வணக்கம்
2014ல் தடைகள்,ஏமாற்றங்கள், எதிர்ப்புகளைத் தாண்டி வெற்றி நடை போடத் தொடங்கியுள்ள வலைப்பூ வாசகர்களுக்கு இன்று நாம் தருவது ஓர் சிறுகதை. காதலின் பெயரால் வஞ்சிக்கப்பட்ட பலரின் வாழ்வின் நிகழ்வுகள் இதில் அடக்கம்.எமது வலைப்பூவின் வாசத்தை எம்மோடு பகிரும் அனைவருக்கும்
நல்வைழ்த்துக்கள்.
"குடைநிழலிருந்து குஞ்சரமூன்றோர்
நடை மெலிந் தோர்ஊர் நன்னிலும் நன்னுவர்!"
பட்டம் பதவி, செல்வம் என ஏகோபித்த வாழ்க்கை வாழ்ந்தோர் ஓர் நாள்
எல்லாம் இழந்து வீதிக்கு இறங்கலாம் என்ற உள் கருத்தை உடையது இப்
பாடல்,
இப் பாடலைப் பாடிக் கொண்டே அந்த வீட்டுப் படலையைத் திறந்து கொண்டு
உள்ளே வந்த அந்த நடுத்தர வயது மாது தன்னை அறிமுக்ப் படுத்திக் கொள்ள
எந்த பிரயத்தனமும் எடுத்துக் கொள்ளவில்லை. முற்றத்தில் கிடந்த
கதிரையில் அமர்ந்தார். அந்த காலை நேரம் முற்றம் கூட்டிக் கொண்டு நின்ற
செல்லம்மா வந்த பெண்ணின் பெயரைக் கேட்க யாதொரு முயற்சியும்
செய்யவில்லை. சித்தக் கலக்கத்தின் வெளிப்பாடு எனப் புரிந்து கொண்டு , மன
வலியோடு காத்திருந்தாள்!!!
கவி நயத்தோடு தொடர்ந்தாள்.
"சாவித்திரி சந்தித்தாள் தன் கதாநாயகனை, கல்லூரிக் காலம் கண்டதும்
காதலல்ல, கன காலம் தெரிந்தவர், மனதைக் கவரும் அழகன் , சிவந்த நிறம்
நல்ல உயரம் கவர்ச்சியான கண்கள். படிப்பில் ,பண்பில் யாரும் போட்டி போட
முடியாது என்றெல்லாம் ஏமாந்தேன்.
உரசி உரசி பேசும் போதுலகை மறந்தேன்.
அம்மா கேளுங்கோ, எனக்கு பதினெட்டு வயது அப்ப, ஏமார்ற வயசுதானே!
ஓடிப் போனேன், வீட்டில வேற சாதிப் பொடியனைக் கட்டி வைப்பினமே ?
இல்லைத்தானே ! நகை நட்டுகளையும் எடுத்துக் கொண்டு மன்னாருக்குப்
போயிட்டோம்.
சந்திரனுக்கு சொந்தக் காரர்கள் கனக்க அங்க இருந்தவை.
நல்ல சாதிப்பிள்ளை எண்டு மரியாதை எனக்கு.
கொண்டு போன நகைகளை ஒவ்வொண்டாக விக்க வேண்டி வந்தது.
சீவியத்துக்கு வழியில்லை , படிச்சு முடிச்சா தானே வேலை.
கடை போடப் போறன் எண்டு பத்துப் பவுண் பதக்கஞ் சங்கிலியைக்
குடுத்திட்டன் ; காச நான் கண்ணாலும் காணல்ல!
அம்மா நான் காசக் கண்ணாலும் காணல்ல!!
நாலஞ்சு வருசத்தில நான் நாராயிட்டன்.
பாலுஞ் சோறும் திண்டு வளந்த நான் ... பாணுக்கும்
வழியில்ல, சீனிக்கும் வழியில்ல .
ஊத்த உடுப்பும் , ஊத்த உடம்பும் எண்டு இருக்க....
உற்றார், பெற்றார் எல்லாம் கைவிட,
நாளாக நாளாக நலிவடைய...
ஏன் இப்படி எண்டொரு கேள்வி மனதின்
மூலையில் ஒலிக்க ஒலிக்க ........
சந்திரன்ட மாமி தாற தண்ணியைக் குடிக்க
தலை சுத்தி படுத்திடுவன்.
ஒரு வெள்ளிக்கிழமை சந்திரன்ட மாமி பவழம்
தண்ணிக்குள்ள பவுடர்தூள் கொட்டிறா,
பாத்தன் , அரை மயக்கம்; இருந்தாலும்
விழங்கிது ஏதோ பிழையெண்டு.
"அண்டு அந்த படலைலைத் திறந்து கொண்டு நடக்கிறன்,
எங்கயோ இடையில விழுந்திட்டன்."
"ஒரு hospitalல நான் படுத்திருக்கிறன் பாருங்கோ; நல்ல மனம் கொண்ட
யாரோ என்னை அங்க விட்டிருக்கினம் .அங்க தான் சொல்லிச்சினம்
கொஞ்சம் கொஞ்சமாய்ச் சாகிற மருந்து எனக்குத் தந்திருக்கினம் எண்டு!"
அம்மா அப்பா கைவிடுவினமே? ஆசானிக் எண்ட அநத மருந்து என்னைக் குழப்பிட்டுது.
"பசிக்குது அம்மா, புட்டு தாறீங்களே?"
"என்ஜினியர் வீட்டுப் பிள்ளை நான்......."
யானை மீது ,குடைக்கீழ் அமர்ந்து, ஊர்வலம் வந்த செல்வந்தர் பலர்
நடக்கவும் சகதியற்று,
வறுமையின் கோடியில் மாண்டதை நாம் அறிவோம்!!!
.
