Monday, 27 May 2013

இலக்கியப் பாடல்

இலக்கியத்தில் ஒர் காட்சி

வணக்கம்

இம் முறை ஒர் இலக்கியப் பாடலை அறிமுகம் செய்கின்றோம்.

காதல் தூது எல்லோரும் அறிந்ததுஆனால் மனைவிக்கு விடும் தூது? சாத்தியமில்லை என்கிறீர்களா ?

ஆனால் நாம் அறிந்த ஒருவர் தன் மனைவிக்கு  தூது அனுப்பியுள்ளார். இந்த ஒரு அகவற் பாடல் அவருக்கு அழியாப் புகழை அளித்துள்ளது.

அவர் சத்திமுற்றப் புலவர்அவரது ஊர் சத்தி முற்றம் .

அவர் பாடிய அந்தப் பாடல்,



நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழஙகு மாந்தன்ன
பவழக் கூர்வாய் செங்கால் நாராய்
நீயும் நின் மனைவியும் தென்திசை குமரியாடி
வடதிசை கேறுவீராயின் எம்மூர் சத்திமுற்ற வாழ்
தங்கி அயிலை உண்டு
நனை சுவர்க் கூரை கணை குரற்பல்லி
பாடு பாத்திருக்கும் என் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதி கூடலில்
ஆடை இன்றி வாடையில் நொந்து
கையது கொண்டு மெய்யது பொத்தி
காலது கொண்டு மேலது தழுவிப்
பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையானை கண்டேன் எனுமே !

எளிமையான தமிழ் நடைவிளங்குவதில் சிரமமிராது .அக் காலத்திய வறுமையைப் பறை சாற்றும் பாடல்.ஆடையின்றி (வாடையில் )குளிரில் வருந்தும் புலவர் கைகளால் தோள்களை மூடி கால்களால் உடலை குளிரிலிருந்து பாதுகாத்துக் கொண்டு பேழைக்குள் ஒரு பாம்பு போல் முடங்கியுள்ளேன் என்று தன் மனைவியிடம் கூறுமாறு நாரைகளிடம் கேட்டுக் கொள்கின்றார்.