"வெற்றிலை மணக்கும் வாயோடும் தோளில் தொங்கும் ஜோல்னாப் பையோடும் பாராட்டில் லட்சியமில்லாத பெருந்தன்மையோடு என் பேச்சை அனுமதித்து அவர் கேட்டதும்,ஒரு வளர்ந்த குழந்தை போல முகம்மலர வாய் கொள்ளாமல் அவர் சிரித்து என் தோளில் தட்டிக் கொடுத்ததும்_ ஓ இந்த நூல் மட்டும்தானா_ தி .ஜா.வே ஓர் இலக்கியமல்லவா"
!
இப்படித் தி.ஜானகிராமன் அவர்களைப் பற்றி சிலாகிக்கின்றார் அவரது நண்பரும் தினமணிக்கதிர் ஆசிரியருமான திரு.கஸ்தூரிரங்கன் அவர்கள் ,அபூர்வ மனிதர்கள் என்ற நூலின் முன்னுரையில் .
இவரின் எழுத்துக்கள் மனிதாபிமானத்தை உணர்த்தும் எழுத்துக்கள் . சமூகப் பிரக்ஞையுடன் எழுதப்பட்ட சிறுகதைகள் ,நாவல்கள், மனிதர்களின் துயரங்கள் அபிலாசைகள் , ஏமாற்றங்கள் இவற்றை விளக்குகின்றன தமிழ் கூறும் நல்லுலகின் மிகப் பிரபல எழுத்தாளர், இவரை அறியாதார் தமிழ் அறியாதவரே எனலாம்.
தமிழ் இலக்கிய உலகில் சில இலக்கிய பிரம்மாக்களிடையே நிலவும், நிலவிய எழுத்துப் போராட்டங்களுடன் பார்க்கும் போது திரு ஜானகிராமன் யாரையும் விமர்சிக்காத கம்பீர எழுத்து, மனிதாபிமானம் மட்டுமே லட்சியமாகக் கொண்டு இலக்கிய உலகில் வலம் வந்த இவர் தில்லியில் உயர் பதவி வகித்தவர். அவுஸ்திரேலியா ஜப்பான் போன்ற நாடுகளுக்கு விஜயம் செய்துள்ளார்.
இவர் எழுதிய" மோகமுள்" என்ற நாவல் திரைப்படமானது. இவர் 12நாவல்கள்09 சிறுகதைத் தொகுப்புக்கள் 03 முழு நீள நாடகங்கள் 4 பிரயாண நூல்கள் எழுதியள்ளார்.
இவரது நாடகங்களான நாலுவேலி நிலமும்; வடிவேலு வாத்தியாரும் மேடையேறிய வெற்றி நாடகங்களாகும், இவரது படைப்புகள் சில.
சிறுகதைத் தொகுப்பு
சிவப்பு
ரிக்ஸ்ஷா
எருமைப் பொங்கல்
யாதும் ஊரேசக்திவைத்யம்
கமலம்
கொட்டுமேளம்
அபூர்வ மனிதர்கள்( இவரது கடைசி நூல்)
மோகமுள் நாவல்( திரைப்படமாக்கப்பட்டது)
அடி(நாவல்)
அடுத்தவீடு ஐம்பது மைல்( பிரயாணக் கட்டுரை)
. இச் சிறு கதை 1950களில் நூல் இல்லாது போனதால் நெசவாளர்கள் லட்சக் கணக்கில் தொழிலின்றி தெருவுக்கு இறங்க நேர்ந்தது: அப்படி தெருவுக்கு இறங்கி பிச்சை எடுக்க நேர்ந்த நன்னையன் பற்றிய கதை.இந்த இடத்தில் இத் தொழில் பற்றிய சில தகவல்களைத் தர விரும்புகின்றோம்.
உலகின் செல்வந்த நாடுகளாகி ஐரோப்பா அமெரிக்கா அவுஸ்திரேலியாவில் பெருமளவில் வசிக்கும் நாம் பலவற்றை சாதிக்கலாம். தற்போது எல்லாத் தமிழர்களும் சகல விழாக்களுக்கும் வட இந்தியர்களின் தயாரிப்புகளும் அவரகளது கலாச்சாரமுமான கல்லுச் சாரிகளை அதிக விலை கொடுத்து வாங்குகின்றார்கள். இதே போல் ஆண்களும் வேட்டி அணிவதை விட்டு வட இந்தியப் பாணியில் அணிகின்றார்கள்.
