வணக்கம்
காதலித்த குற்றத்துக்காக தற்கொலைக்குத் தள்ளப்பட்ட இளவரசனை மிகுந்த துயரத்துடன் நினைவு கூருகின்றோம்.
இருவர் காதலித்தால் அது அந்தக் கிராமத்தின் பிரச்சனை, மாவட்டத்தின் பிரச்சனை, மாநிலத்தின் பிரச்சனை , பின்னர் அரசியல் கட்சிகளின் பிரச்சனை இறுதியில் தேசியப் பிரச்சனை! இனியென்ன, திரைப்படம் எடுப்பார்கள், சிலர் பல கோடிகளை கேடிக்கொள்வார்கள் இந்த(இந்திய) நாடு எப்போது திருந்தப் போகின்றது?
இந்தச் சிறுகதை உங்கள் சிந்தனைக்கு!
என்
பெயர் பாஞ்சாலி,
1986ல்
இலங்கையை விட்டு என் மூன்று
வயது மகன் ஜனகனையும் கூட்டிக்
கொண்டு வெளிநாட்டுக்கு
வெளிக்கிடும்போது எதிர்காலத்தைப்
பற்றி பெரிதாக ஏதும் திட்டங்கள்
இல்லை.
அதுமட்டுமல்ல
எங்கே போகப் போகின்றேன் என்று
நிச்சயமாகத் தெரியாது.
நான்
நினைக்கும் நாட்டுக்குப்
போய்ச் சேருவேனோ என்பதும்
தெரியாது.
தினமும்
நூற்றுக் கணக்கான மக்கள்
இலங்கையை விட்டு வெளியேறிய
காலம் அது.
செய்த
நல்ல உத்தியோகத்தையும் விட்டு
விட்டு,கண்ணை
மூடிக்கொண்டு காட்டுக்குப்
புறப்பட்டதுபோல்.
எனது
பெயர் என்னை எப்போதும்
பயமுறுத்தியது,
ஒரு
துரதிஷ்டமான பெயர்.
ஐவருக்கு
மனைவி,(
மகா
பாரதத்தில்)
துச்சாதனனால்
சபையில் துகிலுரியப்பட்டாள்,
என்ன
பாடு பட்டிருப்பாள் ஒரு பெண் !
இருந்தாலும்
கால நிர்ப்பந்தத்தின்படி
வெளியேறினேன்.
அப்போது
கிழக்கு பெர்லினுக்கு விசா
தேவையில்லை .
அங்கு
வந்ததும் மேற்கு பெர்லினுக்கு
இரயில் ஏறுவது
என்பது திட்டம் .
நான்
வரும்போது என்னுடன் இருபது
இளைஞர்கள் வந்தனர்,
நான்
மட்டும்தான் கையில் குழந்தையுடன்.
மாலை
மங்குகின்றது,
குழந்தைக்கு
சாப்பாடு எதுவும் கையில்
இல்லை ,
இப்போது
நினைத்துப் பார்த்தால் பயமாக
உள்ளது ,
குழந்தையும்
பசித்து அழவில்லை.
நல்லவேளை,
இரண்டாவது
இரயில் நிலையத்திலேயே
மேற்கு பெர்லின் பொலிசார்
இரயிலில் உள்ளட்டனர்,
எங்கள்
அனைவரையும் அழைத்துச் சென்று
ஒரு ஜீப்பில் ஏற்றினார்கள்,
ஆங்கிலம்
தெரிந்ததால் எம்மை அகதி
முகாமுக்கு அழைத்துச்
செல்கின்றார்கள் எனத் தெரிந்து
கொண்டேன்.
பொலிஸ்
நிலையத்தில் தந்த தேநீரினதும்
பிஸ்கட்டினதும் சுவை ...இந்த
உலகில் எந்தத் தேநீருக்கும்,பிஸ்கட்டுக்கும்
இல்லை.
இத்தனைக்கும்
என்
குழந்தை அழவுமில்லை ஆர்ப்பாட்டம்
செய்யவுமில்லை.
பெர்லின்
முகாமில் இரண்டு மாதங்கள்
இருந்து பின் பிரான்சுக்கு
வந்தோம்.
அலை
மோதும் கடலில் துடுப்பெடுத்து
படகோட்டுவதற்கு ஒப்பானது
ஒரு புதிய நாட்டில் நிலையூன்றுவது.
