கொண்டாடப்படுவதில்லை. கடந்த சில வருடங்களாக இலங்கைத் தமிழர்கள் வாழும் நாடுகளிலெல்லாம் இச் சடங்கு கொண்டாடப்படுகின்றது.

உறவினர்கள் கூடி மகிழ்ந்து கொண்டாடுவது மிகவும் பாராட்டப்பட வேண்டிய தொன்றுஅதே சமயம் இச் சடங்கின் அர்த்தத்தையும் அறிந்திருத்தல் அவசியம் எனலாம்.

பெண் கர்ப்பமாக இருக்கும்போது மிகவும் பத்திரமாகப் பாதுகாக்கப்பட வேண்டியவள்.அதிலும் ஏழாம் மாதத்தின் பின் அசம்பாவிதங்கள் ஏற்பட்டு கர்ப்பச் சிதைவு ஏற்படுவதையோ ,உயிராபத்து ஏற்படுவதையோ தடுப்பதற்காக நம் முன்னோர் ஏற்படுத்தியதே இச் சடங்கு

இச் சடங்கு எப்போதும் பெண்ணின் பெற்றோர் இல்லத்திலேயே நடை பெறும்உறவினர்கள் வரவழைக்கப்படுவார்கள், வளையல்காரர் வருவார், கர்ப்பிணிப் பெண்ணுக்கும் வந்திருக்கும் பெணகளுக்கும் வளையல்கள் அணிவிப்பார்.

எனவே கர்ப்பிணி பெண்ணுக்கு சூடப்படும் கண்ணாடி வளையல்கள்அவள் கணவர் அன்பின் நிமித்தமோ, ஆத்திரத்தினாலோ அத்துமீறி நடந்து கொள்ளும் சந்தர்ப்பத்தில், உடைந்து காட்டிக் கொடுத்துவிடும்.

ஆனால், தற்காலத்தில் இத் தந்திரம் பலிக்காது. தற்போது போடப்படும் பிளட்டினம், தங்கம், பிளாஸ்டிக் வளையல்கள் உடைவதில்லை ! ஆக பெரிதாகப் பயனில்லை !

இருந்தாலுமென்ன, வீட்டில் ஒரு சடங்கு பெரும் கொண்டாட்டமல்லவா ?

---

Vazhaikappu is a small function based on a tradition coming from Tamil Nadu (India). Back in those days, Sri Lankan Tamils did not celebrate this function. But now, all Sri Lankan Tamils celebrate it. Family functions are always interesting. Meeting up once in a while makes everyone happy.

What is this function about? A pregnant woman should be protected carefully. Especially, from the seventh month, any problem can affect both the mother and the baby. So, our ancestors decorated the pregnant woman with glass bangles at the seventh month. Relatives were invited. A bangles seller would visit the woman at her home. He would sell bangles to all women who were at the function and the pregnant women as well.

This function used to be celebrated at the pregnant woman's parents' house. This way, if the husband tries to be harsh – either by affection or anger – the bangles would brake into pieces so that every family member will be aware!

But nowadays, this idea will not work because ladies are wearing platinum, gold and plastic bangles. Even if the idea is not applicable anymore, a small family function is always interesting.

Let's celebrate!