இதன் பிரதிபலன்களை யோசித்துப் பார்த்தால் புரியும்; நமது தமிழ் இனத்துக்கு எத்தகைய அழிவை நாம் தேடிக் கொடுக்கின்றோம் என்பது. 1950 களில் தொடங்கிய நெசவுத் தொழிலின் வீழ்ச்சி இன்றும் மாறவில்லை.
எனவே இனிமேல் ஆடை வாங்கும் போது எமது பணம் எங்கு போகின்றது என்று சிந்திப்போமா ?
இம் முறை " பஞ்சத்து ஆண்டி" என்ற இவரது சிறுகதையின் ஒரு பகுதியை உங்களுக்கு அறிமுகம் செய்கின்றோம்
"
திரும்பிப் பார்த்தான் நன்னையன்.குரங்காட்டிஅவர் பேசுவதைக் கேட்டவண்ணம் நின்று கொண்டிருந்தான்.
பெரியவர் சொன்னார்:
"அந்த அனுமார் அவனுக்கு முதல். இன்னும் கொஞ்ச நாளிலே பாரு: அந்த அலுமெனிய ஜோட்டி நிறைய அரிசி ரொப்பிக்கிட்டுப் போயிடுவான்."
அவன் பொளைக்கிறவனா, நீயா? இந்த உலகத்திலே எந்தத் தொழிலுக்கும் முதல் வேணும்டாப்பா, முதல் வேணும். பாம்பாட்டியும், குரங்காட்டியும், ஜால்ரா போட்டுக்கிட்டுப் பாடணும்;இல்லாட்டி கொத்தமல்லி ,கறிவேப்பிலை விக்கணும் இல்லாட்டி, மூட்டைதான் தூக்கலாம். அதுக்கும் உங்கிட்ட முதல் இல்லே ,எலுமிச்சம் பழத்த நறுக்கி பத்து நாள் புரட்டாசி வெய்யில்லே காயப்போட்டது போல நிக்கிறே."
ஒரு கணம் மெளனம்.
"குரங்காட்டியை விட மட்டமாகப் போய்விட்டோம்". அவனுக்குத் தொண்டையை அடைத்தது. சேலம், தறி, அவன் குடியிருந்த வீடு, பசுமாடு, முற்றத்தில் சாயம் நனைத்துத் தொங்கின நூல் பத்தை- எல்லாம் அவன் கண் முன் ஒரு முறை வந்து போயின,'எங்கோ பிறந்து, எங்கோ தொலைவில் வாழ்ந்து ,யாரோ முகம் தெரியாதவரிடம் பாட்டு வாங்கிக்கொண்டிருக்கிறோமே! எதனால் ?எதற்காக? அவன் கண் நிரம்பிற்று. உதட்டைக் கடித்தால் கண்ணீர் தெறித்துவிடுமென்று மூச்சைப் பிடித்து நிறுத்தி,வாயைத் திறந்து கண்ணீரைக் கன்னத்தில் கொட்டவிடாமல், தேக்கினான்".
---
Summary
of the Tamil text given above.
Next
house is at 50 miles – T. Janakiraman
Mr.
T. Janakiraman was a very popular writer. He authored many short
stories, novels, dramas and travelogues.
He
worked in Delhi as a civil servant, travelled abroad many times and
wrote a book about Australia called “Next house at 50 miles”.
Mr.
T. Janakiraman used simple words. Reading him makes his characters
stay in your mind for long.
His
sympathy for human beings was remarkable. Especially, he appreciated
women who were intelligent and beautiful. He always regretted they
were not given their place in the Indian society at that time.
Today,
we present a paragraph from a short story named “Panjaththu Aandy”.
This expression designates someone who has started to beg for a
living because of some unexpected event.
In
1950s, the weaving industry of Tamil Nadu faced a series problems of
shortage of weaving thread. Thousands of weavers lost their jobs and
went down to the streets to beg for money. This story is about
Nannaiyan who was one of these weavers.
At
this point, we want to tell you something about the weaving industry.
We are now living in rich continents such as Europe, America and
Australia. We can achieve great things. But, unfortunately, nearly
all of us buy and wear North Indian style clothing. So our money goes
to North Indians, whereas the Tamil Nadu weaving industry is still
suffering a lot.
We
should think of this when we buy clothes for our functions!