வணக்கம்
இம்முறை
ஒரு சிறுகதை,
வெளிநாடுகளில்
வாழும் இலங்கைத் தமிழர்கள்
படும் சில துயரங்களை....
அறிந்து
கொள்ளுங்கள்!
வசந்தன்
பரிசின்
முக்கியமான பகுதியொன்றின்
பாதாள இரயில் நிலையத்திலிருந்து
வெளியே வந்தான். அது
அதிகாலைப் பொழுது ,
நேரம்
5.00 மணி.கடும்
குளிர் ,மைனஸ்
10 டிகிரி.
அவன்
உடுத்தியிருந்த உடைகளைத்
தனியே போட்டு நிறுத்தால் அது
மட்டும் 10 கிலோ
வரும். அவனது
கண்கள் மட்டும் வெளியே
தெரிந்தன.அந்தக்
கண்கள் ,தான்
வேலை செய்ய வேண்டிய காரியாலயத்தைத்
தேடின.
நீங்கள்
நினைப்பது போல் வசந்தன் அந்த
அதிகாலை நேரத்தில் காரியாலயத்தில்
வேலை செய்ய வரவில்லை.
மாறாக
அங்கு துப்பரவாக்கும் வேலை
செய்தான். ஊரில்
ஒரு
பட்டதாரி ஆசிரியர்!
உயிர்ப்
பாதுகாப்பு தேடி, வாழும்
வழி தேடி ,ஓடி
வந்தான். படித்தால்
மதிப்பு, மரியாதை....
இங்கு
அப்படியெல்லாம் எதுவும்
கிடையாது.
ஒருமுறை
ஒரு பிரஞ்சுப் பெண் கையெழுத்துப்
போடத் தெரியுமா ? என்று
கேட்டாள்.
அம்மா
கைம்பெண், நான்கு
தங்கைகள், இரண்டு
தம்பிகள் …. தனக்குத்
தரப்பட்ட சீருடையை அணிந்தான்.
மூன்று
மணித்தியாலங்கள் பம்பரமாய்ச்
சுழன்ற
பின் வேர்வையைத் துடைத்தபடி
வெளியில் வந்தவனைக் கமலநாதன்
மறித்தான்.
"ஸவா
? ( ça va- சுகமா
? பிரஞ்சு
மொழியில் )மச்சான்,
எப்பிடிப்
போகுது லைவ்" என்றான்,
"ஸவா, ஸவா , என்னடா செய்யிறது,
எல்லாம்
பிரச்சனைதான், உழைக்கிறது
ஒண்டுக்கும் போதாதெடா மச்சி.
வீட்டில
தங்கச்சிக்கு கலியாணம் ஒண்டு
சரிவருதாம்,
எவ்வளவு
தரேலும்
எண்டு
கேக்கினம், நான்
டெலிபோனே எடுக்கேல்ல.”
"உது
எங்களெல்லாருக்கும் உள்ள
ஆக்கினைதான்.
ஒரு
வேலை இருக்குது ,கொஞ்சம்
கஸ்டம் செய்வியோ தெரியாது"
"சொல்லடா,
கஸ்டமெண்டாலும்
பரவாயில்ல.”
"ரெஸ்ட்டோரண்ட்
வேலை நாள் முழுக்க இறச்சி
வெட்ட வேணும் நீ சைவம் ஊரில
வைரவருக்கு பூசை செய்ற நீங்கள்.
அதுமட்டுமல்ல
இறச்சி வாட்டவும் வேணும்,
நாறும்
எங்களுக்கே வயித்தப்
பிரட்டும்.”
"பரவாயில்ல
, தங்கச்சியின்ர
பிரச்சனையை முடிச்சிடலாம்,
எல்லாரையும்
நான் தான்ரா பாக்கோணும்.”
"ஆறு
மணித்தியால வேலை, அடிக்கடி
கீழ போய் குளிர் சாம்பரிலிருந்து(
Chambre அறை
froid )-
இறைச்சி
சாமான்கள் தூக்கிக் கொண்டரனும்
,உண்மையில
பேக் கஸ்டமெடா.”
" அதுக்கென்ன,நான்
செய்வேனெடா"
"சரி;
பின்ன
வாடா , இப்பவே
போவோம், பாசை
தெரியாட்டாலும் பரவாயில்ல,
கொஞ்ச
நாள்ள பிடிச்சிடுவாய்.”
மாலை
6 மணி
,வேலை
முடிந்து வெளியில் வந்த
வசந்தனுக்கு, அப்பதான்
பசிக்கத்தொடஙமகியது.
புது
வேலை, பழக்கமில்லை,
வயிற்றைக்குமட்டியது.
என்றாலும்
சாப்பிட முதல், வீட்டுக்கு
ஒரு கால் எடுப்பம்,என்று
எண்ணினான்.
" அம்மா
நான் இன்ரைக்கு இன்னுமொரு
வேலை எடுத்திருக்கிறன்
;சீட்டுப்
பிடிச்சு தங்கச்சிக்கு
சீதனக்காசு சேத்துப் போடலாம்,
வந்த
சம்பந்தத்தை விடாதிங்கோ.”
ரூம்ல
போய்ச் சாப்பிட்டிட்டு
7மணிக்கு
பக்கத்தில ஒரு 2மணித்தியால
இரவு வேலையை முடிச்சுக் கொண்டு
தமிழ்க் கடையில இடியப்ப பக்கட்
வாங்கும் போது, "குறிஞ்சா
இலை இருக்கோ “,ஒரு
குரல் கேட்டது.
"குறிஞ்சா
இலை வரல்லை,,யாழ்ப்பாணத்தில
குறிஞ்சா இலை பறிக்க ஆள்
பிடிக்கேலா , கன
தரம் விளம்பரம் போட்டும்
பாத்தாச்சாம்.”
Contact us: kalyanam.cheyugal@blogspot.com
Summary
The
Story “Foreign money” explains the
difficulties ,of a young Tamil
man coming to a
European
country. In spite of these difficulties, Tamil men and women work
hard and support their families in Sri Lanka. But
unfortunately Tamils in Sri Lanka do not understand these problems.