Monday, 20 January 2014
Monday, 30 December 2013
கட்டாயத் திருமணங்கள்
வணக்கம்
வலைப் பூ வாசகர்களுடன் மீண்டும்
திருமணங்கள் பற்றிப் பேசவேண்டிய
சூழ்நிலையில் நாம் உள்ளோம்.
ஐரோப்பிய,
அமெரிக்க
நாடுகளில் வசிக்கும் இலங்கைத்
தமிழர்களிடையே நடக்கும்
திருமணங்களில் ஏற்படும் மிக
விரைவான மணமுறிவு நம்மைக்
கலங்க வைக்கின்றது.
திருமணம
நடந்த அன்று பிற்பகலே காணாமல்
போய்விட்ட மணப் பெண்,
ஒரு
வாரத்தில் ஓடிப் போய்விட்ட
பெண்,
சில
மாதங்களில் கைவிட்ட பெண் ,
திருமணம்
பதிவு செய்யப்பட்டது ஆனால்
திருமணம் நடக்கவேயில்லை
.ஏனெனில்
பெண்ணுக்குச் சம்மதமில்லை
அல்லது இதற்கு எதிர்மாறாக
ஆண் இப்படியான இக்கட்டான
சூழ்நிலைகளைச்
சந்தித்திருப்பார்.
ஏன்
இந்த நிலை ?
நாம்
பேசி ஒழுங்கு படுத்தும் திருமண
முறைகளில் ஏதோ ஒரு ஒழுங்கீனம்
உள்ளது என்பது தெளிவு.
இற்றைக்கு
இருபது,
முப்பது
ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த
திருமணங்களைப் போல் இப்போது
பேசி நிறைவேற்ற முடியாது
என்பதை நாம் உணரவில்லை எனத்
தோன்றுகின்றது.
வேறு
வேறு நாடுகளில் வேற்றுக்
கலாச்சாரங்களில் வளரும்
புதிய தலைமுறை
எங்கோ
ஒரு கண்காணாத நாட்டில் வளரும்
ஒரே சாதியைச்
சேர்ந்தவர்,
அல்லது
குறிப்புப் பொருந்தியுள்ளது,
நமக்குத்
தெரிந்த குடும்பத்தவர் ,
இன்னும்
வசதியாக வாழ்கிறார்கள்
என்பதற்காகத்
திருமணம்
செய்யச் சம்மதிக்க மாட்டார்கள்.
அப்படிச்
செய்தாலும்
அவர்களால் ஒற்றுமையாக வாழ
முடியாது.
இதை
உணராத நாம் பிள்ளைகளை வற்புறுத்தி
நமக்குப் பிடித்தமான ஒருவரை
தெரிவு செய்து ஏக தடபடலாகத்
திருமணம் செய்து வைக்கும்
போது மறுக்க முடியாத இளம்
சந்ததியினர் ஏற்றுக் கொள்கின்றனர்;
அதே
வேகத்தில் விட்டு விட்டு
ஓடுகின்றனர்.
முன்
பின் காணாத ஒருவரைப் பெற்றோர்
மணம் முடிக்க வற்புறுத்தும்
போது ,அவர்களின்
கஷ்டங்களை
உணர்ந்து திருமணம் செய்து,
அந்த
வாழ்க்கைச் சிக்கல்களை சுமந்து
,
கொண்டிழுத்த,
தலைமுறையை
இனிக் காண முடியாது!
தத்தம்
பிள்ளைகள் தத்தமக்கு விரும்பியவரை
மணந்து வாழ்வதை ஏற்றுக் கொள்ள
வேண்டிய கட்டாயத்துக்கு நாம்
, இலங்கைத்
தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளோம்.
கூடுமானவரையில்
பிள்ளைகளுடன் கலந்து ஆலோசித்து
,
அவர்களுக்குப்
பிடித்தமான துணைவரைத் தெரிந்து
அல்லது அவர்கள் தமக்குப்
பிடித்தமான ஒருவரைத் தெரிவு
செய்ய வேண்டிய ஆலோசனைகளைக்
கூறி வழி நடத்துவது நன்று
எனலாம்.
விவாக
ரத்தானவர் என்ற பட்டத்தை
குடும்ப
வாழ்வில் ஈடுபடாமலே
சுமக்கும் துர்ப்பாக்கியத்தை
இளம் சந்ததியினருக்கு நாம்
அளிக்க வேண்டாம்.
இந்த
புதிய சிக்கல்களைக் கழைய
முயற்சிப்போமா,
புதிய
பாதையில் பயணிப்போமா!
தொடர்பு கொள்க kalyanam.cheyugal@gmail.com
Monday, 9 December 2013
அடுத்தகட்டம் - கட்டுரை
வணக்கம்
20ம் நூற்றாண்டின் ஆரம்பங்களில் பால்ய விவாகங்கள் தடை செய்யக் கோரி சமூக ஆர்வலர்கள் நூற்றுக்கணக்கில் பாரதத்தில் போராடினார்கள். ஆனால் இத்தகைய போராட்டங்கள் நமது நாட்டில் நடந்ததாக எத்தகைய பதிவுகளும் இல்லை. இன்று இந்தியாவில் இந் நிலைமை குறிப்பிடத்தக்க அளவில் மாறியுள்ளது. இதற்காக அந்த நாடு கண்ட போராட்டங்களை அறிய வேண்டுமானால் மகாகவி பாரதியார், பாரதிதாசன், கல்கி, காண்டேகர் அநுத்தமா, லஷ்மி போன்ற இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப கால எழுத்தாளர்களின் படைப்புகளை வாசித்தல் வேண்டும்.
இன்று நமது தமிழினம் இத்தகையதொரு சமூகப் பிரச்சனையை இன்னொரு கோணத்தில் சந்தித்துள்ளது. தமிழினத்தின் போராட்டத்தால் உருவான இளம் விதவைகன், துணையை இளந்தவர்கள் என ஏராளமான தமிழர்கள் உலக நாடுகள் எங்கும் வாழ்கின்றனர்.
