Saturday, 4 May 2013

19ம் நூற்றாண்டில் திருமணம்


வணக்கம்

இந்தத் திருமண வலைப்பூவில் திருமணம் சம்பந்தமான சில சுவையான தகவல்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று கருதி; 'தமிழ் தாத்தா' என்று புகழப்படும் டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்களின் 'என் சரித்திரம்' புத்தகத்திலிருந்து அக் காலக் கல்யாணம் சம்பந்தமான சில தகவல்களை கீழே தருகின்றோம்.

பெண்ணைப் பெற்றவர்களை ஏங்கவைக்கும் இத் தகவல்கள். இனி படித்துப்பாருங்கள்.


விவாகம் பண்ணிக்கொண்டு கிருகஸ்தன் என்று பெயர் வாங்கிக் கொள்வதில் அக்காலத்தில் ஒரு பெரிய கௌரவம் இருந்தது, பதினாறு வயசுடைய ஒருவன் விவாகமாகாமல் பிரமசாரியாக இருந்தால் ஏதோ பெரிய குறையுடையவனைப் போல
அக்காலத்தவர்எண்ணினார்கள்.

என் தகப்பனார் பல மாதங்களாகப் பெண் தேடினார்; பல
ஜாதகங்களைப் பார்த்தார். ஒன்றும் பொருத்தமாக இல்லை. ஒருவாறு விவாகச் செலவுக்கு வேண்டிய பொருளைச் சேகரித்து வைத்துக் கொண்ட அவருக்கு அப்போது ‘பெண் கிடைக்கவில்லையே’ என்ற சிந்தனை அதிகமாயிற்று.
எங்கெங்கோ தேடிய பிறகு கடைசியில் எங்கள் ஊருக்குப் பக்கத்தில் உள்ள மாளாபுரத்தில் ஒரு பெண்ணைப் பார்த்து ஜாதகம் பொருந்துவதை உணர்ந்து நிச்சயம் செய்து என் தந்தையார் எங்களுக்குத் தெரிவித்தார்.
விவாகச் செலவுக்கு இருநூறு ரூபாயும், கூறைச் சிற்றாடை
முதலியவற்றிற்காக முப்பத்தைந்து ரூபாயும், நகைக்காக ரூபாய் நூற்றைம்பதும் என் தந்தையார் கணபதி ஐயரிடம் அளிப்பதாக வாக்களித்தார். மேலும் கிருகப்பிரவேசம் முதலியவற்றிற்குரிய செலவுக்கு வேறு பணம் வேண்டியிருந்தது. தம் கையிலிருந்த பணத்தையும் ஆகவேண்டிய செலவையும் கணக்கிட்டுப் பார்த்தபோது பின்னும் நூற்றைம்பது ரூபாய் இருந்தால்
கஷ்டமில்லாமல் இருக்குமென்று என் தந்தையாருக்குத் தோற்றியது.

கிராமத்தாருடைய ஒற்றுமையும் உபகார சிந்தையும் கல்யாணத்தைப் போன்ற விசேஷ காலங்களில் நன்றாக வெளிப்படும். பணச் செலவு இந்தக் காலத்திற்போல அவ்வளவு அதிகம் இராது. இக்காலத்திற் செலவுகளுக்குப் புதிய புதிய துறைகள் ஏற்பட்டிருக்கின்றன. உணவு வகைகளில் இப்போது
நடைபெறும் செலவைக் கொண்டு அக்காலத்திலும் கல்யாணங்கள் பலவற்றை நடத்தி விடலாம். கிராமங்களில் விளையும் காய்கறிகளும், பழவகைகளும் விருந்துக்கு அக்காலத்தில் உபயோகப்பட்டன. இப்போதோ, இங்கிலீஷ் பெயரால் வழங்கும் காய்கறிகளும், ஹிந்துஸ்தானிப் பெயரால் வழங்கும் பக்ஷ¤
வகைகளும் மேல் நாட்டிலிருந்து தகரப் பெட்டிகளில் அடைத்து வரும் பழங்களும் கல்யாண விருந்துக்கு இன்றியமையாத பொருள்களாகி விட்டன.

