Thursday, 30 May 2013

மடிக் கணிணியின் கதை - History of laptop




மகாபாரதத்தில் ஒரு காட்சி

அர்ஜுனனின் மகன், அபிமன்யு; பலராமனின் (கிருஷ்ணனின் தமையன்) மகள், வத்சலா மீது காதல் கொண்டாள். அபிமன்யு வத்சலாவுக்கு ஒரு கண்ணாடிப் பேழையைப் பரிசளிக்கின்றான். அதில் ஒருவர் பார்க்கும் போது  அவர் விரும்பும் நபரோ, அல்லது பொருளோ தென்படும் என்று அபிமன்யு கூறுகின்றான்.

 வத்சலா பார்க்கின்றாள், அபிமன்யு தென்படுகின்றான்.

கீழ் வரும் பாடல்க் காட்சியைப் பாருங்கள், 1950 ல் வெளி வந்த மாயாபஜார் திரைப் படத்தில் இடம் பெற்றது இக் காட்சி. இத் திரைப் படத்தின் கதை மகாபாரதத்தின் சில பகுதிகளாகும்.





இப்போது சொல்லுங்கள் மடிக்கணிணியின் கதை என்ன?

---

A scene in Mahabaratha.

Abhimanyu - Arjunan's son - falls in love with Vathsala, daughter of Palaraman - elder brother of Krishnan.
He gives a magical chest with a glass screen inside to Vathsala, and tells her that when someone opens this box, he/she will see what he/she likes.

Vathsala opens it and sees Abhimanyu. See the song above.

Now, you know the true history of laptop! 





Monday, 27 May 2013

வீதியில் கேட்டவை - Heard in the street



முதலாமவர் : அண்ணே எப்பிடிச் சுகமாயிருக்கிறியலோ?

இரண்டாமவர்: ஓம் ,ஓம், நீர் எப்பிடி சுகமாயிருக்கிறீரோ?

முதலாமவர்.: வேலைதான் இல்லை, தேடுறேன், கிடைக்குதில்லை. மெய்யே சந்திரன்ட கடையில ஆட்களை எடுப்பினமோ?

இரண்டாமவர்: சீ.. அவன் இப்ப ஆட்களை எடுக்கிற இல்லை , அவனுக்கு யாவாரமில்லை!

உன்ர நட்சத்திரம் என்ன?

முதலாமவர்:மகம்.

இரண்டாமவர்:அப்ப ராசி என்ன ?

முதலாமவர்:சிங்க ராசி.

இரண்டாமவர்:நம்பர் என்ன?

முதலாமவர்:4ம் நம்பர்.

இரண்டாமவர்:கூட்டு எண் என்ன?

முதலாமவர்:17, ஏன் அண்ணே கேக்கிறியள் ?( பொம்பிளை இருக்கு போல என்ற நப்பாசை குரலில் தொனிக்கின்றது).

இரண்டாமவர்: ஒண்டுமில்லை ,சந்திரன் வேலைக்கு எடுத்த ஆக்கள் எல்லாம் அவனைச் சுத்திட்டாங்கள். அதுவடியா இனி அவன் குறிப்பு பாத்துத்தான் ஆக்களை வேலைக்கு எடுப்பானாம்!

---



1st person: Brother, how are you? (in Jaffna accent)

2nd person : Ah, I'm alright. How are you ?

1st person : I'm alright, but no job. Brother, will Chandran take Salesman for his shop ?

2nd person : No, because he has no business! What's your star ?

1st person : Maham

2nd person: What's your rasi?

1st person : Simha rasi.

2nd person: What's your number?

1st person : No. 4

2nd person: Total No?

1st person : 17

2nd person: Why you are asking, brother?

1st person : Nothing but Chandran does not want to recruit someone without checking his horoscope, because all those he recruited have betrayed him !

இலக்கியப் பாடல்

இலக்கியத்தில் ஒர் காட்சி

வணக்கம்

இம் முறை ஒர் இலக்கியப் பாடலை அறிமுகம் செய்கின்றோம்.

காதல் தூது எல்லோரும் அறிந்தது. ஆனால் மனைவிக்கு விடும் தூது? சாத்தியமில்லை என்கிறீர்களா ?