வேறு வேறு நாடுகளுக்குப் போனவர்கள் அந்தந்த நாடுகளின் கலாச்சாரத்துக்கு அமைய வாழப் பழக்கப்பட்டவர்களால் இன்னொரு நாட்டில் வாழ்ந்து பழகியவர்களுடன் தமது வாழ்க்கையை இணைத்துப் பார்க்க முடியவில்லை. இதனால் கலைந்த குடும்பங்கள் பல. நாற்பது வயதுக்குப் பின்னர் வாழ்க்கையைப் புதுப்பித்துக்கொள்ள சில சமயங்களில் ஆண்களுக்கு முடியும் ஆனால் பெண்களுக்கு இத்தகைய வயதில் திருமணத்தை எதிர்பார்க்கும் பெண்களை நோக்கி சமூகம் ஒரு ஏளனக் கண்ணைட்டத்தை எறிகின்றது. அதிலும் விதவை என்றால் மேற்கொண்டு பேசவே தேவையில்லை.
இந்த நிலை மாறவேண்டும் என்பது எமது நோக்கம். திருமணம் என்பது வெறும் உடலைச் சார்ந்த விடயம் மட்டுமல்ல.. இரண்டு நண்பர்கள் சேர்ந்து ஒன்றாக தேநீர் அருந்தும் போது உண்டாகும் மகிழ்ச்சி எத்தகையதோ அத்தகையதே ஒரு கணவனும் மனைவியும் சேர்ந்து வாழும்போது உண்டாகும் இன்பம். இதை ஏன் தவறாக எடைபோட வேண்டும் என்று தெரிய வில்லை.
இநத கண்ணோட்டத்தில் நாம் கண்ட மதிவாணன் ஐம்பதை நெருங்குகின்றார். அவர் மனைவி புற்று நோயால் மரணமாகி சில வருடங்கள் ஆகின்றன.அவருக்கு இபண்டு பிள்ளைகள். தனிமையை தாங்கிக் கொண்டு பிள்ளைகளை வளர்த்து வருகின்றார்.
மாதங்கி இலங்கையில் பொறியியல் பட்டம் பெற்றவர் , சொந்தத்தில் செய்த திருமணம் சொற்ப மாதங்களில் இரத்து செய்யப்பட்டது. இரண்டாவது திருமணம் நோயாளி ஒருவருடன் நடந்தது. பத்து வருடங்களில் அவர் மரணமானார். ஆக மீண்டும் தனிமை. இந்த இருவரையும் ஒரே சமயத்தில் சந்தித்தோம்.
இருவரும் பொறியியல் துறையில் கல்வி கற்றவர்கள், துணையை இழந்தவர்கள், ஒரே வயதை நெருங்குபவர்கள், ஆகவே ஏன் இவர்கள் இணைந்து வாழக்கூடாது என எண்ணிணோம். இருவரையும் அறிமுகப்படுத்தினோம். இந்த வயதில் இன்னொரு வாழ்க்கையா எனத் தயங்கியவர்களை உற்சாகப்படுத்தினோம். உரையாடத்தொடங்கியவர்களின் முகத்தில் சந்தோஷத்தின் அடையாளம்
அவர்கள் குதூகலம் நமக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இந்த அடுத்த கட்டத் தாண்டுதலை சமூகம் நல்ல கண் கொண்டு பார்க்க வேண்டும். தனிமையில் திண்டாடுபவர்களின் வாழ்க்கையில் இன்பம் வீசச் செய்ய வேண்டும்.
இத்தகைதொரு சேவையைச் செய்யும் பாக்கியம் கிடைத்தையிட்டு எமது வலைப்பூ புளகாங்கிதம் அடைகின்றது.
இளம் விதவைகளை எண்ணி அவர்களுக்காக மகாகவி பாரதியார் பாடிய "நல்லதோர் வீணை செய்தே "என்ற பாடலை இங்கு தருகின்றோம் !
Monday, 25 November 2013
தென்னாலிராமன் விகடகவி- திரைப்பட அறிமுகம்
அரசர்களின்
ஆட்சியில் அரசவையில் விகடகவிகள்
இருந்துள்ளனர். விகடகவி
என்ற வார்த்தையே அற்புதமானது.
இடமிருந்து
வலம்
வாசித்தாலும்
வலமிருந்து
இடம்
படித்தாலும்
ஒரே வார்த்தைதான்.
இப்படித்
தமிழில்
எத்தனை வார்த்தை இருக்க
முடியும். அது
மட்டுமல்ல இவ்
வார்த்தையின் கருத்தும்
அவ்வாறு ஒரு அற்புதமான கருத்தே.
விகடமாக,
கேளிக்கையாக
, அதே
சமயம், அர்த்தபுஷ்டியாக
, புத்திசாலித்தனமாக,
அரசியலில்
ஏற்படும் சிக்கல்களுக்கு
தீர்வு காண்பவர்களாக இருந்தனர்
இந்த விகடகவிகள்.
இவர்கள்
அரசரால் நியமிக்கப்பட்டனர்.
இவர்களது
வேலை அடிப்படையில் அரசரை
மகிழ்ச்சிப்படுத்துவது.
ஆனால்
இந்திய வரலாற்றில் மிகச்
சிறந்த மேதைகளாக இந்த விகடகவிகள்
இருந்துள்ளனர்.
ஏனோ
இத்தகைய விகடதகவிகளைப் பற்றிய
செய்திகள் இலங்கை வரலாற்றில்
இல்லை.
ஆனால்
தென்னாலிராமனைப் பற்றி
இலங்கையர் பலரும்
அறிந்திருப்பர்.
காரணம்
எமது ஆரம்பக்
கல்வி பாடப்புத்தகங்களில்
பலப்பல சிறுகதைகள்
தென்னாலிராமனைப் பற்றி
எழுதப்பட்டிருந்தன.
நாம்
ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும்.
அது
, நகைச்சுவையாகப்
பேசக்கூடியவர்கள் எப்போதும்
அதிபுத்திசாலிகளாக
இருப்பர். அத்தகைய
புத்திசாலிகளாலேயே நகைச்சுவையாகப்
பேச முடியும்.