மற்ற விஷயங்களில் பல தேச ஒற்றுமை தெரியாவிட்டாலும் பணம் செலவிட்டு வாங்கும் பொருள்களில் பல நாடுகளும் சம்பந்தப்படுகின்றன.
ஊர்வலம் நடத்துவதில் எத்தனை செலவு! மோட்டார் வாகனத்தையே புஷ்ப வாகனமாக மாற்றி விடுகின்றனர்! சில மணி நேரம் புறத் தோற்றத்தை மாத்திரம் தரும் அந்த வாகனத்திற்கு எவ்வளவு அலங்காரங்கள்! எவ்வளவு பேருடைய உழைப்பு! கோவில்களில் உத்ஸவ மூர்த்திகளுக்குச் செய்யும் புஷ்பாலங்காரம் கல்யாணத்திற் செய்யப்படுகின்றது! அதற்கு மேலும் செய்கிறார்கள்.
இவ்வளவு செலவு செய்து நடைபெறும் கல்யாணத்தில் விருந்தினர்கள் வருவதும் போவதும் வெறும் சம்பிரதாயமாகி விட்டன. கல்யாணம் எல்லாம் நிறைவேறிய பிறகு கணக்குப் பார்க்கும்போது தான் வயிறு பகீரென்கிறது.

சந்தோஷத்தை மேலும் மேலும் உண்டாக்க வேண்டிய கல்யாணமானது சில இடங்களில் கண்ணை மூடிக் கொண்டு செய்யும் பணச் செலவு காரணமாகக் கடனையும் அதனால் துன்பங்களையும் விளைவிக்கின்றது. கல்யாணத்தாற் கஷ்டத்தை விலைக்கு வாங்கிக் கொண்ட குடும்பங்கள் இத்தமிழ் நாட்டில் எவ்வளவோ இருக்கின்றன.
அக்காலத்தில் சிலவகையான செலவுகள் குறைந்திருந்தன. முதல்நாள் நிச்சயதாம்பூலம் வழங்கப்பெறும். முதல்நாள் இரவு கல்யாணம் சொல்வதும் மாப்பிள்ளையை அழைப்பதும் அவை காரணமாக நேரும் செலவுகளும் பெரும்பாலும் இல்லை. கல்யாணத்திலும் பந்தற் செலவு, பூரி, தக்ஷணை, மேளம் முதலிய செலவுகளை பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் பாதிப்பாதி ஏற்றுக்கொள்வார்கள். நான்காம் நாள் நடைபெறும் கிராமப் பிரதக்ஷணச் செலவு முழுவதும் பிள்ளை வீட்டாருடையது.
காலையில் காப்பி என்பது அக்காலத்தினர் அறியாதது. துவரம் பருப்புப் பொங்கலும் பரங்கிக்காய்க் குழம்புமே காலை ஆகாரம்; கருவடாம், அப்பளம், வற்றல்கள் இவை அந்த ஆகாரத்துக்குரிய வியஞ்சனங்கள். சிலர் பழையதும் உண்பதுண்டு.
பிற்பகலில் இடைவேளைச் சிற்றுண்டி உண்ணும் வழக்கமும் அக்காலத்தில் இல்லை. குழந்தைகள் பசித்தால் அன்னம் உண்பார்கள். மத்தியான விருந்துக்குப் பின் இராத்திரிப் போஜனந்தான்.
அப்பளம், ஆமவடை, போளி என்பவைகளே அக் காலத்துப் பக்ஷணங்கள்.

கல்யாணம் நடைபெறும் நான்கு நாட்களிலும் ஒவ்வொரு வேளையிலும் போஜனத்திற்கு ஊரிலுள்ள எல்லோரையும் அழைப்பார்கள். யாவரும் குறித்த நேரத்தில் வந்துவிடுவார்கள.
எனக்கு அப்போது பதினான்காம் பிராயம் நடந்து வந்தது. கல்யாணப் பெண்ணின் பிராயம் எட்டு. கல்யாணப் பெண்ணைக் கல்யாணத்திற்கு முன்பு பிள்ளை பார்ப்பதென்ற வழக்கம் அக்காலத்தில் பெரும்பாலும் இல்லை.