ஆனால் நாம் அறிந்த ஒருவர் தன் மனைவிக்கு  தூது அனுப்பியுள்ளார். இந்த ஒரு அகவற் பாடல் அவருக்கு அழியாப் புகழை அளித்துள்ளது.

அவர் சத்திமுற்றப் புலவர். அவரது ஊர் சத்தி முற்றம் .

அவர் பாடிய அந்தப் பாடல்,



நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழஙகு மாந்தன்ன
பவழக் கூர்வாய் செங்கால் நாராய்
நீயும் நின் மனைவியும் தென்திசை குமரியாடி
வடதிசை கேறுவீராயின் எம்மூர் சத்திமுற்ற வாழ்
தங்கி அயிலை உண்டு
நனை சுவர்க் கூரை கணை குரற்பல்லி
பாடு பாத்திருக்கும் என் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதி கூடலில்
ஆடை இன்றி வாடையில் நொந்து
கையது கொண்டு மெய்யது பொத்தி
காலது கொண்டு மேலது தழுவிப்
பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையானை கண்டேன் எனுமே !

எளிமையான தமிழ் நடை, விளங்குவதில் சிரமமிராது .அக் காலத்திய வறுமையைப் பறை சாற்றும் பாடல்.ஆடையின்றி (வாடையில் )குளிரில் வருந்தும் புலவர் கைகளால் தோள்களை மூடி கால்களால் உடலை குளிரிலிருந்து பாதுகாத்துக் கொண்டு , பேழைக்குள் ஒரு பாம்பு போல் முடங்கியுள்ளேன் என்று தன் மனைவியிடம் கூறுமாறு நாரைகளிடம் கேட்டுக் கொள்கின்றார்.




Thursday, 23 May 2013

நெட்டில் நிச்சயிக்கலாமா? - Marriages via Internet




நமது தமிழ் சமூகம் காலம் காலமாகத் திருமணங்களை உறவினர்களுக்கிடையில் செய்து வந்தார்கள். அதன் பின் காதல் திருமணங்கள் அறிந்தவர்களுக்கிடையில் நடந்தன .இப்படி கூடுமானவரை வேற்றூர்காரர்களுடன் திருமணத் தொடர்புகளை ஏறபடுத்த நாம் அதிகம் அக்கறை காட்டியதில்லை.

ஆனால் ,தற்போது நாம் வாழும் சூழ்நிலை முற்றிலும் வேறுபாடானது. பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர்களுக்கப்பால் பிரிந்து வாழ்கினறோம். கூடப் பிறந்த சகோதரர்களும், நெருங்கிய உறவினர்களும் ஒரே நாட்டில் வாழ்வது மிகவும் குறைவு.

இந் நிலையில் அவரவர்களுக்கு தேவையான திருமண உறவுகளை ஏறபடுத்திக் கொள்ள முடிவதில்லை.பத்திரிகை விளம்பரங்களை நாடுகின்றோம் , திருமண காரியாலங்களைத் தேடுகின்றோம்.

ஆனாலும் இத் துறையில் இன்னும் நமக்குத் தயக்கம் போகவில்லை . முதலில் நாமே விளம்பரம் கொடுக்கத் தயக்கம். பின்னர் பிறர் கொடுக்கும் விளம்பரங்களுடன் தொடர்பு கொள்ளத் தயக்கம் . பின் தொடர்பு கொண்டாலும் அதனை நீடிப்பதில் தயக்கம், தொடர்பு
நீடித்தாலும் பின் சந்திப்பதில் தயக்கம். சந்தித்தாலும் இறுதி முடிவு எடுப்பதில் தயக்கம்.

ஆக வெகு சனத்தொடர்பு சாதனங்களை இன்னும் முற்றாக நம்பத் தயாராக இல்லை .

இந்த மிக நவீன உலகில் புதிய பழைய உறவுகளைத் தேடிக் கொள்ள அல்லது புதுப்பித்துக் கொள்ள வெகு சனத் தொடர்புகளைத் தவிர வேறு பாதையில்லை. இதில் நமக்குள்ள தயக்கத்தை நாமே களைந்து கொள்ள வேண்டும் . கணிணியில் கொடுக்கப்படும் தகவல்களால் ஆபத்துக்கள் நேராவண்ணம் தடுத்துக் கொள்ள முடியும்.