தென்னாலிராமன்
என்றழைக்கப்படும் விகடகவி
விஜயநகர சாம்ராச்சியத்தில்
கிருஷனதேவராயர் சபையில்
இருந்தவர். இந்த
விஜயநகர சாம்ராச்சியம்
தற்போதுள்ள
ஆந்திரப் பிரதேசத்தில்
பெல்லாரி
என்ற இடத்தில் அமைந்திருந்த
பரந்த புகழ் பெற்ற இராச்சியம்
ஆகும்.
இந்த
இராச்சியம் 14ஆம்
நூற்றாண்டு தொடக்கம் 16ஆம்
நூற்றண்டு வரை பெரும் வல்லரசாக
விளங்கியது. இதில்
விகடகவியாக விளங்கிய தென்னாலிராமன்
கதை 1950கலில்
படமாக்கப்பட்டது.
இத்
திரைப்படத்தில்
திரு சிவாஜிகணேசன் அவர்கள்
தென்னாலிராமனாக நடித்துள்ளார்.
வரலாற்றுத்
திரைப்படங்கள்
வெளிவராத இக் காலத்தில் பழைய
வரலாற்றுத்
திரைப்படங்கள்
அநேக வரலாற்றுத் தகவல்களை
நமக்கு அளித்து நம்மை வியப்பில்
ஆழ்த்துகின்றன.
ஒரு
விகடகவி எவ்வாறு தன் உயிரையும்
பொருட்படுத்தாது இராச்சியத்தின்
நன்மைக்காகவும் மன்னரைக்
காப்பதற்காகவும் பாடுபடுகின்றான்
என்பதை சுருக்கமாகவும்
சுவையாகவும்
எடுத்துக்காட்டுகின்ற
இத் திரைப்படம்
பார்க்க வேண்டிய திரைப்படம்
என நாம் கருதியதால் இது பற்றி
எழுதத் துணிந்தோம்.
இத்
திரைப்படத்தை யூ டியுப்பில்
காணலாம்.
Friday, 8 November 2013
வானம் வசப்படும் (நூல் அறிமுகம்)
பிரபஞ்சன்
என்ற புனைப் பெயரில் எழுதும்
சாரங்கபாணி
வைத்தியநாதனின்"
வானம் வசப்படும்" என்ற வரலாற்று
நூலை உங்களுக்கு அறிமுகம்
செயகின்றோம்.
இந்த
நூல் பிரஞ்சு நாட்டார்
பாண்டிச்சேரி என்றழைக்கும் புதுச்சேரியை ஆண்ட காலத்தில்
நடந்த கதையைச் சொல்கின்றது.
இக்
கதை 1740க்கும்
1750க்கும்
இடைப்பட்ட து.
பாண்டிச்சேரியில்
பிரஞ்சு ஆட்சிக்காலத்தில்
துய்ப்ளெக்ஸ் துரை (Dupleix)
என்பவர்
ஆட்சி
புரிந்தார்.
இக்
கவர்னரிடம் ஆனந்தரங்கம்பிள்ளை
என்பவர் காரியதரிசியாகக்
கடமையாற்றினார்.
இவர்
ஓர் நாட்குறிப்பை எழுதியிருந்தார்.
இந்த
நாட்குறிப்பின் உதவியுடன்
எழுதப்பட்டது இந் நாவல்.
எனவே
இந் நாவலில் அக் காலத்தைய
அன்றாட சம்பவங்கள் பல
குறிப்பிடப்பட்டுள்ளன.
இதற்காகவே
சாகித்திய அகதமியின் விருதைப்
பெற்றது இந் நாவல்.
இனி
, நாவலின்
சில பகுதிகள்.
"கதவு
வழியாகப் புகுந்து ,தோமையார்
கோவில் பிரகாரத்துக்கு
வந்தார்.ஜனங்கள்,
குழுமியிருந்தவர்கள்,குருவானவருக்கு
ஸ்தோத்திரம்
சொன்னார்கள்.
குருவானவரும்
சிலுவை வரைந்து ஆசீர்
பண்ணிணார்.மாலை
வெய்யில் ஊசி போல் குத்தியது
அவரை.வியர்த்துப்
புழுங்கிக் கொண்டு ஜனங்கள்
வெய்யிலில் நின்று கொண்டிருந்தது
இவருக்கு
மனசுக்குச் சங்கடமாயிருந்தது.பிலவேந்திரன்,
தோள்
துண்டைஎடுத்து
இடுப்பில் சுற்றிக்
கொண்டு,தோமையார்
முன்னால் வந்து நின்று
"ஸ்தோத்திரம்
சாமி"
என்றான்.குருவானவர்
,சிலுவை
வரைந்து ஆசீர் பண்ணிவிட்டு,”
செளக்கியமாக
இருக்கிறாயா,
பிலவேந்ததிரன்"?
என்று
விசாரணை செய்தார்.
"கர்த்தர்
ஆசியினாலே உள்ளேன் சாமி"
என்றவன்
மேலும் தொடர்ந்தான்.
"தங்குமிடம்,
போஜனம்
எல்லாம் தங்கள் சித்தத்தின்படி
இருக்கிறதா,
சாமி"
"கர்த்தர்
எதை விரும்புகிறாரோ,அதை
நாம் பெறுகிறோம் அவ்வளவுதானே
, பசிக்கு
உணவும்,
தலைசாய்க்க
ஒரு பாயும்,நம்
ஜீவனத்துககுப் போதும்தானே"?
அது
உள்ளது.
சாமி
இந்த ஊர் வெய்யில் உங்களுக்கு
ஒத்துக் கொள்ளாதே.
ரொம்பவும்
கஷ்டமாக இருக்குமே.”
"அது
ஒண்ணுதான் இங்கே சிரமம்
தருவதாக இருக்கிறது.கர்த்தர்
சேவையில்,
அதுவும்
நாளடைவில் ஒத்துக் கொள்ளும்.”
