Thursday, 23 May 2013

நெட்டில் நிச்சயிக்கலாமா? - Marriages via Internet




நமது தமிழ் சமூகம் காலம் காலமாகத் திருமணங்களை உறவினர்களுக்கிடையில் செய்து வந்தார்கள்அதன் பின் காதல் திருமணங்கள் அறிந்தவர்களுக்கிடையில் நடந்தன .இப்படி கூடுமானவரை வேற்றூர்காரர்களுடன் திருமணத் தொடர்புகளை ஏறபடுத்த நாம் அதிகம் அக்கறை காட்டியதில்லை.

ஆனால் ,தற்போது நாம் வாழும் சூழ்நிலை முற்றிலும் வேறுபாடானதுபல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர்களுக்கப்பால் பிரிந்து வாழ்கினறோம்கூடப் பிறந்த சகோதரர்களும்நெருங்கிய உறவினர்களும் ஒரே நாட்டில் வாழ்வது மிகவும் குறைவு.

இந் நிலையில் அவரவர்களுக்கு தேவையான திருமண உறவுகளை ஏறபடுத்திக் கொள்ள முடிவதில்லை.பத்திரிகை விளம்பரங்களை நாடுகின்றோம் திருமண காரியாலங்களைத் தேடுகின்றோம்.

ஆனாலும் இத் துறையில் இன்னும் நமக்குத் தயக்கம் போகவில்லை முதலில் நாமே விளம்பரம் கொடுக்கத் தயக்கம்பின்னர் பிறர் கொடுக்கும் விளம்பரங்களுடன் தொடர்பு கொள்ளத் தயக்கம் பின் தொடர்பு கொண்டாலும் அதனை நீடிப்பதில் தயக்கம்தொடர்பு
நீடித்தாலும் பின் சந்திப்பதில் தயக்கம்சந்தித்தாலும் இறுதி முடிவு எடுப்பதில் தயக்கம்.

ஆக வெகு சனத்தொடர்பு சாதனங்களை இன்னும் முற்றாக நம்பத் தயாராக இல்லை .

இந்த மிக நவீன உலகில் புதிய பழைய உறவுகளைத் தேடிக் கொள்ள அல்லது புதுப்பித்துக் கொள்ள வெகு சனத் தொடர்புகளைத் தவிர வேறு பாதையில்லைஇதில் நமக்குள்ள தயக்கத்தை நாமே களைந்து கொள்ள வேண்டும் கணிணியில் கொடுக்கப்படும் தகவல்களால் ஆபத்துக்கள் நேராவண்ணம் தடுத்துக் கொள்ள முடியும்.

அது சரிஆனால் இதில் இவர்களுக்கு என்ன நன்மை இருக்க முடியும் என்று ஒரு சந்தேகம் எழுகின்றது.

கணிணி கற்றுக் கொள்வதில் இன்பம்அதுவும் தமிழில் பதிவுகளை செய்வதிலும் நாம் அறிந்தவற்றை எமது புதிய தலைமுறையினருடன் பகிர்ந்து கொள்வதிலும் மகிழ்ச்சி .

அடஆக மொத்தம் அதிக இலாபம் அடைவது நாம்.

நீங்கள் தரும் சொந்த மின்னஞ்சல் முகவரி ,பெயர்போன்ற விபரங்கள் வெளியிடப்படமாட்டாது.



துணிந்தவனுக்கு துக்கமில்லை தொடர்பு கொள்ளுங்கள் !
kalyanam.cheyugal@blogspot.com

---

Marriages via Internet !

Tamils always married within their 1st or 2nd circle community. Love marriages between them have become accepted over the last decades.

Marriages between people from different communities or with unknown people were never accepted, until now. Tamils now live many thousand kilometres away from their kith and kin. Parents, brothers and sisters are rarely living in the same country. So they have no choice other than to rely on the help of mass media to find marriage partners.

They contact newspapers and matrimonial agencies. Still, they hesitate to publish advertisements. If they see matrimonial advertisements, they are not so willing to speak with the other persons since they are not from their 1st or 2nd circle. Often, even after finalising everything they are unable to take the final decision.

It's possible to prevent problems when we feed personal informations in computers.
What benefit do we get from doing that? Well, we enjoy learning to use computers, we are happy about working in Tamil, we share knowledge with the younger generation.

We guarantee that your private information such as name and e-mail address will not be published in our blog.

There is this Tamil expression: “One who have courage will not face disaster !”,

Contact us at kalyanam.cheyugal@blogspot.com