Monday, 20 May 2013

புதிய தலைமுறை புதிய திருப்பங்கள் - New generation and the changes



உலகெங்குங்கும் பரந்து வாழும் தமிழர்கள் சந்தித்துள்ள புதிய பிரச்சனைகளில் ஒன்று இனம் மாறி நடக்கும் திருமணங்கள் அல்லது ஒத்து வாழப் போகும் வாழ்க்கை முறை.

பெற்றோர்கள் உற்றார் உறலினர்கள் கூடி ஆசிர்வதித்து நடக்கும் திருமணங்களும்அதன் பின் கிடைக்கும் கட்டுக்கோப்பான குடும்ப வாழ்க்கையும் தமிழர்களுக்குரியது.  மேற்கத்திய கலாச்சாரத்தில் திருமணம் என்பதோ குடும்ப வாழ்க்கை என்பதோ முக்கியமான அம்சங்களல்ல.
அது மட்டுமல்ல திருமணம்என்பது ஒருவரின் தனிப்பட்ட விடயமல்ல என்பதும் அது ஒரு சமூகத்தின் ஒரு அங்கம் என்றும் கூறுகின்றார்கள்.

எம்முடன் சற்றும் ஒத்துப் போகாத இனத்தவர்தளுடன் நம் இளைய தலைமுறை சேர்ந்து வாழப் போவதும் வாழ்ந்து கொண்டிருப்பதும் திருமணம் என்ற பந்தத்தில் நம்பிக்கை இல்லாது வாழ்வதும் இலங்கைத் தமிழர்களைக் கலங்கவைக்கின்றது.

பல பெற்றோர்கள் தம் பெண் பிள்ளைகளுக்குத் திருமணம் பேசவே பயப்படுகின்றார்கள். வேற்று இனத்தவர்களுடன் கூடி வாழப் போகும் புதிய தலைமுறையினர் உணராத ஒரு விடயம் இந்த வாழ்க்கை பல சமயங்களில் நீடிப்பதில்லை.

ஆக மேலை நாட்டவர்கள் போல் மீண்டும் ஒரு துணை ஒரு புதிய வாழ்க்கை என நீணடு கொண்டே போகும். நினைத்துப் பார்க்க முடியவில்லை. என்ன செய்ய முடியும்? முடிந்தவரை குடும்பத்தவர்கள் இணைந்து வாழ்வது அம்மம்மா, அப்பப்பா, மாமா, மாமி என்று உறவினர்கள் சேர்ந்து வாழ்வது ஒரு முயற்சி எனலாம்.

எங்கள் கலாச்சாரத்தை விளக்கக் கூடிய கோயில் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லலாம். இது இன்னொரு முயற்சி எனலாம். இளம் தலைமுறையினருக்கு தமிழ் மொழியைக் கற்பிகலாம்.

இறுதி முயற்சி அல்லது இறுதி நம்பிக்கை இளைய தலைமுறை போகும் பாதையிலேயே போய் அவர்கள்ஒரு கட்டத்தில் விழுந்து எழும்பித் திரும்பும் போதுஅணைத்துத்துக் கொள்ளுங்கள்.

இந்தக் கருத்துக்களில் வேறுபாடு இருக்கலாம்.

உங்கள் அபிப்பிராயங்களை எதிர்பார்க்கின்றோம்.
kalyanam.cheyugal@blogspot.com


நன்றி

New generation and the changes

The big problem or challenge Sri Lankan Tamils living all over the world meet is the new generation's marital relationship with the other communities of their respective countries. Very often, our younger generation goes to live together without getting married.

Tamils are proud of their marriages being approved by parents and relatives, and a well structured family life. For the western community, marriage and long married life is not an important issue.

Not only that, now there is an opinion that the marriage is not a private issue but a social issue. That means, respect must be shown to the common opinion about marriage in the society before actually getting married.

The Tamil youths selecting marriage partners from different communities, who have nothing in common with our tradition and culture, is something considerably disturbing the Tamil community. Many parents are afraid to talk about marriage even with their daughters !

The new generation does not understand that, very often, these marriages do not last long. So, again a new affair, a new marriage partner, a new marriage life, etc. Very difficult to accept, isn't it ?

What can be done ? In our opinion, family life can be protected. It means, having close relatives like grand parents, uncle and aunties living together, or close by. This can emphasize the pleasure of living with our community. This is one idea, if not a solution.

Secondly, we can participate in cultural activities of our community, helping the younger generation to speak and learn Tamil language, visiting respective religious centres, such as Hindu Temples and churches. Western people rarely go to churches. Religion is not an important issue for western people.

The last hope or the last solution could be leaving youngsters to go on in their route and, at one point, they will turn back after a failure and, at that point, we can welcome them back.

There will be different opinions in this issue. Our blog welcomes your opinions! Contact : kalyanam.cheyugal@blogspot.com