எல்லாம் பெரியவர்களே பார்த்துத் தீர்மானம் செய்வார்கள்.

நான் கல்யாணப்பெண்ணை அதற்குமுன் சாதாரணமாகப் பார்த்திருந்தேனேயன்றிப் பழகியதில்லை பேசியதுமில்லை. எங்கள் இருவருக்கும் கல்யாணம் ஒரு விநோத நிகழ்ச்சியாகத்தான் தோன்றியது. எங்களுக்கு உண்டான சந்தோஷத்தை விட அதிகமான சந்தோஷம் எங்களை ஆட்டி வைத்து வேடிக்கை பார்த்த விருந்தினர்களுக்கு உண்டாயிற்று.
(நன்றி “என் சரித்திரம்” இந்த எளிய தமிழில் எழுதப்பட்ட அரிய பல தகவல் அடங்கிய புத்தகத்தை நீங்கள் பதிவு செய்து கொள்ளலாம்.)


ஆக அந்தக் காலத்தில் பெண் வீட்டாருக்கு ஏகப்பட்ட மரியாதை! அதிலும் பெண்களுக்கு மரியாதை என்று சொல்லலாம். எப்படி இந்த நிலை மாறியது?

யாருக்கும் தெரிந்திருந்தால் கூறுங்கள்.


நன்றி 

---


TRANSLATION of an extract of an article written by famous author Dr. U, V, Saminathaiyar in his autobiography entitled En Sarithiram” about marriages in 19th century (our comments are in italics).


Getting married is considered something honourable these days. So if a boy is not married by the age of 16, it was considered as something was wrong with that boy. I was in this case. So my father began to look for a girl for me. He looked in many villages and finally found a girl at Maalapuram. Before that, he was worried about financing my marriage.

Finally the girl he found at Maalapuram was fixed as the horoscopes were agreeing. So he informed me that the marriage was fixed.

My father promised to give 200 rupees for the wedding expenses, 35 rupees for the wedding saree and the other dresses, and 150 rupees for jewellery. Further, for other expenses my father thought that he needed around 250 rupees. Relatives and village people participated in the wedding organisation, and expenses were much less than nowadays (NB: This he has written in 1898).

The amount of money spend now for one wedding would have been sufficient to celebrate many weddings in the past (e.g. Around 1850). Those days, vegetables and fruits grown up in the village were enough for weddings. Now, everything is brought from north India and foreign countries. Even if there is no unity between countries, in this issue there is unity.

Cars are decorated lavishly, by spending a lot of money. Decorations and make-up are done as if it were for the deities of Temples! But, invitees are not genuinely attached to their function. They are just coming as a formality. After the wedding when you see the sum of money spend, it's really shocking !

Marriages should bring happiness. But instead, it gives a lot of mental torture and sadness here in Tamil nadu. There are so many people with unbearable loans after organising too luxury weddings!

Back in the old days, certain expenses were nearly avoided, such as NICHCHAYATHAMBOOLAM (making the marriage fixed) and the lunch or dinner given to invitees! Expenses like short-eats and decoration were shared by both parties. Fourth day celebrations were totally under the responsibility of the boy's family.

Morning coffee was unknown those days. Toor dahl pongal and pumpkin curry were the breakfast. Some ate even “Palayathu”.

Evening tiffin was not known those days. After lunch, there was only dinner. Weddings were four days celebrations, and all were invited for all three meals during these four days.

I was fourteen years old, and the girl was EIGHT years old. Seeing each other before the wedding was not in our customs. I have seen her, but never talked to her. For both of us, these celebrations were just amusing. Besides, I am sure the elder people who organised the wedding enjoyed it much more than we did.

Those days, women were considered much more precious than nowadays. How did the situation change so much?
If you have an idea, please tell us.