Tuesday, 11 June 2013

மலைப் பிரதேசத்தில்.... In the hill country side



சென்ற ஆண்டு இலங்கைப் பயணத்தின் போது மலைப் பிரதேசங்களைப் பார்த்தோம். மலைப் பிரதேசங்களில் வாழும் இலங்கைத் தமிழர்களின் வாழ்வில் எந்த மாற்றமும் இல்லை!  பிரபல மலையக எழுத்தாளர் சி வி வேலுப்பிள்ளை அவர்கள் 1984ல் எழுதிய வீடற்றவன் நாவலில் விளக்கிய அதே நிலைதான் இன்றும் …..30 வருடங்களுக்குப் பின்னும் . இதிலென்ன ஆச்சரியம் , இன்னும் 50 வருடங்களுக்குப் பின்னும் அவர்களின் வாழ்க்கையில் எந்த வசந்தமும் வந்து விடப் போவதில்லை .

மலைப் பிரதேசங்களில் வாழும் இலங்கைத் தமிழர்களான அவர்களைக் கிட்டத்தட்ட 2நூற்றாண்டுகளாக அந்நியர்கள் போல் நடத்தும் இலங்கை நமக்கு ஒன்றை ஞாபகப் படுத்துகின்றது . பிரித்தாழும் சூழ்ச்சியை பிரித்தானியா மட்டும் கையாளவில்லை.

சுமார் 300 அடி உயரத்திலிருந்து விழும் நீர்வீழ்ச்சியின் முன் தகரத்தாலான ஒற்றைக் குடிசையில் 8வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவனும் ஒரு பெண் கைக்குழந்தையும் பெற்றோர்களும் வாழ்கின்றனர் . சுத்தமான நீர் மட்டும் குடிசையோடு ஒன்றிய நீரூற்றில் கிடைக்கின்றது .

இன்னுமொரு காட்சி , கையில் ஒரு பூச்செண்டுடன் அதனை விற்பதற்காக மலைப் பாதையின் ஒரு உயரத்திலிருந்து அடுத்த பாதைக்கு பள்ளத்தை நோக்கி குறுக்கு வழியா, நமது வாகனத்தை மறிப்பதற்காக நடு வீதியில் ஓடிய 14 வயது மதிக்கதத்தக்க அந்த சிறுவனை பல மாதங்களாகியும் றக்க முடியவில்லை!

பூஜ்யம் டிகிரி என்று சொல்லத்தக்க குளிரில் தகரங்களாலும் பொலித்தீன் சீட்டுக்களாலுமான அந்த ஒற்றைக் குடிசைகளில் கோடை காலத்துக்கு மட்டும் அணியக்கூடிய டைகளுடன் வாழும் இலங்கைத் தமிழ் மக்கள் , அவர்களது அடிமை வாழ்க்கையும் வறுமையும் மாறப் போவதில்லை .

நாம் கொண்டு சென்ற பணமும் பொருட்களும் விரைவிலேயே ரைந்துவிட கனத்த இதயத்துடன் மலையகத்தை விட்டு வெளியேறினோம் .

எழுத்தாளர் திரு ஸி. வி. வேலுப்பிள்ளை அவர்கள் வீரகேசரி நாளிதழில் எழுதிய வீடற்றவன் நாவல் தேயிலைத் தோட்டங்களில், இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கைத் துயரத்தைச் சித்தரிக்கின்றது . தொழிற் சங்கம் ஒன்றை உருவாக்க நினைத்ததால் ராமலிங்கம் தொழில் இழந்து தாய் மனைவி,பிறக்கப் போகும் குழந்தை எல்லாவற்றையும் விடடு விட்டு ஓட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது .

இந்நூலின் ஒரு சிறு பந்தியை உங்கள் கவனத்திற்குத் தருகின்றோம்.  இவ் லங்கைத் தமிழர்களைப் பற்றி அவ்வப் போது தொடர்ந்து எழுதுவோம்..

"நூற்றுக்கணக்கான சிறு வண்டுகளின் சப்தம், மரங்களுக்கு மத்தியில் ஆடும் நிழல், திடீரென்று குருவிகளின் தனிக் குரல், இந்தக் காட்டின் தனித்தன்மையின் சோகம் அவனுள் அடங்கிக் கிடந்த ஏமாற்றம் ,கவலை, புண் போன்ற சரீர கஷ்டம், தோல்வி வைகளெல்லாம்
 திரண்டு பொங்கி எழச் செய்தனநிலைகுலைந்து நடுக்காட்டில் நின்றான்அவன் மூதாதைகள் இந்த நாட்டுக்கு வந்த கதைகள் ஞாபகத்திற்கு வந்தன. அவர்கள் அநுராதபுரக் காட்டின் வழியாக வந்த போது மலேரியாக் காய்ச்சலும் காலராவாலும் பசிப்பிணியாலும் பட்டு மடிந்த சம்பவங்கள் அவன் மனக்கண் முன் திரைப்படம் போல் சுழன்றன.  அவர்களது பரிதாப நிலையை இப்போது அவனது உடல் புரிந்து கொண்டதுஅவர்களது பரிதாப நிலை அவனது உதிரத்தில் கலந்திருப்பதை தெரிந்து கொண்டான் . அன்று அவர்கள் கூட ,தங்களை வரவேற்கும் ஒர் எல்லையை நோக்கிச் சென்றார்கள்.ஆனால் நூற்றைம்பது வருடங்களுக்குப் பின் இன்று போக்கிடமில்லாது திசையின்றித் தத்தளித்தான். செத்துப் பிழைத்த தாய் ,கர்ப்பம் தாங்கிய மனைவி, அவள் வயிற்றில் வளரும் சிசு, ஆணோ பெண்ணோ இனம் தெரியாத உயிர்... 
Last year, we went to Sri Lanka and visited hill cities Neweraeliya, Matale, Kandy etc. The life standard of the Sri lankan Tamils living in this region has not changed for two centuries. A popular writer from this region wrote a novel in 1984: Veedatravan, in which the poverty of Tamils was explained well!

It will be the same even after 50 years.

Sri Lanka treats the Tamils living in this region as foreigners. This reminds us one thing: the divide and conquer strategy of the British.

A small family of 2 children, an 8-year-old boy and a few months old girl living in one sheltered hut just in front of a waterfall falling nearly from 300 ft height. Their only wealth is having pure spring water.

Another scene, a 14-year-old boy was running from one level of the spiral hill climb road with a flower bouquet, crossed and came to the down level road running just to stop our car. Even after many months, we are unable to forget this scene! We can say the temperature was 0 degree.
The population lives in single huts mainly made of polyethylene and metal sheets, and wear cotton clothes only suitable for summer!

We gave the small amount of money, clothes and other food items we had, and then returned home with a heavy heart.
The novel “Veedatravan” (=homeless man) is about a man who wanted to organise a trade union to protect the labourers of the estate who was forced to leave his mother, wife and his unborn baby!

Today, we are giving you a small extract of this novel. Once in a while, we will write about those unfortunate people who are neither recognised as Sri Lankan by the government nor the society!