திருமணத்தில் மனமொத்த வாழ்வு அமைய வேண்டும் என்பதே எல்லோர் எதிர்பார்ப்பும். இந்த எல்லைக் கோட்டை அடைய என்ன செய்யலாம்?
முதலில் எம்மை நாம் அறிந்த கொள்ள வேண்டும்.
எனது கல்வித்தகைமை எத்தகையது? எப்படிப்பட்டவருடன் நான் மகிழ்ச்சியாக வாழமுடியும்?
எனது அபிலாசைகள் என்ன? இப்படியாக ஒரு சுய விபரணக் கொத்து ஒன்றை தயாரித்துக் கொளளலாம்.
இதனை வைத்துக் கொண்டு தம்முடன் ஒத்து வாழக்கூடிய துணைவரைத் தேடிக்கொள்ளுதல் நன்று! ஆனால் தற்போது இது பெருமளவில் சாத்தியமில்லை!
ஏனெனில் நமது தமிழ்ச் சமுகம் கடக்கும் பாதை மிகச் சிக்கலானது. உலகெங்கும் பரந்து வாழ்கின்றோம். எமக்குத் தேவையான தகுதியுள்ளவர்களைத் தேடக்கூடிய நிலையில் பலரும் இருப்பதில்லை!
வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு வதிவிடப் பத்திரங்கள் இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நாட்டுக்கு வர விரும்பும் துணை கிடைக்க வேண்டும். இந் நாடுகளின்; சட்ட திட்டங்கள் இலகுவாக இருப்பதில்லை. சில நாடுகளில் குடியுரிமை பெற்றவர்கள் வேறு சில நாடுகளில் திருமணம் செய்து கொள்ள விரும்புவதில்லை.
ஆக இன்றைய திருமண உலகில் ஏகப்பட்ட சிக்கல்கள். வதிவிட பத்திரங்கள் கிடைப்பதற்கிடையில் பல ஆண்டுகள் ஓடியும் விடுகின்றன.
திருமணத்திலுள்ள சில சிக்கல்களில் முக்கியமானவையாகச் சொல்லக்கூடியவை
- குறிப்பு ஒத்துப் போதல்.
- குல ஒற்றுமை.
- பிரதேச வேறுபாடு.
- பணம் கொடுக்கல் வாங்கலில் உள்ள பிரச்சனைகள்.
- தற்போது, இருக்கப் போகும் நாடு தொடர்பான சகல சிக்கல்களும்.
இதில் சோதிடப் பொருத்தம் பார்க்க சோதிடக் குறிப்பு என்பது சரியாக நேரம் கணிக்கப்பட்டிருத்தல் வேண்டும். சரியான குறிப்பாக இருந்தாலும் அதனை ஒப்பிட்டுப் பார்த்து விவாகப் பொருத்தத்தை கணித்தல் மிகவும் சிக்கலான விடயம். பொருத்தம் சரியாகக் கணிக்கப்படடுள்ளது என்பதை யாராலும் உறுதி செய்ய முடியாது.
அதைவிட பல சந்தர்ப்பங்களில் குறிப்பு பார்க்காது நடக்கும் திருமணங்கள் வெற்றியடைவதும் பார்த்துச் செய்யும் திருமணங்கள் தோல்வியடைவதும் கண்கூடு!
குல முறைகள் பற்றி நோக்கும் போது நாம் இந்தியர்களைவிட எவ்வளவோ மேல். குல முறைகள் தொழில் அடிப்படையில் உருவானவை. இதில் ஏற்றத்தாழ்வு என்பது கேள்விக்குரியது.
இதேபோல் குறைவாகக் கருதப்படும் கிராமங்கள் அல்லது பிரதேசங்கள் பற்றி மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். இந்த நிலையில் கணிசமான மாற்றம் நிகழ்ந்து வருகின்றது என்பது மகிழ்ச்சிக்குரிய விடயம்.
இதே போல் பணம் கொடுக்கல் வாங்கலிலும் நல்ல முன்னேற்றம் உள்ளது. இத்தகைய சங்கடங்கள் தவிர்க்கப்படலாம்.
நாமாக தீர்க்க முடியாத சிக்கல், வாழும் நாடு அல்லது வாழப்போகும் நாடு!
