வணக்கம்
வாஷிங்டனில்
திருமணம்
மேற்கத்திய
நாடுகளில் இந்திய திருமணம்
என்பது இன்று ஒருசெய்தியல்ல . ஆனால்
அன்று 1960களில்
அதனைக் கற்பனை செய்து அட்டகாசமான
ஒரு நாவலை எழுதிளார் சாவி
என்றழைக்கப்பட்ட திரு சா
விஸ்வநாதன் அவர்கள்.
தமிழில்
நகைச்சுவை நாவல்கள் மிகக்
குறைவு . இதில்
புகழ் பெற்றது "வாஷிங்டனில்
திருமணம்" என்ற
இந்த நூல்.
. இவர் 1950
,1960களில்
ஆனந்தவிடன் தினமணிக்கதிர்
குங்குமம் ஆகிய வார இதழ்களில்
ஆசிரியராகப் பணியாற்றியவர்.
இந்
நூலின் மிகச் சுவையான சில
பகுதிகளை இங்கே தருகின்றோம் .
நன்றி chennailibrary.com
Hi,
Wedding
in Washington
Indian
weddings in western countries are no more a news. But in 1960s a
journalist called Saavi - Mr S.Visvanathan - imagined such wedding and
wrote a humorous novel which was a great success.
In
Tamil, humorous novels are very rare. « Washingtonil thirumanam » (i.e. "Wedding in Washington") is one of the most popular novel.
Mr. Saavi was a journalist attached to Ananthavikatan, Thinamanikkathir and Kungumam weekly magazines in 1950s and 1960s.
Unfortunately, we are unable to give English translation of the following paragraphs.
This
novel can be found at chennailibrary.com
"ஜானவாசத்தின்
போது காஸ் லைட்டுக்கும்,
நரிக்குறவாளுக்கும்
ஏற்பாடு பண்ணியாச்சா?"
என்று
கேட்டார் அம்மாஞ்சி.
"காஸ் லைட் வேறே எதுக்கு? வாஷிங்டன்லே இருக்கிற லைட் போதாதா?" என்றாள் மிஸஸ் ராக்.
"இந்த காஸ் லைட் கூடாது. எங்க ஊர் காஸ்லைட் தான் சம்பிரதாயம்" என்றார் அம்மாஞ்சி.
"சம்பிரதாயம்னா வாட்!" என்று கேட்டாள் மிஸஸ் ராக்.
"கஸ்டம்ஸ்" என்றார் அம்மாஞ்சி.
"கஷ்டம் ஒன்றுமில்லை..." என்றார் சாஸ்திரிகள். மறுபடியும் அம்மாஞ்சி வாத்தியார் சாஸ்திரிகளின் வாயை அடக்கினார்.
"ஏஜென்ட் பாப்ஜியை டிரங்க் போட்டுக் கூப்பிட்டு, மெட்ராஸிலிருந்து ஆயிரம் காஸ்லைட்ஸ் அனுப்பச் சொல்லியிருக்கேன். நாளைக்குள் வந்துவிடும். நரிக்குறவங்க ஆயிரம் கிடைப்பதுதான் கொஞ்சம் கஷ்டப்படும் போல இருக்கு" என்று கூறினான் பஞ்சு.
"நாரிக்ரூவாஸ்னா அவங்க யாரு?" என்று கேட்டாள் மிஸஸ் ராக்ஃபெல்லர்.
"அவர்கள் தான் தென்னிந்திய காஸ்லைட் கம்பெனி நடத்தறவா. அவாளேதான் காஸ்லைட் தூக்குவா" என்றான் பஞ்சு.
"அதென்ன அப்படி? அவங்க இங்கே வரமாட்டாங்களா?" என்று கேட்டாள் மிஸஸ் ராக்.
"வருவாங்க, இருபத்தொன்பதாம் தேதி சவுத் இண்டியாவில் ஏகப்பட்ட முகூரட்! அதனாலே அவங்களுக்கு ரொம்ப கிராக்கி..."ராக்ஃபெல்லர் மாமிக்கு நடந்து நடந்து கால் வீங்கிவிட்டது. அத்தையும், பாட்டியும் அந்தச் சீமாட்டியின் காலில் விளக்கெண்ணெய்த் தடவி வெந்நீர் ஒத்தடம் கொடுத்தபடியே, "நீங்க இப்படி அலையக் கூடாது. பஞ்சு இருக்கான். பார்த்துக் கொள்கிறான். உங்க கால் எப்படி வீங்கிப் போச்சு பாருங்க" என்று வருத்தப்பட்டனர்.
"இப்ப நீங்க என்ன செய்யறீங்க?" என்று கேட்டாள் மிஸஸ் ராக்.
"எங்களுக்குத் தெரிந்த கை வைத்தியத்தைச் செய்கிறோம்" என்றாள் அத்தை.
"கால் வீங்கிப் போயிருக்கப்போ கை வைத்தியம் செய்தால் எப்படி? கால் வைத்தியமாகச் செய்யுங்க!" என்றாள் திருமதி ராக்ஃபெல்லர்.
ஜவ்வரிசிப் பாயசம் பரிமாறப்பட்டது. பாயசத்தில் கூட்டம் கூட்டமாக மிதந்த வழவழப்பான ஜவ்வரிசிகளைக் கையில் எடுக்க முடியாமல் திணறினார்கள் பலர். இரண்டு விரல்களால் அவற்றைப் பிடித்துவிட வெகு பாடுபட்டார் ஒருவர். அவை கையில் அகப்படாமல் நழுவிக் கொண்டேயிருந்தன. மற்றொருவர், தம்முடைய ஆள்காட்டி விரலால் ஒரு ஜவ்வரிசியை எப்படியோ அமுக்கிப் பிடித்துவிட்டார்!
ஆனால் அவரால் அதைக் கையில் எடுக்க முடியவில்லை. விரலை எடுத்தால் ஜவ்வரிசி வழுக்கிக் கொண்டு போய்விடும் என்று தோன்றவே, ஜவ்வரிசியை அமுக்கிப் பிடித்தபடியே பக்கத்தில் இருந்தவரிடம் 'ஹெல்ப் ஹெல்ப்!' என்று கெஞ்சினார்
.இன்னொரு பிரமுகர் ஜவ்வரிசிகளைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது கை வழுக்கி விடவே, தலைகுப்புறக் கவிழ்ந்து இலை மீது விழுந்துவிட்டார்.
மற்றொரு பிரமுகர் குண்டூசியால் ஜவ்வரிசிகளைக் குத்திக் குத்தி ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டிருந்தார். கல்யாண விருந்தை அமெரிக்க நண்பர்கள் மிகவும் விரும்பிச் சாப்பிட்டார்கள். அன்றையை விருந்துக்கு சுமார் ஐயாயிரம் அமெரிக்கர்கள் வந்திருந்தார்கள்.
விருந்தில் பரிமாறப்பட்ட ஜாங்கிரியையும், வடுமாங்காயையும் கையில் எடுத்து அதிசயத்துடன் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு அவை பெரும் புதிராக இருந்தன. ஒருவர் ஜாங்கிரியைக் கையில் எடுத்து அதற்கு ஆரம்பம் எது முடிவு எது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தார்.
இன்னும் சிலர், சிக்கலான ஜாங்கிரிப் பின்னலைப் பார்த்துவிட்டு, "வெரி காம்ப்ளிகேடட் ஸ்வீட்!" என்றனர்."