…............
"உன்
சம்சாரமும்,
நீயும்
வெய்யிலில் எதுக்காக நிக்கிறது?
கோயிலுக்கு
உள்ளே போய் அமருங்களேன்.”
குருவானவர்,
சற்று
கோயிலண்டைக்கு நடந்து சென்று
கண்ணோட்டம்விட்டார்.
முதல்
வரிசையில் இரண்டு பலகைகள்
வெறுமையாக இருந்தன.இடது
பக்கப் பலகைகள் அனைத்தும்
நிரம்பியிருந்தன.
"பிலவேந்திரன்,
நீரும்
உம் சம்சாரமும் உள்ளே போகலாம்
: சற்று
நேரத்தில் பூசை தொடங்கலாம்.”
"இடமாக,
பலகைகள்
நிறைந்துவிட்டனவே,
சாமி,
இப்படியே
நிக்கிறமே".
"ஏன்,
முன்
பலகைகள் ஆளில்லாமல் வெறுமையாக
இருக்கின்றனவே.”.
"அது
எமக்கானது அல்ல,
சாமி"
"பின்,
வேறு
யாருக்காகவோ?”
"அது
குடித்தனக்காரருடையது ,
சாமி.”
"அப்படியென்றால்...”
"அது
பெரிய மனுஷருடையது சாமி.
முதலிமார்கள்,
செட்டிமார்கள்,
பிள்ளைமார்களுடையதல்லவோ.”
"நீரெல்லாம்"?
"நாங்கள்
பறை சனங்கள்,
அய்யாவே.”
"எல்லோரும்
கிறிஸ்துவின் பிள்ளைகள்
அல்லவோ?”
….......
ரங்கப்பிள்ளைக்கு
ஆச்சர்யமாக இருந்தது.தரைப்படைத்
தலைவனான பாரதி,
தாசி
பானுகிரகியும்,
அவள்
தோழியும் கோவிலுக்குப்
போகையில்,
கோவில்
வாசலிலே வைத்துத் துடுக்குத்தனம்
செய்தான் என்கிற சேதி குவர்னர்
துரை மட்டுக்கும் வந்து
சேர்ந்துவிட்டிருந்தது.
குவர்னர்
துரை ரங்கப்பிள்ளையிடம்
கேட்டார்.
"ரங்கப்பா
தாசி பானுக்கிரகி எத்தன்மையள்
?” அவள்,
நமது
மதாமை(Madame)நேற்று
சாயங்காலமாய் தானே சந்தித்து,
பிராது
கொடுத்திருக்கிறாள். »
"துரையே !
என்னவென்று
பிராது சொன்னாளாம் ? »
"பாரதி
அவளிடம் துடுக்காக நடந்து
கொண்டான் என்று சொன்னாளாம்"
"தாசி
பானுக்கிரகி ,நம்
ஈசுவரன் கோவிலுக்குத் தாலி
வாங்கியவள்.
சங்கீதம்,
நாட்டியம்
புத்தியான வசனம் ஆகியவற்றில்
வெகு சமர்த்தி.
ரொம்ப
நல்லமாதிரி என்றுதான் எல்லோரும்
சொல்கிறார்கள். »
…..........
"ரங்கப்பா !
இந்தத்
தாசிப் பெண்டுகள் என்னவிதமாய்
ஜீவிதம் பண்ணுகிறார்கள் ?தீனி
எங்ஙனம் சம்பாதிக்கிறார்கள் ? »
"ஐயனே !
கோவிலிலே
இவர்களுக்கு அளிக்கும் படி
ஒருவேளை கஞ்சிக்கும் ஆகாதே.
பிரபுக்கள்
,பெரிய
மனுஷாள் இவர்களோட இருந்து
எதோ சம்பாத்யம் ஆகிறது
.இருந்தென்ன ?
தாசிப்பெண்
மூத்தால் தவிடுதானே ?
தவிட்டுக்கு
என்ன மரியாதை அஞ்சு வருஷமோ,
பத்து
வருஷமோ வியாபாரம் ஆகும் .
அதுக்குள்
ஆஸ்தி பாஸ்தி பண்ணிக்கொண்டால்
ஆச்சு ,அதுக்குள்
பெண்ணாகப் பெற்று தலை எடுத்தால்
செளகரியப்படுவாள்.
எதுவும்
இல்லாதவள் நோயாளி மனுஷியாய்
பிட்சைக்கு வந்துவிடுகிறாள்"
"பரிதாபத்துக்குரிய
வாழ்க்கைதான்.. »
இப்படியான
உண்மையான தகவல்கள் அடங்கிய
இந் நூலை இணையதளத்தில்
காணமுடியாது.
எங்காவது
காணும் வாய்ப்பு கிடைத்தால்
தவறாது கையிலெடுங்கள்.
Monday, 28 October 2013
பரிஸ் நகரத்தார் வாழ்க்கை
வணக்கம்
இத்
தடவை உங்களுக்கு பணத்துக்காக
எதுவும் செய்யும் ஒருவரை
அறிமுகம் செய்கின்றோம்.
இச்
சிறுகதையும் உண்மையான ஒரு
சம்பவத்தை அடிப்படையாகக்
கொண்டது.
சத்தியசீலனுக்கு
சுற்றுவட்டாரத்தில் மதிப்பு
அதிகம்.
"பாரடா
சத்தியை
வந்து மூன்டு வருசத்துக்குள்ள
பேப்பரும் எடுத்து வேலையும்
செய்து ஒரு அப்பாட்மெனும்
வாங்கிட்டான்"
என்று
அங்கலாய்ப்பவர்கள்
பலர்.
"அது
சரி ,
ஆனால்
வீட்டாரைக் கவனித்தானோ என்டால்
அது ஒன்டும் செய்யல்லை.
அங்க
ஊரில இரண்டு அக்காமார்
இருக்கினம்.