அது சரி, ஆனால் இதில் இவர்களுக்கு என்ன நன்மை இருக்க முடியும் என்று ஒரு சந்தேகம் எழுகின்றது.

கணிணி கற்றுக் கொள்வதில் இன்பம். அதுவும் தமிழில் பதிவுகளை செய்வதிலும் , நாம் அறிந்தவற்றை எமது புதிய தலைமுறையினருடன் பகிர்ந்து கொள்வதிலும் மகிழ்ச்சி .

அட, ஆக மொத்தம் அதிக இலாபம் அடைவது நாம்.

நீங்கள் தரும் சொந்த மின்னஞ்சல் முகவரி ,பெயர், போன்ற விபரங்கள் வெளியிடப்படமாட்டாது.



துணிந்தவனுக்கு துக்கமில்லை ; தொடர்பு கொள்ளுங்கள் !
kalyanam.cheyugal@blogspot.com

---

Marriages via Internet !

Tamils always married within their 1st or 2nd circle community. Love marriages between them have become accepted over the last decades.

Marriages between people from different communities or with unknown people were never accepted, until now. Tamils now live many thousand kilometres away from their kith and kin. Parents, brothers and sisters are rarely living in the same country. So they have no choice other than to rely on the help of mass media to find marriage partners.

They contact newspapers and matrimonial agencies. Still, they hesitate to publish advertisements. If they see matrimonial advertisements, they are not so willing to speak with the other persons since they are not from their 1st or 2nd circle. Often, even after finalising everything they are unable to take the final decision.

It's possible to prevent problems when we feed personal informations in computers.
What benefit do we get from doing that? Well, we enjoy learning to use computers, we are happy about working in Tamil, we share knowledge with the younger generation.

We guarantee that your private information such as name and e-mail address will not be published in our blog.

There is this Tamil expression: “One who have courage will not face disaster !”,

Contact us at kalyanam.cheyugal@blogspot.com

Monday, 20 May 2013

புதிய தலைமுறை புதிய திருப்பங்கள் - New generation and the changes



உலகெங்குங்கும் பரந்து வாழும் தமிழர்கள் சந்தித்துள்ள புதிய பிரச்சனைகளில் ஒன்று இனம் மாறி நடக்கும் திருமணங்கள் அல்லது ஒத்து வாழப் போகும் வாழ்க்கை முறை.

பெற்றோர்கள் உற்றார் உறலினர்கள் கூடி ஆசிர்வதித்து நடக்கும் திருமணங்களும்அதன் பின் கிடைக்கும் கட்டுக்கோப்பான குடும்ப வாழ்க்கையும் தமிழர்களுக்குரியது.  மேற்கத்திய கலாச்சாரத்தில் திருமணம் என்பதோ குடும்ப வாழ்க்கை என்பதோ முக்கியமான அம்சங்களல்ல.
அது மட்டுமல்ல திருமணம்என்பது ஒருவரின் தனிப்பட்ட விடயமல்ல என்பதும் அது ஒரு சமூகத்தின் ஒரு அங்கம் என்றும் கூறுகின்றார்கள்.

எம்முடன் சற்றும் ஒத்துப் போகாத இனத்தவர்தளுடன் நம் இளைய தலைமுறை சேர்ந்து வாழப் போவதும் வாழ்ந்து கொண்டிருப்பதும் திருமணம் என்ற பந்தத்தில் நம்பிக்கை இல்லாது வாழ்வதும் இலங்கைத் தமிழர்களைக் கலங்கவைக்கின்றது.

பல பெற்றோர்கள் தம் பெண் பிள்ளைகளுக்குத் திருமணம் பேசவே பயப்படுகின்றார்கள். வேற்று இனத்தவர்களுடன் கூடி வாழப் போகும் புதிய தலைமுறையினர் உணராத ஒரு விடயம் இந்த வாழ்க்கை பல சமயங்களில் நீடிப்பதில்லை.