எட்டு
வருடங்கள் வரை நிரந்தர விஸா
கிடைக்காததால் ,எந்த
வித அரசாங்க உதவியும்
கிடைக்கவில்லை.
மொழி
தெரியாததால் வேலை எடுக்க
முடியவில்லை.இருந்த
ஆங்கில அறிவுடன் கிடைத்த
வேலையும்,
சொற்ப
பணமும் அவ்வப்போது சாப்பிட
மட்டுமே போதுமானதாக இருந்தது.
விடாமுயற்சி,
தன்னம்பிக்கை
என்பவற்றின் உதவியுடன்
படிப்படியாக மொழியும் கற்று,
பணமும்
சம்பாரித்து ,
பிள்ளைகளையும்
நல்ல வழியில்
வழி நடத்தி வந்து விட்டேன்.
ஐம்பது
அல்லது அறுபது வருடங்களுக்கு
முன்னர் எழுதப்பட்ட பாடல்கள்
பல என் வாழ்க்கைத் துணை.
சலித்து
விழுந்த காலங்களில்
என்னை நிமிர்த்திய சில
பாடல்களில் ஒன்று.
ஜனகன் எனது மகன் இன்று உலகின் பிரபலமான கார்
கம்பெனி ஒன்றில் பொறியியலாளர்.
ஆனால்
படித்துக் கொண்டிருக்கும்
போதே ஒரு ஐரோப்பியப் பெண்ணுடன்
காதல்.
பிறகென்ன
தன்னை மறந்தான் தன் சுற்றம்
மறந்தான் கதைதான்.
இருந்தாலும்
தொடர்பை துண்டிக்காது
வரவேற்று,உபசரித்து....
வழக்கமான
பெற்ற பாசம் காரணமல்ல,
மாறாக
மகன் பிற்காலத்தில் கண்டிப்பாக
அம்மாவின் சகிப்புத்தன்மையை
உணர்வான் என்ற நம்பிக்கைதான்.
காலஓட்டத்தில்
ஒவ்வொரு வார இறுதியிலும்"வரட்டோ,வரட்டோ
"என்று
கேட்கும்போது விளங்கவில்லை
என்ன திடீர் அத்தறையென்று
.
ஏன்
எனில் ஆரம்பத்தில்
தொடர்பை
முற்றாக துண்டிக்கும்
முயற்சியும்
இருந்தது.
தமிழ்
சிற்றுண்டிகள் ஜனகனுக்கு
மிகவும் பிடிக்கும்,ஆகையால்
அம்மா "வரட்டோ வரட்டோ"
என்று வந்தான் .
இருந்தாலும்
தப்பும் தவறுமாக அம்மா கதைக்கும்
பிரஞ்சும்,
அவளுடைய
தோற்றமும் ஜனகனுக்கு அவனது
வெள்ளைக் காதலியின் முன்
அவமானமாக இருந்தது.பிழைகளைத்
திருத்திக் கொண்டேயிருப்பான்.
கவலையும்
சங்கடமும் தான்.
திடீரென்று
ஒரு நாள் சாப்பாட்டு மேசையில்
சாப்பிட்டுக் கொண்டிருக்கும்
போது"
அம்மம்மா
எத்தன
வயதில
செத்தவ"
என்றான்.
திடுக்கிட்டுப்
போனேன்.
இருந்தாலும்
கவனியாதது போல் இருந்துவிட்டேன்,
மீண்டும்
கேட்டான்.
என்
அம்மா எப்படி ஆரோக்கியமாக
எழுபத்தைந்து
வயதுவரையும்
வாழ்ந்தார் என்பதை அமைதியாக
விளக்கினேன்.
கொடூரமான
சிந்தனைகள் வரும்போது
எத்தனை அழகான முகமும் எப்படி
பயங்கரமாக மாறுகின்றது ,
என்பதை
அன்று கண்டு கொண்டேன்.
காதல்
ஓர்அழகான
மன
ஓட்டம்,
சுயநலமற்றது,
ஆனால்
இத்தனை கொடுரமானதா ?நம்பமுடியவில்லை.
மனக்காயத்துக்கு
மருந்தூட்டிய ஒரு பாடல்.