அம்மா
தனிய,
அப்பா
செல் விழுந்து முள்ளியவளையில
2009ல
மோசம் போயிட்டார்.”
இப்படி
சத்தியசீலன்ட இன்னொரு பக்கத்தை
எடுத்துக் காட்டுவது மகேந்திரன்,
சத்தியசீலனின்
தூரத்து உறவினன்
"ஓ....
எங்கேயோ
ஒரு பிழை இருக்கும் தானே,
எல்லாத்தையும்
எல்லாராலயும் சரியாச்
செய்யேலாதுதானே”,
சத்தியசீலனுக்கு
வக்காலத்து வாங்குவது
பாலகிருஷ்னன்.
"எண்டாலும்
மச்சி,
பெண்
சகோதரிகளுடைய பிரச்சனைகளை
தீர்க்காம,
தனக்கு
வீடு வாசல் சம்பாரிக்கிறது
,
மனச்சாட்சி
இல்லாத
வேலை.
இத்தனைக்கும்
அதுகள்ட நகை நட்டுகளை
வித்துத்தான் இவர் வெளியில
வந்தவர்”,
மகேந்திரன்
தனது நிலைப்பாட்டை உறுதி
செய்தான்.
இவ்வாறான
கருத்து வேறுபாடுகளுக்குரிய
சத்தியசீலன் வீட்டில இருந்த
நகைநட்டுகளையெல்லாம் வித்து
ஊருக்கிளையும் கடன் பட்டு
வந்தான்.
அவனது
அதிஷ்டம் உடனே
அகதி விண்ணப்பம் ஏற்றுக்
கொள்ளப்பட்டது.
எல்லாம்
முள்ளியவளையில் குண்டடிக்குப்
பலியான அப்பா சிவசுப்பிரமணியத்தின்
அருள்.
அப்பாவை
இராணுவம் சந்தேகத்தின் பெயரில்
கைது செய்து சுட்டுக் கொன்றார்கள்,
என்னையும்
தேடி வர நான் சுவரால் அடுத்த
வீட்டுக்குப் பாய்ந்ததில்
நெஞ்சில் காயம் என்று
விண்ணப்பத்தில் எழுதினான்.
இதற்காக
நெஞ்சில் கத்தியால் தானே
தனக்குக் கீறிக் கொண்டான்.
ஆக,
அகதி
விண்ணப்பம் இலேசாகக்
கிடைக்கவில்லை.
சத்தியசீலன்
அசகாயசூரன்தான்.
பிறகென்ன
வேலை கிடைத்ததும்,
சீலன்
மாய்ந்து,
மாய்ந்து
வேலை செய்து முதலாளி மனம்
குளிர்ந்து,
ஏற்கனவே
அவனிடம் வேலை செய்து கொண்டிருந்த
சபாலிங்கத்தை வெளியேற்றிவிட்டு
சத்தியசீலனை வேலைக்கு எடுத்துக்
கொண்டான்.
நல்ல
விசயம்தான்,
ஆனால்
ஒரேயொரு சோகம் என்னவென்றால்
சத்தியசீலை அங்கு வேலைக்குச்
சேர்த்தது சபாலிங்கம்தான்.
இப்படியான
குத்துவெட்டுக்கள் இங்கு
ஏராளம்.
ஏதோ
ஒருவழியில் சத்தியசீலன் கடனோ
உடனோ பட்டு ஒரு அபபாட்மென்டும்
வாங்கிவிட்டான்.
இந்த
சமயம் பார்த்து ஐரோப்பாவுக்கு
வந்து மூன்று நான்கு
நாடுகளுக்கிடையில் ஓடித்திருந்து
விசா கிடைக்காமல் பத்து
வருசமாக அலைந்த பத்மநாதனுக்து
இறுதியாக விண்ணப்பம்
ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பத்து
வருடமாக பிரிந்திருக்கும்
மனைவியையும் நான்கு பிள்ளைகளையும்
கூப்பிடலாம்.
ஆனால்
வீடு?
அது
அடுத்த பிரச்சனை .
நான்கு
பிள்ளைகளில்
இரண்டு குமர்ப் பிள்ளைகளுக்கு
வயது பத்தொன்பதும்,
இருபதும்
ஆகிவிட்டது.
பதினெட்டுக்குட்பட்ட
பிள்ளைகளைத்தான் தந்தை
கூப்பிடமுடியும்.
இந்த
நேரத்தில் சத்தியசீலனின்
ஞாபகம் பத்மநாதனுக்கு வந்தது.
பத்மநாதன்
நேர்மையானவன்.
வாடகை
வாங்குவதில்
ஒரு பிரச்சனையும் இராது
என்பதை
நன்றாக அறிந்த சத்தியசீலன்
பத்மநாதனுக்கு சட்டரீதீயாக
உடன்படிக்கை எழுதிக் கொடுத்து,
பத்மநாதனின்
குடும்பமும் வந்து விட்டது.
ஒரு
அறையில் சத்தியசீலனும் அடுத்த
இரண்டு அறைகளில் பத்மநாதன்
குடும்பமும் இருந்தார்கள்.
முதல்
இரண்டு மூன்று நாட்கள்
பத்மநாதனின் மனைவி சத்திசீலன்
இரவு வேலையால்
களைத்து வரும்
போது,
பாவம்
தனியாக இருப்பவர் என்றிரங்கி"
சாப்பிடுங்கோ"
என்றாள்.
சத்தியசீலனும்
சந்தோசமாக சாப்பிட்டார்.
நான்காம்
ஐந்தாம் நாட்களில் யாரும்
அழைக்காமலே சத்தியசீலன்
மற்றவர்களுக்கும் வைக்காமல்
சாப்பிட்டு விட்டார்.
பத்மநாதன்
குடும்பம் அதிர்ந்துவிட்டது.
வாடகையும்
கொடுத்து சாப்பாடும் கொடுப்பதா.