இத்தனை சிக்கல்களுக்கு மத்தியில் நமக்கு விருப்பமான ஒருவரைக் தேர்ந்தெடுத்துக் கொள்வது எளிதானதல்ல.
சிலவேளைகளில், எந்தவிதமான பத்திரங்களுமில்லாத ஒருவரை எந்தவித பதிவுமில்லாது மணப்பதும் பின்னால் அதனால் ஏற்படும் சிக்கல்களும்... இப்படி வாழ்க்கையே போராட்டமாக அல்லல்படுவோர் ஏராளம்.
விட்டுக் கொடுக்கக் கூடியவற்றை விட்டு கொடுத்து அடையக் கூடியவற்றை அடைவதே வாழ்க்கை!
இலங்கைத் தமிழர்கள் (எல்லாப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களும்) வாழ்க்கை எனும் தட கள ஓட்டப் பந்தயத்தில் ஒலிம்பிக் வீரர்களையும் வென்றுவிடுவார்கள்! இருந்தாலும் தன்னம்பிக்கைக்கு இன்னுமொரு எடுத்துக்காட்டு தரப்படுகின்றது.
சமீபத்தில் வெளியான “செலுலாயிட” என்ற மலையாளப் படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் காட்சி கீழே தரப்பட்டுள்ளது. இப் பாடலின் கருத்து முழுமையாக விளங்காவிடினும் இனிமையாக உள்ளதுடன் அதனைப் பாடும் திருமதி விசயலக்சுமியின் தன்னம்பிக்கையே நமக்கு வழிகாட்டி. கண்களை இழந்த அவர் பெரு முயற்சியின் பின் பாடகியாக உருவாகி இன்று பெரும் புகழ் பெற்றுள்ளார்.
ஆனந்தத்துடன் அவர் பாடி நமக்களிக்கும் மகிழ்ச்சி அழகைப் பற்றிய எங்கள் வரைவிலக்கணத்தையும் மாற்றக்கூடும்.
அனுபவியுங்கள்!
---
Everyone expects a marriage life of mutual understanding. How can we reach this goal?
First of all, inner investigation is important. What are my qualifications? What am I capable of? What type of person could I live with happily? What are my ambitions? A sort of psychological self-analysis.
With the help of such data, finding an ideal partner should be easy. But, the Tamil community has trouble to do so these days because they have endured so much pain.
Our community is settled all across the globe, yet we are unable to find an ideal partner within our community.
Since the Tamil community has spread so widely, getting visa to the country of the partner is yet another obstacle to overcome. It's necessary to have PR (permanent residency) to be allowed to sponsor someone to come to the country. The regulations in these countries are quite severe. Many years can pass before a Residential visa is received.
Of course, one must choose a partner who is also willing to settle in that particular country. Obviously, Tamils living in certain foreign countries are not always willing to migrate to another country to get marry.
More obstacles are:
Horoscope
Cast
Regional differences
Financial settlements
Problems related to the country where you are going to live
For instance, to see whether the horoscopes agree, one must have an accurate chart. No one can guarantee that the charts were calculated perfectly.
Even if you have an accurate chart, it is difficult to see if it matches with someone else's chart for the purpose of marriage.
Apart, it's very interesting to note that many marriages held without any chart calculation succeeded, compared to arranged marriages.
Cast systems are based on professions. So ranking casts is quite irrelevant in Sri Lanka.
When we talk about cast systems, Sri Lanka Tamils are much better than our counterparts in India.
Furthermore, regional differences are becoming less and less important, and should not be taken into account when searching for the perfect partner any more.
In financial issues, there is considerable improvement and hope for the better.
Amidst all these problems, finding someone whom you like is not an easy matter. Life is all a matter of giving-up what can be, but taking-up what's within reach.
Sri Lanka Tamils (of all region, hill country side, eastern province and so on) are capable of doing obstacle race in life and beat Olympic athletes!
Yet another example for self-confidence is given below. It is a scene from a Malayalam film called ”celluloid”, screened recently:
Even if you can't understand the lyrics, it is so sweet. One can listen again and again. The singer – Ms. Vijayaluskhmi – is filling us with plenty of confidence. To believe a blind woman could have reached this level despite crossing so much difficulties!
She sings with joy and makes us happy. And not only that, our definition of “beauty” also might change!
Enjoy!