ஆக மேலை நாட்டவர்கள் போல் மீண்டும் ஒரு துணை ஒரு புதிய வாழ்க்கை என நீணடு கொண்டே போகும். நினைத்துப் பார்க்க முடியவில்லை. என்ன செய்ய முடியும்? முடிந்தவரை குடும்பத்தவர்கள் இணைந்து வாழ்வது அம்மம்மா, அப்பப்பா, மாமா, மாமி என்று உறவினர்கள் சேர்ந்து வாழ்வது ஒரு முயற்சி எனலாம்.

எங்கள் கலாச்சாரத்தை விளக்கக் கூடிய கோயில் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லலாம். இது இன்னொரு முயற்சி எனலாம். இளம் தலைமுறையினருக்கு தமிழ் மொழியைக் கற்பிகலாம்.

இறுதி முயற்சி அல்லது இறுதி நம்பிக்கை இளைய தலைமுறை போகும் பாதையிலேயே போய் அவர்கள்ஒரு கட்டத்தில் விழுந்து எழும்பித் திரும்பும் போதுஅணைத்துத்துக் கொள்ளுங்கள்.

இந்தக் கருத்துக்களில் வேறுபாடு இருக்கலாம்.

உங்கள் அபிப்பிராயங்களை எதிர்பார்க்கின்றோம்.
kalyanam.cheyugal@blogspot.com


நன்றி

New generation and the changes

The big problem or challenge Sri Lankan Tamils living all over the world meet is the new generation's marital relationship with the other communities of their respective countries. Very often, our younger generation goes to live together without getting married.

Tamils are proud of their marriages being approved by parents and relatives, and a well structured family life. For the western community, marriage and long married life is not an important issue.

Not only that, now there is an opinion that the marriage is not a private issue but a social issue. That means, respect must be shown to the common opinion about marriage in the society before actually getting married.

The Tamil youths selecting marriage partners from different communities, who have nothing in common with our tradition and culture, is something considerably disturbing the Tamil community. Many parents are afraid to talk about marriage even with their daughters !

The new generation does not understand that, very often, these marriages do not last long. So, again a new affair, a new marriage partner, a new marriage life, etc. Very difficult to accept, isn't it ?

What can be done ? In our opinion, family life can be protected. It means, having close relatives like grand parents, uncle and aunties living together, or close by. This can emphasize the pleasure of living with our community. This is one idea, if not a solution.

Secondly, we can participate in cultural activities of our community, helping the younger generation to speak and learn Tamil language, visiting respective religious centres, such as Hindu Temples and churches. Western people rarely go to churches. Religion is not an important issue for western people.

The last hope or the last solution could be leaving youngsters to go on in their route and, at one point, they will turn back after a failure and, at that point, we can welcome them back.

There will be different opinions in this issue. Our blog welcomes your opinions! Contact : kalyanam.cheyugal@blogspot.com

Thursday, 16 May 2013

வாஷிங்டனில் திருமணம் - Wedding in Washington


வணக்கம்
வாஷிங்டனில் திருமணம்

மேற்கத்திய நாடுகளில் இந்திய திருமணம் என்பது இன்று ஒருசெய்தியல்ல . ஆனால் அன்று 1960களில் அதனைக் கற்பனை செய்து அட்டகாசமான ஒரு நாவலை எழுதிளார் சாவி என்றழைக்கப்பட்ட திரு சா விஸ்வநாதன் அவர்கள்.

தமிழில் நகைச்சுவை நாவல்கள் மிகக் குறைவு . இதில் புகழ் பெற்றது "வாஷிங்டனில் திருமணம்" என்ற இந்த நூல். . இவர் 1950 ,1960களில் ஆனந்தவிடன் தினமணிக்கதிர் குங்குமம் ஆகிய வார இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றியவர்.

இந் நூலின் மிகச் சுவையான சில பகுதிகளை இங்கே தருகின்றோம் .


நன்றி chennailibrary.com


Hi,

Wedding in Washington


Indian weddings in western countries are no more a news. But in 1960s a journalist called Saavi - Mr S.Visvanathan - imagined such wedding and wrote a humorous novel which was a great success.

In Tamil, humorous novels are very rare. « Washingtonil thirumanam » (i.e. "Wedding in Washington") is one of the most popular novel.