இதை
எப்படித் தடுப்பது,
சங்கடமான
சமாச்சாரம் அல்லவா ?குழம்பித்
தவித்தார்கள்.
இப்படியான
,
மானக்கேடான
ஒரு
விசயம்
ஊரில் நடக்கவே நடக்காது.
பட்டினி
கிடந்தாலும் ஊர்ச்சனம்
மரியாதையைக் காப்பாற்றிக்
கொள்வார்கள்.
இதை
தொடர்ந்து அனுமதிக்க முடியாது
என நினைத்த பத்மநாதன்,
சத்தியசீலனிடம்,
குறை
நினைக்க
வேண்டாம் உங்களுக்கும்
சேர்த்துச் சமைக்கவில்லை
என்றான்.
அதற்கு
சத்தியசீலன்"
நான்
நீங்கள் சமைத்தால் சாப்பிடுவேன்,
மற்றும்படி
சாப்பாட்டுக்கெண்டு காசு
தரமாட்டேன்"
என்றான்
கூலாக.
பத்மநாதன்
குடும்பம்
சீலனுக்குப் பயந்து சமைக்காமல்,
சாப்பிடாமல்
இருக்க முடியுமா என்ன ?
பத்மநாதன்
அவசரமாக வீடு தேடுகிறார்!
காசுக்காக
எதுவும் செய்யத் தயாரென்றால்
சம்பாரிப்பது
சிரமமா?
தொடர்பு கொள்க kalyanam.cheyugal@gmail.com
தொடர்பு கொள்க kalyanam.cheyugal@gmail.com
Sunday, 13 October 2013
யாழ்ப்பாணத்தில் போர்த்துக்கல்லாரின் அட்டகாசம்
வணக்கம்
வாஸ்கொடகாமாவைத்
தொடர்ந்து இந்தியாவையும்
பின் இலங்கையையும் முற்றுகையிட்ட
போர்த்துக்கேயரின் முக்கிய
கொள்கை மதம் பரப்புவதும்
வியாபாரமுமாக இருந்தது.
முற்றிலும்
எதிர்பாராத இந்த அட்டகாசம்
இலங்கையரைச் சூறையாடியது.
அந்த
விபரங்களை பின் வந்த சந்ததியினர்
அறியாவண்ணம்அடுத்தடுத்து
வந்த ஒல்லாந்தினரும்,
ஆங்கிலேயரும்
கோயில்களையும் ,அரசாங்க
நிறுவனங்களையும் கொழுத்தி
,ஆவணங்களை
எரித்து எந்த வித வரலாற்று
அடையாளமும் இல்லாதொழித்தனர்.
ஆனால்,
அதிஷ்டவசமாக
தற்போதுள்ள சூழ்நிலையில்
எமது வரலாற்று ஆய்வாளர்கள்
மேற்குறிப்பிட்ட காலனித்துவ
நாடுகளுக்குச் சென்று அங்குள்ள
அரசாங்க ஆவண காப்பகங்களில்
பழைய 16ம்
நூற்றாண்டு ஆவணங்களை எடுத்து
ஆராய்ந்து வரலாற்று நூல்களை
எமக்கு அளித்து வருகின்றார்கள்.
இத்தகைய
அரிய பணியில் ஈடுபட்டுள்ள
கலாநிதி முருகர் குணசிங்கம்"
இலங்கையில்
தமிழர்"
என்ற
அரிய வரலாற்று நூலை ,
அவர்
தற்போது வசிக்கும் சிட்னி,
அவுஸ்திரேலியாவிலிருந்து
வெளியிட்டுள்ளார்.
எண்ணற்ற
வரலாற்றுத் தகவல்கள் அடங்கிய
இந் நூலில் ஒரு சிறு பகுதியை
இங்கு அறிமுகம் செய்கின்றோம்.
போர்த்துகேயர்
மதம் மாற்றக் கையாண்ட கொடூர
நடவடிக்கைகளே ,மக்களை
அவர்களுக்கெதிராகக் கிளர்ந்தெழச்
செய்தது.
இதன்
விளைவு ஒல்லாந்தர் வருகை!
நாம்
சென்ற வருடம் இலங்கை சென்ற
போது திருநெல்வேலிக்
கிராமத்திலிருக்கும் பூதவராயர்
ஆலயத்தில் போர்த்துக்கேய
இராணுவ வீரன் ஒருவன் அங்கிருந்த
மருத மரத்தை வெட்ட முனைந்த
போது கிளை முறிந்து விழுந்து
அவ் வீரன் விழுந்து மரணமடைந்த
வரலாற்றை அறியவும் ,அந்த
மருத மரம் இன்றும் நல்ல நிலையில்
பாதுகாக்கப்படுவதையும்
காணமுடிந்தது.
மருத
மரம் இந்துக்களுக்கு ,
அவர்களது
பிரதான தெய்வமான சிவனைக்
குறிப்பதாகும்.
இம்
மருத மரத்தின் புகைப்படத்தையும் இங்கு பிரசுரிப்பதில் பெரும்
மகிழ்ச்சி எமக்கு,
நீங்களும்
பயனடைவீர்கள் என நம்புகின்றோம்.
"1540களில்
இந்திய கிழக்குக் கரையோரங்களிலுள்ள
மீனவ சமூகத்தினரிடையை
போத்துக்கீச மிசனரிமார் தமது
கத்தோலிக்க மதப் பரம்பல்
முயற்சிகளை முன்நின்று
நடத்தினர்.அதனைத்
தொடர்ந்து வெவ்வேறான முயற்சிகள்
1543களில்
இலங்கைக் கரையோரங்களிளும்
தொடங்கப்பட்டது.