Mr. Saavi was a journalist attached to Ananthavikatan, Thinamanikkathir and Kungumam weekly magazines in 1950s and 1960s.

Unfortunately, we are unable to give English translation of the following paragraphs.

This novel can be found at chennailibrary.com



"ஜானவாசத்தின் போது காஸ் லைட்டுக்கும், நரிக்குறவாளுக்கும் ஏற்பாடு பண்ணியாச்சா?" என்று கேட்டார் அம்மாஞ்சி.

"
காஸ் லைட் வேறே எதுக்கு? வாஷிங்டன்லே இருக்கிற லைட் போதாதா?" என்றாள் மிஸஸ் ராக்.

"
இந்த காஸ் லைட் கூடாது. எங்க ஊர் காஸ்லைட் தான் சம்பிரதாயம்" என்றார் அம்மாஞ்சி.

"
சம்பிரதாயம்னா வாட்!" என்று கேட்டாள் மிஸஸ் ராக்.

"
கஸ்டம்ஸ்" என்றார் அம்மாஞ்சி.

"
கஷ்டம் ஒன்றுமில்லை..." என்றார் சாஸ்திரிகள். மறுபடியும் அம்மாஞ்சி வாத்தியார் சாஸ்திரிகளின் வாயை அடக்கினார்.

"
ஏஜென்ட் பாப்ஜியை டிரங்க் போட்டுக் கூப்பிட்டு, மெட்ராஸிலிருந்து ஆயிரம் காஸ்லைட்ஸ் அனுப்பச் சொல்லியிருக்கேன். நாளைக்குள் வந்துவிடும். நரிக்குறவங்க ஆயிரம் கிடைப்பதுதான் கொஞ்சம் கஷ்டப்படும் போல இருக்கு" என்று கூறினான் பஞ்சு.

"
நாரிக்ரூவாஸ்னா அவங்க யாரு?" என்று கேட்டாள் மிஸஸ் ராக்ஃபெல்லர்.

"
அவர்கள் தான் தென்னிந்திய காஸ்லைட் கம்பெனி நடத்தறவா. அவாளேதான் காஸ்லைட் தூக்குவா" என்றான் பஞ்சு.

"
அதென்ன அப்படி? அவங்க இங்கே வரமாட்டாங்களா?" என்று கேட்டாள் மிஸஸ் ராக்.

"
வருவாங்க, இருபத்தொன்பதாம் தேதி சவுத் இண்டியாவில் ஏகப்பட்ட முகூரட்! அதனாலே அவங்களுக்கு ரொம்ப கிராக்கி..."ராக்ஃபெல்லர் மாமிக்கு நடந்து நடந்து கால் வீங்கிவிட்டது. அத்தையும், பாட்டியும் அந்தச் சீமாட்டியின் காலில் விளக்கெண்ணெய்த் தடவி வெந்நீர் ஒத்தடம் கொடுத்தபடியே, "நீங்க இப்படி அலையக் கூடாது. பஞ்சு இருக்கான். பார்த்துக் கொள்கிறான். உங்க கால் எப்படி வீங்கிப் போச்சு பாருங்க" என்று வருத்தப்பட்டனர்.

"
இப்ப நீங்க என்ன செய்யறீங்க?" என்று கேட்டாள் மிஸஸ் ராக்.

"
எங்களுக்குத் தெரிந்த கை வைத்தியத்தைச் செய்கிறோம்" என்றாள் அத்தை.

"
கால் வீங்கிப் போயிருக்கப்போ கை வைத்தியம் செய்தால் எப்படி? கால் வைத்தியமாகச் செய்யுங்க!" என்றாள் திருமதி ராக்ஃபெல்லர்.

ஜவ்வரிசிப் பாயசம் பரிமாறப்பட்டது. பாயசத்தில் கூட்டம் கூட்டமாக மிதந்த வழவழப்பான ஜவ்வரிசிகளைக் கையில் எடுக்க முடியாமல் திணறினார்கள் பலர். இரண்டு விரல்களால் அவற்றைப் பிடித்துவிட வெகு பாடுபட்டார் ஒருவர். அவை கையில் அகப்படாமல் நழுவிக் கொண்டேயிருந்தன. மற்றொருவர், தம்முடைய ஆள்காட்டி விரலால் ஒரு ஜவ்வரிசியை எப்படியோ அமுக்கிப் பிடித்துவிட்டார்! 