போத்துக்கீசரீனால்
கத்தோலிக்க மதத்தை இந்தியாவில்
பரப்புவதன் பொருட்டு கோவாவிற்கு
அனுப்பப்பட்ட வண .பிரான்ஸிஸ்
சேவியர் என்ற கத்தோலிக்க
பாதிரியார் மன்னாருக்கான
தன் பயணத்தை மேற்கொண்டார்.1543ல்
போத்துக்கீசருக்கும்,
சங்கிலி
மன்னனுக்குமிடையில் ஏற்பட்ட
உடன்படிக்கையின்படி சங்கிலி
மன்னன் போத்துக்கீசருக்கு
வருடந்தோறும் கப்பம் கட்டுவதற்கு
ஓப்புக் கொண்டமையின் பலவீனத்தின்
அடிப்படையிலேயே போத்துக்கீசர்
மன்னருக்கு மேற்படி பாதிரியாரைக்
கத்தோலிக்க மதப்பரப்பல்
நடவடிக்கைகளுக்கு அனுப்பி
வைத்தனர்.
600க்கும்
அதிகமான மீனவக் குடும்பத்தைச்
சேர்ந்தவர்கள் கத்தைலிக்கரால்
மதம் மாற்றப்பட்டனர்.
1544ல்
சங்கிலி மன்னன் 500
படைவீரர்களை
மன்னாருக்கு அனுப்பி கத்தோலிக்கராக
மாறிய எல்லோரையும் கொன்றான்.
இதனையே
போத்திக்கீச ஆவணங்கள் "மன்னார்
படுகொலைகள் "எனக்
குறிப்பிடுகின்றன.
மன்னாரிலுள்ள
தமிழர்கள் தமது சொந்த மதத்தைவிட்டு
அந்நிய மதமான கத்தோலிக்க
மதத்துக்கு மாறியமை வெறுமனே
மதம் சார்ந்ததாக மட்டும்
சங்கிலி மன்னனின் பார்வையில்
பட்டிருக்க முடியாது.
அந்
நடவடிக்கை தமிழ்த் தேசத்தின்
அரசியல் ,
சமூக
,
பொருளாதார
நிலைமகளின் அடித்தளத்தையே
தகர்த்து எறிந்து நாட்டை
அந்நியர் கைக்கு இட்டுச்செல்லும்
என்பதை விவேகமும்,
அற்றலும்,
நாட்டுப்பற்றும்,
மதப்பற்றும்
கொண்ட சங்கிலி மன்னனுக்கு
நிச்சயம் விளங்காமல் இருந்திருக்க
முடியாது.
பல்வேறுபட்ட
அரசியல்,சமூக,பொருளாதார,சமயக்
காரணங்களின் அடிப்படையில்
1560களில்
போத்துகீசர் படை யாழ்ப்பாணத்தை
நோக்கிப் படையெடுத்தது.
சங்கிலியின்
படைகள் தோல்வியைத் தழுவ
நேர்ந்தது.
போத்துக்கீசருக்கும்
,சஙகிலிக்கும்
இடையில் மீண்டும் உடன்படிக்கை
ஏற்பட்டது.
அவற்றில்
இங்கு முக்கியமானது யாழ்பபாண
இராச்சியத்தின் எல்லாப்
பகுதிகளிலும் கத்தோலிக்க
மதத்தைப் பரப்புவதற்கு எவ்வித
தடைகளும் இல்லாது அனுமதிக்கப்பட
வேண்டும் என்பதாகும்.
தமிழ்ப்
பிரதேசங்களில் கத்தோலிக்க
மதப் பரம்பலுக்கு மேற்படி
உடன்படிக்கை தமிழ் மக்களின்
மதமான சைவத்தின் கதவுகளை
முழுமையாகத் திறந்துவிட்டது
என்றே கொள்ளவேண்டும்.
மேலும்
இப் போர் நடவடிக்கையின்போது
போத்துக்கீசப் போர்வீரர்கள்
தமது பிரதான உணவாகச் சைவ
மக்கள் புனிதமாகக் கருதும்
பசுக்களைக் கொன்றது சைவர்களை
உலுக்கிய சம்பவமாகவும்,
இதுவரை
அறிந்திராத நிகழ்வாகவும்
இருந்தது.
அத்தோடு
சைவக் கோவில்களிலிருந்த
விலைமதிப்பற்ற பொருட்கள்
சூறையாடப்பட்டு,
அங்குள்ள
ஆவணங்கள்,
ஏனைய
யாவும் தீக்கிரையாக்கப்பட்டு
பல நூற்றுக்கணக்கான சைவக்கோவில்கள்
எரித்துச் சாம்பராக்கப்பட்டன.
மேற்கூறப்பட்ட
சம்பவம் தொடர்பாக பின்வரும்
குறிப்பு மிக முக்கியமான
ஆதாரமாக அமைகிறது."
"அரசன்
இல்லாத வேளையில்,போர்த்துக்கீசரும் அவர்களின்
வாலிபர்களும் ,
மாலுமிகளும்
மக்களின் பொருட்களை அபகரித்தும்
,
அவர்களின்
பசுக்களைக் கொன்று அந்த
மாமிசத்தில் புதிய கறிகளை
ஆக்கியும் மக்களின் வீடுகளுக்குள்
நுழைந்து அவர்களின் மனைவிமார்களையும்
புதல்விகளையும் மானபங்கப்படுத்தியும்
குற்றச் செயல்கள் புரிந்தனர்
(
சிவந்த
,உயரமான
அழகிய மணப்பெண் ,மாப்பிள்ளை
தேடும் இலங்கைத் தமிழர்கள்
கவனிக்க.
)
என்பதனால்
மக்கள் புரட்சி செய்தனர் என
மக்கள் ஓலைச்சுவடியில் தமது
அரசனுக்கு எழுதினார்கள்.
இச்
செயல்களுக்காக அவர்கள்
கண்டிக்கப்படவோ,
தண்டிக்கப்படவோ
இல்லை.
“
நன்றி "இலங்கையில் தமிழர் "கலாநிதி முருகர் குணசிங்கம்
நன்றி "இலங்கையில் தமிழர் "கலாநிதி முருகர் குணசிங்கம்
தொடர்பு கொள்க kalyanam.cheyugal@gmail.com
Subscribe to:
Posts (Atom)