ஆனால் அவரால் அதைக் கையில் எடுக்க முடியவில்லை. விரலை எடுத்தால் ஜவ்வரிசி வழுக்கிக் கொண்டு போய்விடும் என்று தோன்றவே, ஜவ்வரிசியை அமுக்கிப் பிடித்தபடியே பக்கத்தில் இருந்தவரிடம் 'ஹெல்ப் ஹெல்ப்!' என்று கெஞ்சினார்

.இன்னொரு பிரமுகர் ஜவ்வரிசிகளைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது கை வழுக்கி விடவே, தலைகுப்புறக் கவிழ்ந்து இலை மீது விழுந்துவிட்டார்.

மற்றொரு பிரமுகர் குண்டூசியால் ஜவ்வரிசிகளைக் குத்திக் குத்தி ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டிருந்தார். கல்யாண விருந்தை அமெரிக்க நண்பர்கள் மிகவும் விரும்பிச் சாப்பிட்டார்கள். அன்றையை விருந்துக்கு சுமார் ஐயாயிரம் அமெரிக்கர்கள் வந்திருந்தார்கள். 

விருந்தில் பரிமாறப்பட்ட ஜாங்கிரியையும், வடுமாங்காயையும் கையில் எடுத்து அதிசயத்துடன் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு அவை பெரும் புதிராக இருந்தன. ஒருவர் ஜாங்கிரியைக் கையில் எடுத்து அதற்கு ஆரம்பம் எது முடிவு எது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தார்.

இன்னும் சிலர், சிக்கலான ஜாங்கிரிப் பின்னலைப் பார்த்துவிட்டு, "வெரி காம்ப்ளிகேடட் ஸ்வீட்!" என்றனர்."




Monday, 13 May 2013

அன்பான அழைப்பு - Trust In Us




வணக்கம்


எமக்கு இங்கிலாந்து பிரான்ஸ் ஜெர்மனி ருஷ்யா இலங்கை மற்றும் அமெரிக்காஆகிய நாடுகளில் ஆரம்பத்திலேயே நிரந்தர வாசகர்கள் கிடைத்துள்ளார்கள் என்பதை, மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றோம்.

இலங்கைத் தமிழர்கள் மிகக் கடினமான காலத்தைக் கடந்து வெளிநாடுகளுக்கு வந்தனர். இந்த வலைப்பூ, உலக நாடுகள் முழுவதும் பரந்து வாழும் தமிழர்களுக்கு அவர்களது திருமணப் பிரச்சனைகளில் உதவுவதே கொள்கையாகக் கொண்டுள்ளது . கணிணியின் உதவியுடன் எவ்வித செலவுமின்றி துணைவரைத் தேடிக் கொள்ளலாம்.
ஆகவே, நீங்கள் எம்முடன் தயங்காது தொடர்பு கொள்ளலாம். நாங்கள், எமது வலைப்பூவில் உங்கள் அறிவித்தலைப் பிரசுரிப்போம்.
ஆனால், உங்களது பெயர், மின்னஞ்சல் ஆகிய விபரங்கள் இரகசியமாகப் பாதுகாக்கப்படும்.

இந்த வலைப்பூ வளம் பெறுவது உஙகள் கைகளில் உள்ளது! உங்கள் அனைவருக்குமிடையில் பாலமாக நிற்பதில் எமக்கு பெரும் மகிழ்ச்சி!!

தொடர்பு கொள்க : kalyanam.cheyugal@gmail.com

---

Hi,

We are glad to announce that we already have regular readers from UK, France, Germany, Russia, Sri Lanka and USA.

Sri Lankan Tamils have undergone extremely difficult events in the past and reached foreign countries. This blog is to serve Sri Lankan Tamils living all across the globe in their matrimonial problems. With the help of computers, it is now possible for you to find a partner at no cost!

Please feel free to contact us if you are seeking a partner. We will publish your advertisement, but keep your private data secret (e.g. name, email, etc.).

It depends on you to enrich this blog. We are delighted to be a bridge between all of you.

Contact us: kalyanam.cheyugal@gmail.com